"வனநாயகன்: மலேசிய நாட்கள்" குறித்து எனது மதிப்பிற்குரிய தமிழ்
ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துகளை இங்கே நண்பர்களுடன் பகிர்கிறேன்.
//
வனநாயகன் புதினம் ஒரேமூச்சில் படித்தேன்.
என்ன அழகாக விறுவிறுப்பாக,சொல்லாட்சிச் சிறப்புடன் உள்ளது! முன்னரே கதை எழுதிப் பழக்கம் உண்டா?
இதழ்களில் எழுதியது உண்டா? முன்னர் எழுதிய.பங்களா கொட்டாவை விட எவ்வளவு சிறப்பாக உள்ளது இது.
உங்கள் சொந்தக்கதையா ? முழுவதும் கற்பனையாகத் தெரியவில்லை.பெரிய சிக்கலான அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இல்லையென்றலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
.... காட்சிகளை வருணிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும் தேர்ச்சி பளிச்சிடுகிறது.
பெண் கதாபாத்திரங்களின் பெயர் சுருக்கம் சற்று குழப்பமடையவைக்கிறது......
மற்றபடி, பெண்களை எழுத்தால் காட்சிப் படுத்துதல் மிக அருமை; தேர்ச்சி தெரிகிறது. சிங் பாத்திரம் நன்று.பெரிய இடங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள்,ஒழுக்கக்கேடு கள் அம்பலமாகியுள்ளன. மகிழ்ச்சி பாராட்டுகள் !
//
வனநாயகன் வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் (December 1, 2016) கடந்தும் படைப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டு பேசப்படுவது மகிழ்ச்சியோடு உற்சாகத்தையும் தருகிறது.
No comments:
Post a Comment