ஓலா-வில் ஓடிபி (OTP) எண் சொல்வதில் தாமதம். அதனால், பயணம் செய்தவர் ஓலா கார் டிரைவரால் அடித்துக் கொலை என்றொரு செய்தியைச் சமீபத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எதற்கெல்லாம் கோபப்படுவது, கொலை வரை போவது என்ற வரைமுறையெல்லாம் போய்விட்டது.
நானும் ஊரில் ஓலா (Ola cabs) பயன்படுத்தி இருக்கிறேன். அதுவும் இந்தமுறை ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை என்ற அளவில் அதிகமாக பயன்படுத்தினேன். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். நண்பர் சுரேஷ் கண்ணன் கூட தான் நீண்ட காலமாக ஷோ்ஆட்டோவில் பயணிப்பவன் எனச் சொல்லி தன்னுடைய அனுபவங்களைத் தொடர்ச்சியாக முகநூலில் பதிவிட்டு வருகிறார்.
என்னுடைய ஓலா அனுபவங்கள் ஊரில் கலவையாக இருந்தன. ஒரு ஓட்டுநர் இரவு 11 மணிக்கு தான் தூங்காமல் இருக்க எனச் சொல்லி தனது சொந்த கதை பேசியபடி ஓட்டி வழியை கோட்டை விட்டுவிட்டார். அன்று வழிதவறி ஊரெல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்கு வரும் போது நள்ளிரவாகிவிட்டது. இத்தனைக்கும் உதவிக்கு கூகுள் இருந்தும் இந்த இலட்சணம். நேரமும், பணமும் விரயம்.
சிலர் வண்டிக்கு பெட்டோல் போடனும்ங்க, சில்லறை மாத்தனும்ங்க என நமது அவசரம் தெரியாமல் வழியில் நிறுத்தி இம்சித்தார்கள். ஒருவர் நான் அவசரமாக ஒன்னுக்கு போகனும்ங்க என வண்டியை ஒரு புதரோரம் ஓரங்கட்டி நிறுத்தி விட்டு என்னை அம்போ விட்டுவிட்டு போய்விட்டார்.
ஒரு நண்பரிடம் ஓலா ஆட்டோ 3 பேருக்குதான். நான்காவதாக சுண்டெலி போல ஒரு பிள்ளை ஏறினாலும் கூடுதல் கட்டணம் 50 ரூபாய் என கராராக வசூலித்து விட்டார் என என்னிடம் வந்து புலம்பினார்.
(குறிப்பு - எல்லா ஓலா ஓட்டுநர்களையும் குற்றம் சொல்வது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல)
வணக்கம் நலமா ?
ReplyDeleteநான் கில்லர்ஜி பல காலங்களாக எனது பதிவு தங்களது தமிழ்ச்சரத்தில் இணைந்து வந்து இருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களாக இணையவில்லை எவ்வளவு முயன்றும் இணைத்த பிறகு இரண்டு தினங்கள் கழித்து இணையும் என்று தகவல் தருவதோடு சரி.
எனது தளத்தை தங்களது தமிழ்ச்சரத்தில் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எனது பெயர்
KILLERGEE
எனது தளம்
www.killergee.blogspot.com
எனது மின்னஞ்சல்
sivappukanneer@gmail.com
எனது அலைபேசி
+918220750853
அன்புடன்
கில்லர்ஜி
தேவகோட்டை
தங்களது பயண அனுபவம் நன்று.
ReplyDeleteஓலா, ஊபரையும் சேத்துக்கோங்க. பிரச்சனைகள் ரொம்பவே. நான் எப்போதாவதுதான் பயன்படுத்துவதுண்டு. அதில் நீங்கள் கடைசியில் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம் அது புக் பண்ணும் போதே சொல்லப்பட்டது. அது போல ஓலா கார், ஊபர் காரிலும் கூட ஆள் எண்ணிக்கை இப்ப இருக்கு போல....
ReplyDeleteதினமும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் புலம்பல்கள் நிறைய.
கீதா
தற்போது தமிழ்ச்சரத்தில் வருகிறது நன்றி நண்பரே.
ReplyDeleteநல்லது நண்பரே !
Delete