முதலில் அனைவருக்கும் 2015 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
USAல் இன்னும் நள்ளிரவு நெருங்கவில்லை, எனக்கு இந்த வருட கொண்டாட்டம் CNNன் ஆண்டர்சன் கூப்பர் மற்றும் கேத்தி க்ரிஃபினுடன் தான்.
புத்தாண்டை வரவேற்க்கும் இந்த நேரத்தில் 2014ல் நடந்த சில நல்ல நிகழுவுகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.
2014ல் நான் பெரும்பாலான இலக்குகளை தொட்டிருக்கிறேன்.
1 . என்னுடைய பல வருடத்திய கவிதைகள் தொகுப்பட்டு முதல் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில் " வெளியிடப்பட்டது. கவிதை நூல்
2. சிறகுகள் அறக்கட்டளை தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இதை தாண்டி வாரதிற்க்கு ஒரு முறை நீச்சல், குறைந்த பட்சம் மாதத்திற்கு இரண்டு பதிவுகள் (Blog Post) என அதுவும் சரியான இலக்கில். ஹே!!
என்னோடு சேர்ந்து நீங்களும் 2014யை கொஞ்சம் ரீவைன்ட் பண்ணிப் பாருங்களேன்.
2015 க்கு கொஞ்சம் வருவோம்.
ஒவ்வொருவரும் புத்தாண்டை வேவ்வேறு காரணங்கலுக்காக
எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சிலருக்கு திருமணம் உறுதியாகிருக்கலாம்
அல்லது புதிதாக குழந்தையின் வரவை எதிர்பார்த்திருக்கலாம் இப்படி பல.
எதுவும் குறிப்டும் படியாக இல்லாவிடிலும் புது வருடத்தில் தொடங்கும் எல்லா நிகழ்வுகளும் நல்லதாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்பிருக்கும்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
சிலர் புத்தாண்டு தீர்மானங்களில் சிக்கி கொள்கின்றனர். இந்த வருடம் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பேன், ஜிம்மில் சேர்ந்து உடல் எடையைக் குறைப்பேன் எனப் பல தீர்மானங்கள் எடுப்பார்கள். அதில் எந்த அளவு வெற்றி அடைகிறார்கள் எனபது ஐயமே.
ஒரு ஆய்வின் படி, இந்த தீர்மானங்களில் பல, சில நாட்களையோ அல்லது கொஞ்சம் அதிகமாக வாரங்களையோ தாண்டுவதில்லை.
என்னை பொருத்தவரை, சோம்பலின்றி மூச்சை பிடித்து ஒரு சில மாதங்கள் கடந்து விட்டால் நீங்கள் அதை வெற்றி பாதையில் முடிக்க பெரிதாக தடை ஏதும் இருக்காது.
எடுத்த காரியம் மேல், உங்களுக்கு தேவை அர்ப்பணிப்பு (Dedication) அன்றி வேறொன்றும் இல்லை.
2015 திட்டங்கள் என்னனு கேட்கிறது காதில் விழுகிறது. நான் கொஞ்சமா சொல்லிட்டு நிறையா செய்ற ஆளுமில்ல, நிறையா சொல்லிட்டு கொஞ்சமா செய்ற ஆளுமில்ல. ஆனா, சொல்லாமலே செய்ற ஆளுங்கோ! :)
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்"
..
என பாரசக்தியை வேண்டி புது வருடத்தை உற்சாகாமாய் தொடங்குவோம். நல் வாழ்த்துக்கள்!!
மின்னஞ்சல் தொடர்புக்கு:
aarurbass@gmail.com
இந்தியாவில் என் நூல்களை வாங்க:Click
முகநூல் (Facebook):
https://www.facebook.com/ejvpbook
No comments:
Post a Comment