Thursday, February 13, 2020

தமிழ் வலைத்திரட்டி

தமிழில் சமூக வலைதளம் தாண்டிய எழுத்துகளைச் சரியாக முறையில்
திரட்டி ஒருங்கிணைக்கும் தேவை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  அதன் ஒரு முயற்சியாக பிரத்தியோக இணையதளம் ஒன்றை இதற்கென
நிறுவ இருக்கிறோம். 

இதற்காக கடந்த 4-5 மாதங்களாக ஒத்த ஆர்வமுள்ள அன்பர்கள் சிலருடன்
நான் இணைந்து பயணிக்கிறேன். பொதுவாக,  முகநூல் தாண்டிய எழுத்துகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வலைப்பூக்கள் எனும் பிளாக்-களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து,
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள். தென் அமெரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற தெரிந்த பிரபல நாடுகளைத் தாண்டி வியட்நாம், அந்தமான் போன்ற குட்டி குட்டி நாடுகளில் இருந்தெல்லாம் தமிழில் பதிவுகளை எழுதுகிறார்கள். அதுவும் காமோ சோமா என்றில்லாமல் பலர் நல்ல உள்ளடக்கத்தோடு எழுதி 'அடடே' எனச் சொல்ல வைக்கிறார்கள். நான் ஆச்சர்யப்பட்ட இன்னொரு விசயம் பதிவுகளின் நேர்த்தி (எல்லா பதிவுகளும் அல்ல). ஒரு பயணக்குறிப்பாக இருந்தாலும் கூட பொருத்தமான படங்களை, காணொலிகளை மிகச் சரியான இடத்தில் பொருத்தி, பத்தி பிரித்து தேவைப்பட்டால் வண்ண பாண்டுகளைப் பயன்படுத்தி
மிகவும் அழகாக எழுதுகிறார்கள். இப்படி  எழுதுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதும் ஆச்சர்யமில்லை.

இதுபோன்ற தளங்களில் நான் கண்ட இன்னோரு சிறப்பு. 'வெரைட்டி' எனும் பல்சுவை. "செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் என்ன ? " "திருநீற்றின் மகிமை" போன்ற ஆன்மிக பிரியர்களுக்கான பதிவுகள். "அருமையான தம் பிரியாணி வீட்டில் செய்வது எப்படி ?" என்பது மாதிரியான சமையல் குறிப்புகள். "ஈழப்போர் - இறுதி நாட்களின் இரகசியங்கள் படங்களோடு" என்பது மாதிரியான வெகுஜன ஊடகங்களில் கிடைக்காத தகவல்கள். கூடவே "பங்குச்சந்தையில் முதலீடு  செய்ய சரியான நேரம் எது ?" என்பது மாதிரியான பல வணிக செய்திகள். அதுபோல,  அரசியல், தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பல பதிவுகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே. "போர்ப்ஸ் பட்டியலில் நடிகை சாய்பல்லவி".  "அஞ்சலியை சுவரொட்டியில் பார்த்தப் பொழுதே பரவசம் தொற்றிக் கொண்டது" (பார்த்தவுடன் !!? :) என்பது மாதிரியான இளமை துள்ளல்களையும் பார்க்க முடிகிறது.  

தளம் குறித்த மேலதிக விவரங்களை விரைவில் பகிர்கிறேன்.






7 comments:

  1. Replies
    1. உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி, உலகம் முழுவதும் உள்ள பதிவர் நண்பர்களுக்கும் இது மிகுந்த உற்சாக மூட்டுவதாக இருக்கும் என நம்புகிறேன்.

      Delete
  2. பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வலைதிரட்டி மூலமாக எனது தளத்துக்குள் சென்றேன்... பணிகள் மேலும் சிறக்கட்டும்.... (எங்க போனாலும் திண்டுக்கல் நண்பர் முதல் ஆளாக அவரது வருகையை உறுதி செய்து விடுகிறாரே...)

    ReplyDelete
    Replies
    1. வலைதிரட்டி வழியாக மேலும் பல புதிய வாசகர்களுக்கு உங்கள் எழுத்து அறிமுகமாகி நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள் !!.

      Delete
    2. திண்டுக்கல் இல்லாத இணைய எழுத்தா என்ன ? :)

      Delete
  3. மிக்க மகிழ்ச்சி நண்பரே...
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. கில்லரஜி வருகைக்கு நன்றி, நீங்கள் எழுதுபவர்களுக்கெல்லாம் தருவீர்கள் ! புது எனர்ஜி !. :)

      வெல்க.

      Delete