அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்.., அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து பெரியவர்கள் தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.
அப்படி வாய்பேச்சில் கதைகதையாக சொல்பவர்களில் சொற்பமானவர்களே அதை எழுதி ஆவணப்படுத்துவார்கள். அந்தவகையில் ஒரு புத்தகம் எனது கைக்கு வந்திருக்கிறது. 1960 களில் வளர்ந்த அவர்
தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் சுயசரிதை போல் எழுதியிருக்கிறார். பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
கல்யாணமாம் கல்யாணம் எனும் தலைப்பில் அந்த நாளையத் திருமண ஏற்பாடுகள், கலாட்டாக்கள், சடங்குகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் ஆச்சர்யப்படும் பல விசயங்கள் இருக்கின்றன. புத்தகத்தில் இருந்து...
"..அப்போதெல்லாம் கல்யாணத்துக்கு போகிறோம் என நினைத்தாலே வடை,பாயசம், அப்பளம் கூடிய சாப்பாடுதான் நினைவுக்கு வரும். அப்போது மாப்பிளைக்கு பெண் கிடைப்பது அரிது. அப்படியே பெண் கிடைத்தாலும் ஜாதக பொருத்தம் பார்த்து, பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்குவதற்கு
நடையாய் நடந்து காலும் வீங்கியது , செருப்பும் தேய்ந்தது என்பார்கள்.
பெண் வீட்டார் எப்போதும் முறுக்கோடு இருப்பார்கள்.ஏட்டிக்குப் போட்டியாகவே பேசுவார்கள். மாப்பிளை வீட்டார் பெண்ணுக்கு என்ன நகைபோடுவார்கள் என பேச்சுவார்த்தை நடக்கும். எவ்வளவு பணம் கொடுப்பர் எனக் கேட்பதும் உண்டு. பேசிப்பேசி பெண் வீட்டாரின் சம்மதம் வாங்குவது பெரும்பாடாக இருக்கும்..."
திருமணத்திற்கு பெண்கள் தேடும் விசயத்தில் நடுவில் கொஞ்சநாள் நிலைமை மாறி இப்போது திரும்பவும் 1960களுக்கு திரும்புகிறோம் என நினைக்கிறேன்.

No comments:
Post a Comment