இலங்கை வானொலி புகழ் பி. எச். அப்துல் ஹமீதின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன்.
நேர்காணல் கண்ட 'பட்டிமன்ற புகழ்' பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஹமீதுவிடம்
எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் திரை நட்சத்திர அனுபவங்களைத் தாண்டி, அவரிடம் பொது வெளியில் இன்றைய தமிழ், மொழியின் எதிர்காலம் போன்ற சில நல்ல விசயங்களையும் அபூர்வமாக உரையாடினார்கள்.
இன்றைய இளைய தலைமுறைக்குப் புரிய வேண்டும். அவர்களைக் கவர வேண்டும் என்றால் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து, ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பேசவேண்டும் எனும் எழுதப்படாத சட்டத்தைத் தமிழக ஊடகங்கள் கையில் எடுத்து பல்லாண்டுகள் ஆகின்றன. அது குறித்து பதில் அளித்த ஹமீது, ஊடகங்களின் இந்தத் தவறான போக்கை "மயக்கம்" என்றார். என்னைக் கேட்டால், அதை அவர் "மடத்தனம்" என உடைத்துச் சொல்லி இருக்கவேண்டும்.
சரி, பெரும் நிறுவனங்களின் ஊடகங்கள் தான் அப்படி என்றால் சாமானியர்களின் கடைசி போக்கிடமான இணையமும் அந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் சீரழிவு என்பதைத் தவிர வேறென்ன.
அந்த நேர்காணலின் முதல் பகுதியின் இணைப்பு
No comments:
Post a Comment