Friday, August 26, 2022

"ஜிபே" Google Pay

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்' என்பது போல புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கைகொள்வதில் இந்தியாவை அடித்துக்கொள்ள வேறு ஆட்களே இல்லை என்றே நினைக்கிறேன். அந்த விதத்தில் நான் இந்தமுறை கவனித்த விசயம் "ஜிபே(Google Pay)" . 



ஜிபே-ஐ தமிழ்நாடு என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவே  தத்து எடுத்திருக்கிறது போல. சாலையோர பழக்கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஒட்டல் வரை எல்லோரும் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் முன்புபோல  பணத்துக்காக ஏடிஎம்களைத் தேடி ஓடவேண்டிதில்லை.

ஆனால் என்ன, கிரிடிக் கார்ட், பே பால் (PayPal) என இப்படி எவ்வளவுதான்  புதிதாக வந்தாலும் எனக்கு பணத்தைக் கண்ணால் பார்த்து, கைகளில் தொட்டு செலவு செய்தால்தான்  திருப்தி. அப்போதுதான் செலவு என் கட்டுக்குள் ஒழுங்காக இருக்கும் என சிலர் சொல்வதும் லேசாக காதில் விழுந்தது. 

2 comments:

  1. உண்மை. கைகளால் தொட்டு எண்ணிக் கொடுப்பதுதான் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம், இந்தச் செலவு தேவைதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே !

      Delete