நண்பருக்கு தனது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் நீண்ட நாள் தள்ளி போய் கொண்டே இருந்தது. பொறுமையிழந்த அவரோ தனது தகுதிக்கு ஏற்ற இன்னொரு வேலையைத் தேடிக் கொண்டார்.
அதைக் கேள்விப்பட்ட பழைய நிறுவனமோ 'போகாதீங்க.. பதவி உயர்வை இப்போ தர்றோம்..' என்றார்களாம். ஆனால், நண்பரோ காலந்தாழ்த்தி இறுதியில் வரும் பதவி உயர்வு தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார்.
புதிதாக கிடைத்த வாய்ப்பு என்பது கொஞ்சம் சவாலாக இருந்தாலும் அதைச் செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு, பழைய நிறுவனத்தில் 'TOO LATE...' எனச் சொல்லிவிட்டார்.
இதை நண்பர் ஆழ்மனதின் வழிகாட்டுதலில், பெரிதாக யோசிக்காமல் செய்திருக்கலாம்.
ஆனால், அது பற்றி கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தபோது எனக்குத் தோன்றியது ;
காலம் கடந்து கிடைக்கிற ஒன்றை வேண்டாம் என மறுப்பதன் மூலம் அதைச் சார்ந்து இருக்கின்றவர்களைத் தண்டிப்பதாக நமது மனது உள்ளூர ஆறுதல் கொள்வதே காரணம் என நினைக்கிறேன்.
மேற்கண்ட பதிவை முகநூலில் பகிர்ந்தபோது பல அன்பர்கள் 'தன்மானம் ' என்பதும் இன்னொரு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
காலம் கடந்து கிடைக்கிற ஒன்றை வேண்டாம் என மறுப்பதன் மூலம் அதைச் சார்ந்து இருக்கின்றவர்களைத் தண்டிப்பதாக நமது மனது உள்ளூர ஆறுதல் கொள்வதே காரணம் என நினைக்கிறேன்.//
ReplyDeleteஇது சரிதான். ஆனால் பலருக்கும் தன்மானம்/சுயமரியாதை என்ற அளவில் பார்க்கும் போது அதுவும் நல்ல திறமை உள்ளவர்களுக்கு அந்த வலி இருக்கும் என்றே தோன்றுகிறது. அதுவும் நல்ல திறமைசாலிகளுக்குக் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் போவதும் அவர்களை விடக் குறைவான திறமை உள்ளவர்கள் மேலே போகும் போது இந்த வலி கொஞ்சம் ரணமாகும்.
வேலையை மாற்றும் போது அப்ப கொடுக்கிறேன் என்ற நிறுவனம் அதை முன்னரே செய்திருக்கலாமே! அது ஏதோ அவரை தாஜா செய்வது போல் இருக்கிறது. அவர் திறமையை உணர்ந்து என்பது போல் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால் முன்னரே மரியாதை நிமித்தம் கொடுத்திருப்பாங்க. நம் புத்திசாலித்தனம் மதிக்கப்பட வேண்டும் என்று திறமைசாலிகள் நினைப்பார்கள்.
இப்படி ஆகும் போது ஒரு சிலருக்கு மனச்சோர்வும் மனநிலை பாதிப்பும் கூட ஏற்படுகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றும். எல்லோரும் ஞானிகள் அல்லவே!!!!!
இங்கு சுயமரியாதைக்கும், Ego (நான் எனும் அகங்காரம்?! இறுமாப்பு?) விற்கும் வித்தியாசம் மயிரிழைதான்!
நல்ல கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்
கீதா
பகட்டாக தெரியும் விசயங்களுக்கு பின்னால் இப்படி பல கோணங்கள் இருக்கின்றன. தங்களுடைய பின்னூட்டத்துக்கு நன்றி !
Delete