"வனநாயகன் உங்கள் உண்மை சம்பவமா? நாவலை முழுவதும் வாசிச்சேன் பக்கங்கள் போனதே தெரியவில்லை" என உள்பெட்டியில் நேற்று ஒரு வாசக நண்பர் கேட்டிருந்தார். கூடவே வனநாயகன் தாக்கம் தனக்கு ஞாயிறு முழுவதும் இருந்தது, கதை அமைப்பு மற்றும் எழுத்து சேர்ப்பு வாசிக்க
அருமையாக இருந்தது என சிலாகித்தார்.
அருமையாக இருந்தது என சிலாகித்தார்.
எனது "வனநாயகன்- மலேசிய நாட்கள்" 2016 டிசம்பரில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது. வெளியான கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக பல கடிதங்கள், முகநூல் பதிவுகள்
வழியாக வனநாயனுக்கு வாசகக நண்பர்கள் அளிக்கும் வரவேற்பு
உற்சாகமளிக்கிறது. இப்படி என்னை எழுத்தால் அடையாளம் கண்டு பாசத்தோடு நெருங்கி கை குலுக்கும் எல்லா அன்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாசகன் ஒரு படைப்பை வாசிக்கும் போதும் வாசித்த பின்பும் ஏதோ ஒரு புள்ளியிலேனும் தன்னை படைப்பில் அடையாளம் காணும் போது அந்தப் படைப்பு வெற்றி பெற்றதாக சொல்வார்கள். அந்த வகையில் வனநாயகன் வாசகர்களின் நெஞ்சைக் கவர்ந்த வெற்றிப் படைப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து உற்சாகமளித்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !!
புத்தகத்தை இணையத்தில்- கிழக்கு பதிப்பகம் வழியாக:
வாழ்த்துகள் நண்பரே
ReplyDelete