வந்தியத் தேவன் மூலமாக ஓலை முதலில் தஞ்சைக்கு போய்விட்டு பிறகு பழையாறை செல்வது போல ஜெஸி நாவல் கிண்டிலில் pen2publish-இல் வெளியாகிவிட்டது. ஆனால், அந்தச் செய்தி இன்னமும் கிண்டில் அன்லிமிடெட் (kindle unlimited) வாசகர்களுக்கு போய் சேரவில்லை போல. அதற்கு சுமார் 1 வாரம் ஆகும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அதன்பின் பலர் வாசித்து கருத்துகளைப் பகிர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இதுவரை வாய்வழிச்செய்தியாக கேள்விப்பட்டவர்கள் மட்டும் வாசித்துக் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படிச் சமீபத்தில் வந்த ஒரு அமேசான் கருத்து ...
இப்படி எங்கிருந்தெல்லாமோ வரும் உற்சாகம் நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே !!
நண்பருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteதொடர்ந்து உற்சாகப்படுத்தும் தங்களுக்கு வாழ்த்துகள் !
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteநன்றி, தங்களுடைய தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள் !
Delete