அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு பெட்னா (FETNA-The Federation of Tamil Sangams in North America) தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது திருவிழா போல கொண்டாட்ட மனநிலையைத் தரும் ஒரு நிகழ்வு.
அந்த வகையில், கடந்த ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
அதுபோல, இந்த ஆண்டும் அட்லாண்டா மாநகரில் கோலாகலமாக திட்டமிட்டபடி நடந்திருக்க வேண்டிய பேரவை விழா கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், பேரவையின் தொன்மையைத் தொடரும் விதத்தில் இந்த ஆண்டு பேரவை விழா இணைய வழி விழாவாக நடக்க இருக்கிறது. ஆமாம், வரும் ஜூலை 3,4 & 5 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த விழாவை உலகத் தமிழர்கள் உடனடியாக கண்டுகளிக்கும் வகையில் நேரலையையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கவிதை, இசை, கலந்துரையாடல் எனப் பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்தவிழாவில் தமிழ் நெஞ்சங்கள் தவறாமல்
கலந்துகொண்டு சிறப்பியுங்கள்.

விழா சிறக்க வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி !
Deleteவிழா, மிகச் சிறப்பாக நடந்திட என் மனப்பூர்வ வாழ்த்துகள்.
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி.
முடிந்தால் நேரலையில் இணைந்து தமிழ் மழையில் நனையுங்கள் !!
Deleteவிழா சிறப்புற வாழ்த்துக்கள், வெல்க தமிழ்.
ReplyDeleteநன்றி !
Delete