கடந்த மாதம் (ஜனவரி-18, சனிக்கிழமை) மத்திய ஃபிளாரிடா முத்தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்வில் எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" புதினம் (நாவல்), திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுடைய சிறப்பான அறிமுகத்துடன் வெளியிடப்பட்டது.
தாம்பா தமிழ் ஸ்நேகம் தேவா அன்பு வெளியிட, அர்லாண்டா தமிழ்ச்சங்க முன்னோடிகளான மருத்துவர் திரு சம்பத் சண்முகம், வெண்- வீராசாமி பெற்றுக்கொண்டனர்.
வாழ்த்திப் பேசிய மருத்துவர் சம்பத், தனது கல்லூரி நாட்களில் கோவையில் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். அடுத்துப்
பேசிய வெண், அர்லாண்டா தமிழ்ச்சங்க 30 ஆண்டு வரலாற்றில் இது முதல் நூல் வெளியீடு என்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்வை நண்பர் விஜயசெந்தில் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
பேசிய வெண், அர்லாண்டா தமிழ்ச்சங்க 30 ஆண்டு வரலாற்றில் இது முதல் நூல் வெளியீடு என்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்வை நண்பர் விஜயசெந்தில் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
இறுதியாக, நான் அனைவருக்கும் நன்றி சொல்லி பேசினேன். நிகழ்ச்சி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாட்டிக்கொண்டதால் என்னால் சவகாசமாக பேச இயலவில்லை. அதிகபட்சம் 2-3 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன்.
ஆனால், யோசித்து வைத்திருந்த விசயங்களைப் பிசிரில்லாமல் பேசினேன் என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால், யோசித்து வைத்திருந்த விசயங்களைப் பிசிரில்லாமல் பேசினேன் என்றுதான் நினைக்கிறேன்.
இந்தச் சிறிய விழா பார்வையாளர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் தான், மேடையை விட்டு இறங்கியபின் பலர் தனிப்பட்ட முறையில் சந்தித்து சுய அறிமுகம் செய்து கொண்டு அன்பு பாராட்டிச் சென்றனர் என கற்பிதம் செய்துகொள்கிறேன்.
இப்படிச் சந்திக்கும் முகம் அறியா தமிழ் நெஞ்சங்களின் கண்களில் கசியும் அன்பு நம்மை மேலும் உற்சாகப்படுத்தி இயங்கச் செய்கிறது.
#இர்மா_அந்தஆறுநாட்கள்
#இர்மா_அந்தஆறுநாட்கள்
வாழ்த்துகள் நண்பா...
ReplyDelete- கில்லர்ஜி
வாழ்த்துகளுக்கு நன்றிங்க !
Deleteநான் பலமுறை சரியான தகவல்கள் கொடுத்தும் எனது தளத்தை அங்கீகரிக்க மறுக்கிறது நண்பரே... தமிழ்ச்சரம்
ReplyDeleteவணக்கம் நண்பரே. மேலே சொன்ன அன்றே பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்டதே. இது பழைய நிலைதகவல் என நினைக்கிறேன். இன்னமும் தொடர்ந்தால் தொடர்புகொள்ளுங்கள். நன்றி
ReplyDelete