நாம் நினைத்தது நடக்காத போது அல்லது விரும்பியது கிடைக்காத போது
பெரும்பாலும் நாம் அதற்குப் புறச்சூழலைக் காரணம் காட்டி நம்மை நாமே சுருக்கிக்கொள்கிறோம். இல்லை அதுகுறித்து தொடர்ச்சியாக புலம்பத் தொடங்குகிறோம்.
அந்த எதிர்மறையான புலம்பல் ஆளாளுக்கு வேறு வேறாக இருக்கிறது.
பலருக்கு பொருளாதாரம். சிலருக்கு கல்வி, எனக்குப் பின்புலம் இல்லை குடும்பச்சூழல் என ஏதோ ஒன்று. ஆனால், வரலாற்றைப் பின் நோக்கினால் இது போன்ற தடைகளை, ஏன் இதைவிட மோசமான சிக்கல்களைத் தாண்டி தன்னெழுச்சியாக கடந்து வந்தவர்களே அதிகம் வென்றிருக்கிறார்கள்.
அதுபோல படையெடுப்பு, போர், உள்நாட்டுக்கலவரம் என அத்தியாவசியங்கள் கிடைக்காமல் பல இலட்சம் பேர் செத்துமடிந்த யுத்த பூமியிலிருந்து குறிஞ்சிகள் பூக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் 40 ஆண்டுகளுக்கு முன் கிழக்காசிய நாடான கம்போடியாவில் நடந்த மனதை உலுக்கும் அழுத்தமான உண்மைக் கதை ஒன்றைச் சமீபத்தில் ஆங்கிலத்தில் வாசிக்க நேர்ந்தது. புத்தகத்தின் பெயர் "First They killed my father " (முதலில் அவர்கள் என் அப்பாவைக் கொன்றார்கள்) by Loung Ung (லொங் ஒக்)
1975 ல் கம்போடியாவைக் கெமர் ரூஜ் எனும் இனக்குழு அதிகாரத்தைக் கைப்பற்றிய போது நடந்த மோசமான இனப்படுகொலையில் 20 லட்சம்
மக்கள் செத்தொழிந்திருக்கிறார்கள். அந்த இனப்படுகொலையில் தனது பெற்றோர்களை இழந்து பல இன்னல்களில் இருந்துத் தப்பித்த ஒரு 10 வயது சிறுமியின் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் உண்மை படைப்பு இது.
புத்தகத்தை எழுதிய லொங் ஒக் தான் அந்தச் சிறுமி, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர் போருக்கு முன் தனது குடும்பத்தோடு
கம்போடியாவில் ஒரு சராசரியான சீனக் குடும்பமாகதான் இருந்திருக்கிறது. அன்பான பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், அப்பாவுக்கு அரசாங்க வேலை, நல்ல உணவு, தரமான கல்வி, நண்பர்கள் என வறுமை இல்லாத சூழல்.
ஆனால், போரின்போது அகதிகளாகும் அவருடையக் குடும்பம் சந்திக்கும் அவலங்கள் மனதை உலுக்குகின்றன. சமூகத்தில் பெரும்பான்மையினர்
கொத்தடிமைகளாக்கப்படுகிறார்கள். மக்கள் நகரங்களில் இருந்து கிராமங்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள். அங்கே வயல்வெளிகளில்
சிறியவர், பெரியவர் என வயதுவித்தியாசமின்றி நாள் முழுக்க இடுப்பொடியும் வேலை, அரைவயிறு உணவு, மோசமான வாழ்விடம் ஒத்துழைக்க மறுப்பவர்கள் மாயமாகின்றனர். இளம்பெண்கள் கெமர் ரூஜ் வீரர்களால் நள்ளிரவில் இழுத்துச் செல்லப்படுவது எனத் தொடர்ந்தார் போலப் பல கொடுமைகள் அடுக்கடுக்காக அரங்கேறுகிறன.
அது போர் உக்கிரம் அடையும் சமயத்தில் ராணுவத்திற்குக் கட்டாய ஆள்சேர்ப்பது, சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து படையில் சேர்ப்பது எனப் போகிறது. அடிமைகளுக்கு அரைவயிறு, கால் வயிறு என்றிருந்த உணவு ஒரு கட்டத்தில் நிறுத்தப்படுகிறது. பசியின் உச்சத்தில் மக்கள் கையில் கிடைத்த விலங்குகளை அடித்து சாப்பிடுகிறார்கள். ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இந்த அவலம் தொடர்கிறது. ஒருநாள் நள்ளிரவில் வீரர்களால் அழைத்துச் செல்ப்படும் சிறுமியின் தந்தை வீடு திரும்பவில்லை. பின் ஆளுக்கொரு பக்கமாக குடும்பம் சிதறுகிறது. இலக்கில்லாமல் சுற்றித் திரிந்த சிறுமி கடைசியாக ஆயுதப்பயிற்சி பள்ளி ஒன்றில் கரைசேர்கிறாள். சிறுமியின் குடும்பத்துக்கு இறுதியில் என்ன நேர்ந்தது என்பதைப் புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தகத்தில் கொடுமையின் உச்சத்துக்கு ஒரு சின்ன உதாரணம். பசியின் கொடுமை தாங்காத ஒருவன் ஒருநாள் தெருநாயை அடித்து தின்று
விடுகிறான். அதைத் தெரிந்துகொண்ட புரட்சிப்படை வீரர்கள் அவனைத்
தேடி வந்து சுட்டுக்கொன்று விடுகி. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். அவன் நாய் மாமிசத்தை மற்ற அடிமைகளுடன் பகிர்ந்து உண்ணவில்லையாம். இப்படிப் பல அக்கிரமங்கள், இன்னல்கள். கம்போடிய மக்கள் இந்தக் கொடுமைகளைச் சகித்திருந்த போது உலகம் என்ன செய்து கொண்டிருந்தது என வாசிக்கும் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.
போருக்குபின்னான கம்போடியாவில் இருந்து தப்பித்து தாய்லாந்து வழியாக அமேரிக்காவிற்கு அகதியாக வந்த லொங் ஒக் இன்று ஒரு தொழிலதிபர், எழுத்தாளர் என வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவருடைய இந்தப் புத்தகம் ஏஞ்செலீனா ஜூலியின் இயக்கத்தில் அதேப் பெயரில் நெட்பிலக்சில் திரைப்படமாகி இருக்கிறது (படம் இன்னமும் பார்க்கவில்லை).
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அதை முழுமையாக சுதந்திரமாக வாழ முழு உரிமையும் இருக்கிறது. அந்த உரிமையை வலுக்கட்டாயமாக பறிப்பது அநியாயம். அதே சமயத்தில் விலை மதிப்பற்ற இந்த மனித வாழ்வை வீணடிக்காமல் பூரணப்படுத்தி அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வது நம் கைகளில் இருக்கிறது என்பதே லொங் ஒக்கின் புத்தகம் சொல்லும் கருத்தாக நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள் இல்லை நெட்பிளக்சில் படத்தைப் பாருங்கள்.
Name: First They killed my father
Author : Loung Ung
Genre: Memoir
Publisher: HarperCollins
Pages: 238 p.
ISBN: 0-06-093138-8
Amazon : https://www.amazon.com/First-They-Killed-Father-Remembers-ebook/dp/B0046ZRG0M
நன்றி- படங்கள் இணையம்.
************

வாழ்க்கையில் மிக மிக கஷ்டப்படுபவர்களில் ஒரு சிலர் உழைப்பால் உச்சத்தை அடைகிறார்கள் அவர்கள் அடைந்த கஷ்டத்தை ஒப்பிட்டு அதை விட வேறு என்ன கஷ்டங்கள் வந்து விடப் போகிறது என்று நினைத்தே பல முயற்சிகளில் இறங்கி இறுதியில் நல்ல நிலைமையை அடைகிறார்கள் .லொங் ஒக் என்பவரும் இப்படித்தான் முன்னேறி இருக்க வேண்டும்
ReplyDeleteஉண்மை மதுரை. இதுபோல வீழ்பவர்கள் தான் வீறுகொண்டு எழுந்து பலருக்கு உத்வேகம் தருகிறார்கள்.
Delete