"அருகாமை ஆளுமை" என்ற நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் முகநூலில் கண்ணில்பட்டது. அருகாமை என்றால் என்ன ?
அவர்கள் என்ன நினைத்து "அருகாமை ஆளுமை" எனப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால், அருகாமை எனும் சொல் பொதுவாக அருகில் அல்லது பக்கத்தில் எனும் பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது.
அது முற்றிலும் தவறானது. அருகு என்பது அண்மை எனப் பொருள்படும். அதனால் அருகாமை என்பது 'அருகு' என்ற சொல்லுக்கு எதிரான பொருளைத்தான் தரும். அதாவது, 'செய்யாமை' என்ற சொல், 'செய்' என்ற சொல் என்ன பொருள் தருமோ அதற்கு எதிரான பொருளைத் தருவது போல. 'கலங்காமை' என்பது 'கலங்கு' என்பதற்கு எதிரான பொருளைத்தான் தருவதுபோல.
அதனால் , இனி "இந்த வீட்டுமனை சென்னைக்கு அருகாமையில் உள்ளது : வாங்கிவிட்டீர்களா? " என்பது மாதிரியான விளம்பரங்களைப் பார்த்தால்
சட்டை செய்யாமை நன்று !!
விளக்கம் அருமை...
ReplyDelete