புத்தகங்களுக்கு 'பளிச்'சென பின்னட்டைக் குறிப்பு இருப்பது அவசியம். அது வாசகர்களைக் கவரும் ஒரு மார்கெட்டிங் யுத்தி என்பதைத் தாண்டி சுமார் நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒரு படைப்பை வாசித்து அதற்கு அழகான சுருக்கம் அல்லது 'blurb' எழுதுவது என்பது ஒரு கலை.
அந்தக் கலையை ஊக்குவிக்குவிக்கும் வகையிலும் எனது ஜெஸி நாவலைப் பரந்த வாசகர் பரப்புக்கு எடுத்து செல்லும் முயற்சியாகவும் ஒரு சின்ன போட்டி.
அமேசானில் கிடைக்கும் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' நாவலை கிண்டலில் வாசித்து 60 சொற்களில் இருந்து 120 சொற்களுக்கு மிகாமல் சிறப்பாக blurb எழுதி அனுப்பும் அன்பர்களுக்கு பரிசு கொடுப்போம். முதல் பரிசு ரூ.1000 மற்றும் 10 பேருக்கு ரூ.150 (தொகை அமேசான் வவுச்சராக) தரலாம்.
விதிமுறை- போட்டியில் கலந்து கொள்பவர்கள் கிண்டிலில் புத்தகத்தை வாசித்து அங்கு தங்கள் கருத்துகளைப் (ரேட்டிங்ஸ் & ரிவியூ) பகிர்ந்திருக்க வேண்டும். அதை உறுதி செய்த பின் சுருக்கத்தை aarurbass AT gmail.com க்கு அனுப்ப வேண்டும். போட்டிக்கான கடைசி நாள்- அக்டோபர் 10 (இந்திய நேரம்).
இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது. ‘அட்டை’காசமாக எழுத வாழ்த்துகள் !
போட்டி நடுவர்களின் முடிவே இறுதியானது. புத்தகத்தை வாசிக்க அமேசான் தள முகவரியை கீழே தருகிறேன். இதை மற்றவர்களிடமும் பகிருங்கள்,
No comments:
Post a Comment