"...தமிழில் நம்பிக்கை இல்லாத, தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாத, ஏன் தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பது கண்டு இதயம் நடுங்குகிறது.." என கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் குறித்து தனது ஆதங்கத்தையும் அதிர்ச்சியையும் கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.
உண்மையில், நமது தாய்மொழி நம் கண் முன்னால் இன்று அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து நாம் ஒவ்வொரும் அச்சப்படத்தான் வேண்டும்.
அதே செவ்வியில் கவிஞர் , “இனி எந்த மொழி தொழில்நுட்பத்தின் தோள்களில் ஏறி தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலைக்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியைத் தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் 3 மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங்கிலம் - சீனம் - ஜப்பான். இந்த 3 இனங்களுமே தொழில்நுட்பத்துக்கு தங்கள் மொழியைக் கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்த தகுதி இருக்கிறது. தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்”. என்றும் சொல்லி இருக்கிறார்.
இதை நாம் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், அறிவுசார் புலத்தில் இதுபற்றிய தீவிர உரையாடல்களோ ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இல்லை. காரணம் பலர் இங்கே மொழியை தங்களை அதிகார மையத்தை நோக்கி நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
பலருக்கு மத்திய அரசின் ஆசி இல்லாமல் பிராந்திய மொழியால் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் எனும் எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். வையத் தலைமை கொள்! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.
இது தொடர்பாக தமிழ்ச்சரம்.காம்- வுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
கவிஞரின் செவ்வி இணைப்பு.
வருத்தப்பட வேண்டிய விசயம் அல்ல... தொடர்ந்து செயல்பட வேண்டிய செயல் வேண்டும்...
ReplyDeleteசெய்வோம்.
Delete