Tuesday, December 29, 2020

தமிழ்ச்சமூகம் - கொடுத்ததும் பெற்றதும்

தொல்தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.  சிறந்த தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி என்றெல்லாம் தனித்தனியாக எழுதத் தோன்றவில்லை.கடந்த நூற்றாண்டின் தமிழ் மொழியின் எழுச்சியில் மேலெழுந்து வந்த தமிழ் ஆளுமைகளின்  மறைவு என்பது என்றும் வருத்தமளிக்கும் ஒன்று.





நமது தமிழ்ச்சிந்தனை பரப்பில் செல்வாக்கைச் செலுத்திய இத்தகைய ஆளுமைகளின் தொடர்ச்சியான இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்று. அந்தத் தலைமுறை ஆட்களுக்கு நமது தமிழ்ச்சமூகம் கொடுத்ததை விடப் பெற்றதே மிக அதிகம் என்பதே இங்கிருக்கும் கசப்பான உண்மை.

இனி, மறைவுக்குப் பின் புகழ் பேசுவதை விடுத்து , எஞ்சியுள்ளவர்களையேனும் போற்றுவோம். அடுத்த தொ.பாக்களையும், அப்துல் ஜப்பார்களையும் நம்மில் தேடுவோம். இல்லையெனில் அவர்கள்  உருவாகி வரும் சூழலைத் தருவது தமிழுக்கு அவசரத்தேவையாக இருக்கிறது.

#கொடுத்ததும்_பெற்றதும்

4 comments:

  1. அவசரத் தேவை மட்டுமல்ல, நிரந்தரத் தேவையும்கூட.

    ReplyDelete
  2. Replies
    1. தமிழுக்கு வாய்ப்போ, முன்னுரிமையோ எங்கும், எதிலும் தரப்பாடாத இந்தநேரத்தில் அதைச் சாத்தியப்படுத்த அரசுகள் முன்வரவேண்டும்.

      Delete