ஜெஸி(எ)ஜெஸிகா கிங் நாவல் குறித்த கருத்துகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
//ஜெசிகா கிங் என்கிற தலைப்பைப் பார்த்ததும், இந்தக் கதை ஜெசிகா என்கிற அமெரிக்கப் பெண்ணைப் பற்றிய கதை என்பதை எந்த சஸ்பென்சும் இல்லாமல் உடனே தெரிந்து விடுகிறது. இதில் வரும் தமிழ்க் கதாநாயகன் ஒரு பெண் குழந்தையோடு வசிக்கிறான். அவன் வாழ்வில் நுழைந்த ஜெஸி பற்றிய நெடுங்கதை இது.
இந்த நாவலைப் படிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக தங்கு தடையின்றி வழுக்கிச் செல்கிறது. கதாசிரியர் எழுத்துக் கலையில் பயிற்சி பெற்றவர் என்பதும் எப்படி ஒரு அத்தியாயத்தை வாசிப்பவர்களுக்கு சலிப்பை கொடுக்காமல் சுவாரசியமாக நகர்த்தவேண்டும் என்கிற உத்தி தெரிந்தவர் என்பதும் தெரிகிறது. அத்தியாயங்களை ஆரம்பிப்பது, நகர்த்துவது, முடிப்பது போன்றவை தெளிந்த நீரோட்டம் போல இருக்கிறது. தனித் தனியாக வாசிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் இனிமை. உதாரணத்திற்கு அவன் பெர்மினா வீட்டிற்குச் சென்று ஆருடம் பார்க்கும் காட்சிகள் மிகுந்த அழகு.
கதையில் வெவ்வேறு குணாதியங்களைக் கொண்ட கதா பாத்திரங்கள் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பறவைகள்,பசுமைப் பாதை, அஷோசியேஷன் சண்டைகள்... இவையெல்லாம் அமெரிக்க வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன. அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்.
//
இதைப் பகிர்ந்த அந்த நண்பருக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்
நன்றி நண்பரே
ReplyDelete