முதலில் அனைவருக்கும் 2015 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
USAல் இன்னும் நள்ளிரவு நெருங்கவில்லை, எனக்கு இந்த வருட கொண்டாட்டம் CNNன் ஆண்டர்சன் கூப்பர் மற்றும் கேத்தி க்ரிஃபினுடன் தான்.
புத்தாண்டை வரவேற்க்கும் இந்த நேரத்தில் 2014ல் நடந்த சில நல்ல நிகழுவுகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.
2014ல் நான் பெரும்பாலான இலக்குகளை தொட்டிருக்கிறேன்.
1 . என்னுடைய பல வருடத்திய கவிதைகள் தொகுப்பட்டு முதல் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில் " வெளியிடப்பட்டது. கவிதை நூல்
2. சிறகுகள் அறக்கட்டளை தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இதை தாண்டி வாரதிற்க்கு ஒரு முறை நீச்சல், குறைந்த பட்சம் மாதத்திற்கு இரண்டு பதிவுகள் (Blog Post) என அதுவும் சரியான இலக்கில். ஹே!!
என்னோடு சேர்ந்து நீங்களும் 2014யை கொஞ்சம் ரீவைன்ட் பண்ணிப் பாருங்களேன்.
2015 க்கு கொஞ்சம் வருவோம்.
ஒவ்வொருவரும் புத்தாண்டை வேவ்வேறு காரணங்கலுக்காக
எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சிலருக்கு திருமணம் உறுதியாகிருக்கலாம்
அல்லது புதிதாக குழந்தையின் வரவை எதிர்பார்த்திருக்கலாம் இப்படி பல.
எதுவும் குறிப்டும் படியாக இல்லாவிடிலும் புது வருடத்தில் தொடங்கும் எல்லா நிகழ்வுகளும் நல்லதாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்பிருக்கும்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
சிலர் புத்தாண்டு தீர்மானங்களில் சிக்கி கொள்கின்றனர். இந்த வருடம் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பேன், ஜிம்மில் சேர்ந்து உடல் எடையைக் குறைப்பேன் எனப் பல தீர்மானங்கள் எடுப்பார்கள். அதில் எந்த அளவு வெற்றி அடைகிறார்கள் எனபது ஐயமே.
ஒரு ஆய்வின் படி, இந்த தீர்மானங்களில் பல, சில நாட்களையோ அல்லது கொஞ்சம் அதிகமாக வாரங்களையோ தாண்டுவதில்லை.
என்னை பொருத்தவரை, சோம்பலின்றி மூச்சை பிடித்து ஒரு சில மாதங்கள் கடந்து விட்டால் நீங்கள் அதை வெற்றி பாதையில் முடிக்க பெரிதாக தடை ஏதும் இருக்காது.
எடுத்த காரியம் மேல், உங்களுக்கு தேவை அர்ப்பணிப்பு (Dedication) அன்றி வேறொன்றும் இல்லை.
2015 திட்டங்கள் என்னனு கேட்கிறது காதில் விழுகிறது. நான் கொஞ்சமா சொல்லிட்டு நிறையா செய்ற ஆளுமில்ல, நிறையா சொல்லிட்டு கொஞ்சமா செய்ற ஆளுமில்ல. ஆனா, சொல்லாமலே செய்ற ஆளுங்கோ! :)
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்"
..
என பாரசக்தியை வேண்டி புது வருடத்தை உற்சாகாமாய் தொடங்குவோம். நல் வாழ்த்துக்கள்!!
மின்னஞ்சல் தொடர்புக்கு:
aarurbass@gmail.com
இந்தியாவில் என் நூல்களை வாங்க:Click
முகநூல் (Facebook):
https://www.facebook.com/ejvpbook
Wednesday, December 31, 2014
Tuesday, December 30, 2014
சிறகுகள் - பற பற!!
கடந்த வாரம் "சிறகுகள் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை" தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.
என்னுடய "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதை தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி அறக்கட்டளை இதுவே. புத்தக விற்பனையிலிருத்து திரட்டப்படும் நிதி இந்த அறக்கட்டளைக்கே நன்கொடையாக வழங்கப்படும்.
சிறகுகள் பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு பிரத்தியேகமான நேர்காணல் இங்கே :)
சிறகுகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்:
சுற்றுச்சூழக்காக மரஙகள் நடுவது வரை சட்ட அனுமதியிருந்தாலும்,
சிறகுகளின் இப்போதய தலையாய நோக்கம் வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப் புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது.
இதற்கான எண்ணம்:
இதற்கான எண்ணம் மிக நாட்களாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தந்த தொடர் ஊக்கமும் நம்பிக்கையும் தான் இதைத் தொடங்க தெம்பு வந்தது.
ஆனாலும் குடும்பம், வேலை என கடமைகளை தாண்டி இதற்காக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். தவிர அறக்கட்டளை தொடங்குவதின் ஆழத்தையும் தேவையான மேலாண்மையும் நன்றாக யோசித்தேன்.
கடைசியில் நல்லது நடந்தால் நல்லது என செயல்படுத்த துணிந்து விட்டேன். இதற்கு அவசரப்படாமல் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். என் எழுத்து, எங்கோ தேவைபடும் ஒருவருக்கு உதவும் எனில் அதை தவிர வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். சொல்லுங்கள்!
சிறகுகள் எனும் பெயரை தேர்வு செய்தது எப்படி?
தெளிவுடன், தன்னம்பிக்கை, வலுவுடனும் சமூக வானில் பறக்க தேவையான சக்தியை தரவல்லது கல்வி எனும் சிறகே.
அந்த சுதந்திர சிறகுகளின் நினைவூட்டலாகவே இந்த பெயர்.
"பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் அவன் நிம்மதியாக சாப்பிடுவான்...' எனற பழமொழி நீங்கள் அறிந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாமின் 'அக்னி சிறகுகள்' நூலும் ஒரு தூண்டுதல்.
இதற்கான தற்போதய தேவை என்ன ?
தாராள மயமாக்கப்பட்ட இந்தியாவில் தமிழ் நாட்டின் தலைஎழுத்து முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுவிட்டதாக ஒரு தவறான எண்ணம் பலரிடம் ஏற்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்திற்கு கல்வியை தர முயற்சி செய்துகொண்டிருக்கிறனர். அங்கே பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தரமான கல்விக்காக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை நுழைத்து விடுகின்றனர்.
ஆனால் வாய்ப்புகள் அற்ற சிறு நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களின் நிலையில் பெரிய மாற்றமில்லை.
அவர்கள் அரசுப்பள்ளிகளையோ அல்லது அரசுமேலாண்மை பள்ளிகள் எனப்படும் Management Schools யை நம்பி இருக்கவேண்டிய சூழல். அங்கே நிதி மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தவிர உள் கட்டமைப்பின்மை என பல சிக்கல்கள்.
தவிர நகரங்களை போன்று சரியான கல்வி வழிகாட்டுதாலோ அல்லது வாய்ப்புகளோ பலருக்கு அங்கே கிடைப்பதில்லை. அந்த மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு 'சிறகுகள்' முயற்சி செய்யும்.
மேலும், நம்மில் உதவி செய்ய நிறையப்பேர் தயாராக இருக்கிறார்கள். அதை சரியான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க ஒரு அறக்கட்டளை தேவையானதாக இருந்தது.
எப்படி செயல்படுத்த திட்டம்?
என்னை தவிர மேலும் நான்கு பேர் 'சிறகுகளில்' உறுப்பினர்களாக உள்ளனர். நான் அமெரிக்காவில் வசித்தாலும், அவர்களின் உதவி மற்றும் ஓத்துழைப்புடன் இதை செயல்படுத்துவதாகத் திட்டம்.
அதில் ஒருவர் பள்ளி ஆசிரியர், இன்னொருவர் மனித வள மேம்பாட்டுதுறையில் பணி புரிபவர். மேலாக அனைவருக்கும் நல்ல உதவும் உள்ளம் உள்ளது.
வரும் நாட்களில், நீங்கள் யாருக்கேனும் உதவ வேண்டும் என நினைத்து பணம் அனுப்பி வைத்தாலும் பெற்றுக் கொள்வதாக உத்தேசம்.
குறைந்த பட்சம் ஓவ்வொரு காலாண்டுக்கேனினும் ஒரு செயலைச் செய்து முடிப்பது இப்போதய திட்டம்.
முதல் கட்டமாக எனது கவிதை நூல் விற்பனையின் முழு தொகையும் சிறகுகளுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்தது என்ன ?
திருவாருர்க்கு அருகில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்க ஆசிரிய நண்பர் ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். மேலும் சொல்கிறேன்.
இது ஒரு சிறு தொடக்கமே, கடந்து போக வேண்டிய பாதை அதிகம். ஆனால்,நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

SIRAGUKAL - An Educational Trust
As all of you know, I have published my first book titled as "En Jannal Vazhi Paarvaiyil" few months back.
During
that process I also committed myself to an initiative, which is to
start an educational trust.
Today,
I am happy to announce that a trust named as "SIRAGUKAL
EDUCATIONAL AND CHARITABLE TRUST" has been registered
in Tamil Nadu, India.
What
is the goal ?
The
primary goal is to support initiatives in education for the poor kids
in rural areas of Tamil Nadu.
When
I briefed my Idea for a trust, my family and close relatives welcomed
it.
But,
I know from my bottom of my heart that this requires lot of
commitment and time. After lot of thoughtful consideration, I decided
to go forward to help the needy and start this trust.
Execution
plan:
Other
than me there are four more trustees in India. One of them is a
school teacher and another is a HR executive. All of them have the
tendency to help others.
Thinking
of completing at least one project for every quarter, which depends
on the size of the project as well.
Even
I have strategy to raise the fund from volunteers interested to
contribute.
What
are the next steps?
As
first step, I will be donating ALL book sales proceeds to Siragukal.
We
are working with a teacher friend to donate books and other library
items for a government school near Thiruvarur, Tamil Nadu. Will keep
you posted.
This
is a small first step towards the beginning a long journey. please
reach out me if you have any suggestions and wish me all the best!.
Tuesday, December 23, 2014
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் - ஒரு சாகாப்தம்
இயக்குனர் சிகரம் பாலசந்தர் காலமான தகவலை நண்பர் "வாட்ஸ் அப்" மூலம் அனுப்பி இருந்தார்.
அந்த தகவலை இணையத்தில் உறுதி செய்தபின்பு இதை எழுதத் தொடங்கினேன். கட்ந்த சில நாட்களாக சில விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.
பாலச்சந்தர் என்று ஒருமுறை மனதுக்குள் சொல்லி பார்த்தபடி அவருடய படங்களை ஒருமுறை மனத்திரையில் ஓட விட்டேன்.
பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானது சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி , மனத்தில் உறுதி வேண்டும் போன்ற படங்களின் மூலம் தான்.
அப்போது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், ஆனாலும், அவை என்னுள் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.
அந்த கால கட்டத்தில் அந்த மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துக்களை திரையில் சொல்ல அவருக்கு இருந்த துணிவைக் கண்டு இப்போது வியக்கிறேன்.
பாலசந்தர் என்றால் வித்தியாசம் என்றே மக்கள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் மனத்தில் அழகாய் பதிய செய்வதில் வித்தகர்.
உதாரணமாக மனத்தில் உறுதி படத்தில் பின்னணியில் பாரதியின் 'மனத்தில்
உறுதி வேண்டும்' பாடல் ஒலிக்க நாயகி சுஹாசினி குடும்பத்திற்காக உழைப்பது போல காட்சி வரும். அவை ஆண்டுகள் பல கடந்தாலும் மனதில் நீங்காதவை.
அதுபோலவே 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் வயதான தம்பதிகளாக வரும்
பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி ஜோடி. பின்பு பூர்ணம் விஸ்வநாதன் இறந்த பின் வரும் சோக காட்சிகள். அவை கண்ணீரை தழும்ப செய்யக் கூடியவை. இப்படி எத்தனையோ பல.
சமீபத்தில் கூட அவருடைய 'வறுமையின் நிறம் சிகப்பு', 'அவள் ஒரு தொடர்கதை', 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்களை தேடி பிடித்து மீண்டும் கொண்டிருந்தேன். 'பார்த்தாலே பரவசம்' நான் பார்த்த அவருடைய மிக சமீபத்திய படம்.
கதை, வசனம், பாத்திர வடிவமைப்பு என எல்லாவரிலும் தனது தனித்தன்மையை பதித்து விடுவார்.
அவருடைய படத்தில் பாடல்களுக்கும் எப்போதும் ஒரு தனி இடமுண்டு.
தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். தொலைக்காட்சித் தொடர்களில் முதலில் நுழைந்ததது. என பல 'முதல்'களுக்கு சொந்தக்காரர் அவர்.
தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் திரை உலகுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்தவர் எனறால் மிகையில்லை.
அந்த தகவலை இணையத்தில் உறுதி செய்தபின்பு இதை எழுதத் தொடங்கினேன். கட்ந்த சில நாட்களாக சில விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.
பாலச்சந்தர் என்று ஒருமுறை மனதுக்குள் சொல்லி பார்த்தபடி அவருடய படங்களை ஒருமுறை மனத்திரையில் ஓட விட்டேன்.
பாலச்சந்தர் எனக்கு அறிமுகமானது சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி , மனத்தில் உறுதி வேண்டும் போன்ற படங்களின் மூலம் தான்.
அப்போது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், ஆனாலும், அவை என்னுள் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.
அந்த கால கட்டத்தில் அந்த மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற கருத்துக்களை திரையில் சொல்ல அவருக்கு இருந்த துணிவைக் கண்டு இப்போது வியக்கிறேன்.
பாலசந்தர் என்றால் வித்தியாசம் என்றே மக்கள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் மனத்தில் அழகாய் பதிய செய்வதில் வித்தகர்.
உறுதி வேண்டும்' பாடல் ஒலிக்க நாயகி சுஹாசினி குடும்பத்திற்காக உழைப்பது போல காட்சி வரும். அவை ஆண்டுகள் பல கடந்தாலும் மனதில் நீங்காதவை.
அதுபோலவே 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் வயதான தம்பதிகளாக வரும்
பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி ஜோடி. பின்பு பூர்ணம் விஸ்வநாதன் இறந்த பின் வரும் சோக காட்சிகள். அவை கண்ணீரை தழும்ப செய்யக் கூடியவை. இப்படி எத்தனையோ பல.
சமீபத்தில் கூட அவருடைய 'வறுமையின் நிறம் சிகப்பு', 'அவள் ஒரு தொடர்கதை', 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்களை தேடி பிடித்து மீண்டும் கொண்டிருந்தேன். 'பார்த்தாலே பரவசம்' நான் பார்த்த அவருடைய மிக சமீபத்திய படம்.
கதை, வசனம், பாத்திர வடிவமைப்பு என எல்லாவரிலும் தனது தனித்தன்மையை பதித்து விடுவார்.
அவருடைய படத்தில் பாடல்களுக்கும் எப்போதும் ஒரு தனி இடமுண்டு.
திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில் பாடல் பெறும் வித்தையை அறிந்தவர்.
தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் திரை உலகுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்தவர் எனறால் மிகையில்லை.
உஙகள் மகன் அல்லது மகளுக்கு இன்னும் கால்நூற்றாண்டு தாண்டியும் நீங்கள் துணிவாக இவர் படங்களை பரிந்துரைக்கலாம்.
என்னுடைய தஞ்சை தந்த தங்கம் பாலச்சந்தர் என்பதில் எனக்கு கர்வமே.
தலைமுறைகள் தாண்டி
அவருடைய படைப்புகள் தமிழ் திரையுலகின் ஓரு அடையாளமாய் வாழும்.
Saturday, December 20, 2014
இப்பவே கண்ணைக் கட்டுதே!
சென்னையில்வுள்ள நண்பர் ஓருவரிடம் சில வாரங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் என்றால் என்னைவிட ஜூனியர் , இருப்பத்தேழு இருக்கலாம். சில வருடங்களாகத்தான் பழக்கம் ஆனால் வெளிப்படையாக பேசும் டைப். இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஐ.டி. துறையில் இருந்த நல்ல வேலையைவிட்டு தற்போது இசைத்துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் வசதியானவர். அப்பா மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருந்தவர். தற்போது கார்ப்பரேட் ட்ரைனிங் சென்டர் நடத்துகிறார்.
இவர் படித்ததோ இன்ஜினியரிங், சிறு வயதில் பெரிய இசையும் பயிற்சியும் இல்லை. ஆர்வத்தில் கடந்த ஒரு வருடத்தில் பியானோ வில் ஏதோ ஏழு எட்டு லெவல் படித்து விட்டாராம். இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரின் இசைக் கல்லூரியில் வேறு ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு திரைபட இசையமைப்பாளரின் உதவியாளராக
சேர்ந்து பின்பு படிப்படியாக இசையமைப்பாளராவது அவர் கனவு. மேற்க்கத்திய இசையில் ஆர்வம் என சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழிசை எந்த திசையில் இருக்கிறது என நீங்கள் கேட்பது என் காதில்விழுகிறது. :)
சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஆல்பம், படப்பிடிப்பு என இருந்த வேலையும் விட்டுவிட்டு கைக்காசை செலவு செய்து சுத்திக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த திரைப்படப் பாடலாசிரியர்களை ஆல்பத்தில் பயன்படுத்துவது பற்றிக் கூடப் பேசிக்கொண்டிருந்தார்.
அதன் பின்பு சமீபத்தில் தான் பேசினேன். ப்ரைவேட் ஆல்பம் நண்பர்கள் கொடுத்த ஐடியாவாம். அந்த பதினைந்து நிமிட ஆல்பத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக மெனக்கெட்டுருக்கிறார். மெட்டு அமைப்பது, சரியான பாடல் வரிகளை தேர்வு செய்வது அதற்க்கு ஏற்ற இசைக் கோர்வைகள் உருவாக்குவது மேலும் பொருத்தமான வாத்தியக் கருவிகளை பயன்படுத்துவது, நல்ல தரமான ஒலிப்பதிவு என வேலை பின்னி எடுத்துத்திருக்கிறது. பாவம் நோகாமல் ஏசி யில் ஐ.டி வேலை செய்து சம்பளம் வாங்கியவருக்கு இதெல்லாம் புதிதுதான்.
அது மட்டுமின்றி ரெக்கார்டிங் ஸ்டூடியோ, பாடக, பாடகியர் காஸ்டியூம், வீடீயோ என பணமும் சில லட்சங்கள் வரை காலி.
மேலும் தொழில் நுட்பங்களை புரிந்து கொண்டு தனியாக இயங்க பல ஆண்டு கடும்உழைப்பு தேவை என்பதை இந்த ஒரு ஆல்பத்தின் வழியாகவே அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளார். அப்படி நல்ல திறமை உள்ள சிலரும் திரையில் ஜொலிக்க இயலவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறார். இசை பிரியம் என்பது வேறு அதையே ஜீவனமாக்கி கொள்வது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.
அடுத்தது என்ன? என்றால்,' ஏதோ தெரிந்தோ தெரியாமலோ இதில் குதித்தாகிவிட்டது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் முயற்சித்து பார்க்கவுள்ளதாக' சொன்னார்.
நினைத்திருத்தால் இவர் வேலையை விடாமல் எப்போதோ திருமணம்,குழந்தை என செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இவர் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட துணிந்து விட்டார். இப்போது சேர வேண்டிய இலக்கு கண்ணுக்கு தட்டுப்படவில்லை. ஆனால் கை கால்கள் இப்போதே சோர்வடையத் துவங்கி விட்டது.
இவரைப் போல படைப்பாளியாக முயற்சித்து தோற்று அல்லது முழுமையாக முயற்சிக்காமல் பாதியில் விட்டவர்கள் பலர்.
அவர்கள் எங்கோ மேடைக் கச்சேரிகளில் வெற்றி பெற்றவர்களின் பாடல்களை பாடிக் கொண்டோ அல்லது இசை அமைத்துக் கொண்டோ இசையோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நீஙகள் தரும் மிகப்பெரிய வெகுமதி கைத்தட்டலும், பாராட்டுமன்றி வேறில்லை..

Saturday, December 13, 2014
ரஜினியின் லிங்கா படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் 'லிங்கா' உலகம் முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே நான் கண்ணை மூடிக் கொண்டு "வெற்றிகரமாக" என்ற வார்த்தையை சேர்க்க எந்த பிரயத்தனமும் செய்ய தேவையில்லை. உலகத்தமிழர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.
ஆனால், இந்தமுறை முன்பு எப்பொழுதும் போலில்லாமல் ரஜினி பற்றியும் அவர் அரசியல் நிலைப்பாடு ,சாதனை, வயது பற்றியும் நிறைய வெளிப்படையான விமர்ச்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டன.
முதல் காட்சிக்கு சென்று ரசிக்கும் ரசிகனாக இல்லாவிடிலும், கடந்த 30 வருடமாக நானும் ரஜினி ரசிகன்தான். பதின்ம வயதுகளில் பார்த்த எஜமான் படத்தில் ரஜினியின் அறிமுக காட்சிகளில் உற்சாகம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் பொங்கியது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. இதை சொல்லிக் கொள்வதில் எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் நாயகன் அவர். ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக நம்மில் ஒருவராய் உலா வருகிறார்.
சந்திரமுகி படத்தில் அவர் வடிவேலுவுடன் செய்யும் சில நகைசுவைகள்கூட
எனக்கு உடன்பாடு இல்லை தான். அதற்காக அவரை முற்றிலும் என்னால் புறக்கணிக்க இயலவில்லை. முன்பு வடிவேலு இப்போது சந்தானம் என ஜெயிக்கும் குதிரையுடன் பயணிக்கிறார். காதாநாயகிகள், லொகேஷன் என
மாறினாலும் அவர் படங்கள் பழைய பார்முலாதான். எனவே சினிமா ஓரு வியாபாரம் என்ற நிலையுடன் நிறுத்திக்கொள்வது உத்தமம். அதுபோல அரசியல் நிலைப்பாடாகட்டும் அல்லது விளம்பரமாகட்டும் ரஜினி அவருடைய பாதையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.
நாம்தான் தேவையில்லாமல் சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக் கொள்கிறோம். திரையில் அவர் செய்யும் சாகசங்களை நிஜ வாழ்விலும் எதிர்பார்க்கிறோம். நம் இயலாமையில் இருந்து மீட்க ஓரு ரட்சகரை நோக்கி காத்துக்கிடக்கிறோம். அது அறிவீனமின்றி வேறென்ன ?.
அவர் மேல் வீசப்படும் மற்றோரு குற்றச்சாட்டு அவரின் பொதுநல தொண்டு பற்றியது. நிஜ வாழ்வில் அணை கட்டுவார், மருத்துவமனை காட்டுவார் என எதிர்பார்க்காமல். அரசுக்கு சரியான வரி கட்டினால் சந்தோசப்படுங்கள். அவர் வழி எப்போதும் தனி வழி என விடுங்களேன். அவர் "மாஸ் எண்ட்டெர்டெயினர்" அதுவன்றி வேறென்ன தேவை?
நாட்டைத் திருத்த 'லிங்கா' க்கள் வர வேண்டியதில்லை. நம்மை
நாமே திருந்திக் கொள்வதுதான் வழி என்ற நிதர்சனத்தை உணர்ந்தால் விசனப்பட வேண்டியதில்லை.

Wednesday, December 3, 2014
அணிலாடும் முன்றில் - பாட்டி
சமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய 'அணிலாடும் முன்றில்' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவிதை புத்தகமோ அல்லது பூதமோ என நீஙகள் பயப்படத்தேவை இல்லை. இது அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
கூட்டு குடும்பங்கள் சிதைந்து வரும் அல்லது சிதைந்து விட்ட தமிழ் சூழலில்
அம்மா,அப்பா,மனைவி தாண்டி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனும் பல உறவுகளை நினைத்து நேசித்து எழுதியுள்ள அருமையான நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது ஏதோ ஒரு புள்ளியில் உங்கள் வாழ்க்கையை பொருத்தி பார்க்க தவறமாட்டீர்கள்.
நாம் எளிதாய் கடந்துபோகும் மற்ற கற்பனை கதைகளை விடவும் இந்த அசலான மனிதர்களை வாசிக்கையில் மனது நம் பால்ய நினைவுகளுக்கு சென்று திரும்புகின்றன. அந்த சுகானுபாவமே நம்மை மேலும் பல தூரம் பறத்தலுக்கான சக்தியையும் உத்வேகத்தையும் தரவல்லது. வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.
எனது 'அணிலாடும் முன்றில்' இதோ உங்களுக்காக.
மிக அதிகாலையில் வரும் தொலைபேசி ஏனோ தேவையில்லாமல் ஒரு அவசரத்தை தாங்கிய தந்தியை நினைவுபடுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தாங்கிதாக இருந்தது அந்த அதிகாலை அழைப்பு. அது என் பாட்டி காலமான செய்தி. வாழ்வில் ஒவ்வோரு உறவுகளும் ஏதோ ஒரு அனுபவத்தை, நினைவுகளை பாடங்களை நம்மில் விட்டுச்செல்ல தவறுவதில்லை.
கொஞ்சம் ப்லாஷ்பேக். பாட்டி பிரிட்டிஷ் காலத்தில் SSLC படித்தவர். அந்த காலத்தில் வந்த போஸ்ட் ஆபீஸ் வேலையை ஏற்றுக் கொள்ள வில்லை என பல சமயங்களில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
எனக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்து பள்ளிஇறுதி வரை தினமும் பாட்டி வீட்டுக்குத்தான் முதல் விஸிட் பிறகே மற்றவை. நகரத்தின் மையத்தில் இருந்த ஓட்டு வீடு. அது எப்போதும் எங்களுக்கு பாட்டி வீடே தவிர வேறில்லை. அந்த அளவுக்கு நெருக்கம்.
என் பாட்டனார் அரசு வக்கீலாக வேலை நிமித்தமாக பல ஊர்களை சுற்றி
கடைசில் சொந்த ஊரான திருவாரூரில் வந்து செட்டில் ஆனபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.
வீட்டை பார்க்கச் சென்ற நாள் ஒரு குடியரசு தினமோ அல்லது சுதந்திர தினமாகவோ இருக்ககூடும். என் வீட்டில் இருந்து போகும்போது சாலையோரம் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டிருந்தனர். அப்போது குத்திய தேசிய கொடி போல நெஞ்சில் இன்னும் பாட்டி வீட்டு நினைவுகள்.
எனது கிராம வாழ்க்கைக்கும் நகரத்துக்குமான இடைவெளியை முதலில் இட்டு நிரப்பியது அந்த வீடு. அது ரேடியோவுக்கும், டிவிக்கும்; சைக்கிளுக்கும்,TVS Champக்கும்; அம்மிக்கும், மிக்ஸிக்குமான இடைவெளியாக இருக்கலாம்.
வங்கி, போஸ்ட்ஆபீஸ், தையல் கடை, காய்கறி மார்க்கெட் என வெளி விசயங்களை அங்குதான் பழகிக் கொண்டேன். ஆசிரியர் வீடுகள், பிரபலமான வக்கீல் வீடுகள், விளிம்பு நிலை மனிதர்கள் என சமூகத்தின் அனைத்து தளத்திலும் அறிமுகம் கிடைத்ததும் அங்கு தான். சாமி, நாள், நட்சத்திரம்,விரதம் என சகலமும் பரிச்சமானது கூட அங்கேதான். அதே நேரத்தில் படிப்பிற்கான முக்கியத்துவத்தை திரும்ப சொல்லி சொல்லி மனத்தில் ஆழப் படிய வைத்தவர்.
பாட்டி,தாத்தா என இருவருமே அங்கு ஒரு ஒழுங்கை கடைபிடித்து வந்தனர். எந்த ஒரு குளிரோ,மழையோ புயலோ இருந்ததாலும் அதிகாலை நாலரை மணிக்கே வீடு விழித்துக் கொள்ளும். பாட்டி அதிகாலையில் எழுந்தவுடன் சாமி அறை பெருக்கி சுத்தம் செய்து குளித்து சாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் , பூஜை முடித்து பின்பு சாமி பாடல்களை உனுறுகிப் பாடுவார். சமைப்பதிலும் சமர்த்தர் அவர். பண்டங்கள், சாப்பாடு என அவரது கை பக்குவம் மிகஅலாதி. ஒரு ஒப்பீட்டுக்கு கூட யாரையும் துணைக்கழைக்க இயலாத சுவை அது.
கற்றதில் சில: அசராத உழைப்பு, சிக்கனம், பண மேலாண்மை, பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யாமை எல்லாவற்றை விட உறவுகளுக்கு கொடுத்து உதவும் மனம்.
தொட்டால் பூ மலருமா தெரியாது, ஆனால் அவர் பீரோவை தொட்டால் நிச்சயம் நோட்டு வரும். கேட்காமலே எங்கேயோ சேர்த்து வைத்த பணத்தை தேவைக்கு எடுத்து பாரபட்சமின்றி தந்து உதவும் உத்தம உள்ளம் கொண்டவர்.
அவரிடம் ஒரு தெய்விகத் தன்மையைத் தரிசிக்க முடிந்தது. அவர் அன்பு பாசாங்கற்றது. மற்ற கதை சொல்லும் பாட்டிகளை போலின்றி அவர் மிகச் சிறந்த ஆளுமையாகவே எனக்குள் பரிமளிக்கிறார். அது மூன்று தலைமுறைகளுக்கு அறிவுரையும்,ஆலோசனையும் தந்து வழிநடத்திய ஆளுமை.
பல வருடங்களுக்கு முன்பு அவசர தேவையாக எனது பல் அறுவை சிகிச்சைக்கு சில ஆயிரங்களை ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகளாக தந்தார். மருத்துவமனை செல்லும் வழி முழுக்க அவர் பணத்தை சுருட்டி தந்த மஞ்சள் பை கனத்துக் கொண்டேயிருந்தது
அங்கே நீ
இறுதியாய்
இருளில் புதைந்து கொள்ள
இங்கே நான்
புதைந்து அழ
இருள் தேடினேன்!
..
இந்த தலைமுறையிலும் என் போன்ற பல பாக்கியசாலி பேரன்களும்,பேத்திகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்..

Friday, November 28, 2014
நன்றி சொல்ல உனக்கு..
Nov-26 வியாழக்கிழமை, அமெரிக்காவில் Thanksgiving day, (நன்றி தெரிவிக்கும் நாள் ) கொண்டாடப்பட்டது.
இது நம்ம ஊரு தைப்பொங்கல் போல ஒரு பண்டிகைனு தப்பு கணக்கு போடாதீங்க இது அதையும் தாண்டி. .. நாம பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைளை டீவி சேனல்கள்கிட்ட அடகு வச்சு ரொம்ப நாளச்சு பாஸ்...
சரி விஷயத்துக்கு வருவோம், இது அமெரிக்காவின் முக்கியமான ஆண்டின் நீண்ட வாரஇறுதி அல்லது Long Weekend. வியாழன் அன்று தேங்க்ஸ் கிவீங் கொண்டாடிவிட்ட களைப்பு தீராமல் மறு நாளை (Black Friday) ப்ளாக் ப்ரைடே எனப்படும் ஷாப்பிங் வெள்ளியை கொண்டாடி மகிழ்கிறது.
ப்ளாக் ப்ரைடே அன்று கிருஸ்மஸ் சீசனை வரவேற்பது போல நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்று குவிக்கின்றனர். தங்கம் முதல் தகரம் வரை எல்லாத்துக்குமே தள்ளுபடி தான் போங்க. இது நம்ம ஊரு ஆடிக் கழிவையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடியது.
இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பெரிய சில்லறை நிறுவனங்களாகிய வால்மார்ட்,மேஸிஸ்,பெஸ்ட் பை போன்றவை வியாழாக்கிழமை மாலையிலே கடைகளை திறந்து விற்பனையை தொடங்கினர்.
அதனால் எப்போதும் வெள்ளியன்று சூடுபிடிக்கும் ஷாப்பிங் காய்ச்சல் இந்த தடவை வியாழக்கிழமையே தொற்றிக்கொண்டது. இதற்கு அமெரிக்க மக்களிடம் பெருவாரியான ஆதரவு இருக்காது என பரவலாக பேசப்பட்டாலும். வசூல் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டியதாக தெரிகிறது.
ப்ளாக் ப்ரைடே என்பதை நுகர்வு கலாச்சாரத்தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன். இந்த ஆண்டில் இருந்து பிரிட்டனிலும் வால்மார்டின் ஆசியிடன் இது தொடங்கியதாக தெரிகிறது. இந்த அமெரிக்க நுகர்வு கலாச்சார புயல் சென்னை போன்ற நகரஙகளை தாக்கும் அபாயம் தூரத்தில் இல்லை. சல்லிசான விலையில பொருள் கிடைச்சா மக்கள் வேண்டாமானா சொல்லப்போறாங்க ?. :)
இந்த விடுமுறையின் முதல் பாகமான நன்றி தெரிவித்தலுக்கு வருவோம், தற்போதய அவசர சூழலில் காலையில் அப்பார்ட்மெண்டில் லிப்ட் கதவை திறந்து விடும் செக்கியூரிட்டியில் தொடங்கி தினமும் இயந்திரத்தனமாக பல தடவை 'Thanks' என்ற வார்த்தையை அவசரகதியிலே உதிர்த்து செல்கிறோம்.
ஒரு வாழ்த்தையோ அல்லது ஒரு நன்றியையோ நம்மில் எத்தனை பேர் உணர்ந்து சொல்கிறோம் என்பது நிஜத்தில் கேள்விக்குரியதே.
தமிழில் நன்றி சொல்ல வார்த்தையின்றி மயங்காமல் மாறுதலுக்கேனும் அடுத்தமுறை 'நன்றி' என எதிரில் உள்ளவரின் கண்களை பார்த்து மனதறிய சொல்லிப் பாருங்கள். பின்பு சொல்லுங்கள், உங்கள் மனதில் மின்சாரம் பாய்ந்ததா என்று. அது உண்மை என்றால், இருவருக்கும் அது பொருந்தும்.

Sunday, November 16, 2014
2014 தீபாவளி கலை நிகழ்ச்சி - What A Function!!!
நேற்று (Nov-15-2014) தென் புளோரிடா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடந்த தீபாவளி கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. மிக சிறப்பாக நடந்து முடிந்தது அப்படினு எழுதினா ஏதோ தினமணி பேப்பர்ல வரும் நீயூஸ் மாதிரி இருக்கும்.
சரியா சொல்லனும்னா ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தி இருந்தது. ரஜினி படம்னா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருப்திபடுத்தும் அம்சங்கள் இருக்கும் இல்லையா அது போல.
சிறுவர்களும், பெரியவர்களும் சினிமா பாடல், நடனம் என கலக்கினர்.
சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் பல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் தூண்டுதலாய் இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்.
ஆனா, நமக்குததான் அவர்கள் தேர்தெடுத்த பெரும்பாலான லேட்டஸ்ட் பாட்டோ டான்ஸோ புரியல அல்லது தெரியல, உதாரணத்துக்கு "வாட் அ கருவாடு" பாடல் (What A Karavaad!!) பெரிய வெற்றிப் பாடல் என்ற அறிமுகத்துடன் ஆடிக்களித்தனர். (By the way, செத்த மீனுக்குதான கருவாடுன்னு பேரு ? ) :)
எனது மூத்த மகள் கிருஷ்ணனின் "கோபிகா "பாடலுக்கு குழு
நடனமாடி இருந்தாள். அதை தவிர்த்து மருந்துக்காவது ஒரு பாரதியோ இல்ல நல்ல ஆண்டாள் பாசுரமாவது வருமான்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.
அதைத் தவிர்த்து, எனது விருப்பபாடலான AR ரஹ்மானின் 'ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா!!' என்ற ஸ்டார் படப்பாடலை தேர்தேடுத்து ஆடியது மனத்துக்கு நிறைவு.
மேலும், நிகழ்ச்சியின் மகுடம் என சிலாகித்து நன்றி உரையில் குறிப்பிடப்பட்டது சுதாகர் கிருஷ்ணமூர்த்தியின் பாடல். மௌனராகத்தில் இருந்து "மன்றம் வந்த தென்றலுக்கு" எனும் பாடலை மிகஅசத்தலாகப் பாடி அனைவரையும் மயங்கச் செய்தார். வாழ்த்துக்கள் அன்பரே!
தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன.
அதுபோல நிகழ்ச்சியும் பாடல், இசை, நடனம், நாடகம் என அனைத்து அம்சங்ககளையும் கொண்டு மூன்று மணி நேர நிகழ்ச்சி கொண்டாட்டமாய்
இருந்தது.
நிகழ்ச்சி தொகுப்பாளினி மூன்று மணி நேரமும் சுவாரஸ்யமான பேச்சால் பார்வையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
வாழ்த்துக்கள்!
மிக அருமையானதொரு நிகழ்வு, நிர்வாகக் குழுவினர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள் தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை.

Sunday, November 9, 2014
சதுரங்க ஆட்டத்தில்..
என்றைக்கும் இல்லாத மாற்றமாய் வானம் லேசான மேகமூட்டமாய் இருந்தது. அதிர்ஷ்டமாய் கிடைத்த மர நிழலில் காரை பார்க் செய்து விட்டு நூலகத்திற்குள் நுழைந்தாள் நளினி.
ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இங்கே சிறுவர்களுக்கான செஸ் வகுப்புகள் நடக்கின்றன. இன்று எட்டு வயது மகள் அம்முவை கூட்டிப்போக வந்திருந்தாள்.
நேராக முதல் தளத்தில் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கே வரிசைக்கு நான்கு வீதம் இரண்டு வரிசையாக டேபிள்கள் போடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு டேபிள்களிலும் இரண்டு சிறுவர்களாக அமர்ந்து அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
செஸ் ஒரு யுத்த தந்திர விளையாட்டு, அவர்களுக்கான ஆடுகளத்தில் தங்கள் தந்திரங்களை கையாண்டு கொண்டிருந்தனர். இங்கே யாரும் பெரும்பாலும் அதிர்ந்து பேசியதாக நினைவில் இல்லை. கடைசி வரிசையில் அம்முவின் தலை தெரிந்தது.
அனைவரையும் கடந்து அருகில் சென்றபோது தான், அவளுக்கு எதிரே ஆடிக்கொண்டிருந்த சிறுமி அழுது கொண்டிருந்ததை கவனித்தாள்.
அதிர்ந்தபடி அம்முவிடம் கேட்டாள்.
"என்ன பண்ணின அவ ஏன் அழறா ?"
"நான் ஒன்னும் பண்ல, ஏன்னு தெரியாது"
சிறுமியோ பதிலேதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் இப்போது அவளின் பிங்க் நிற சட்டையில்
வழிந்தது.
ஆனாலும், அம்மு ஏதோ சொன்னதால் தான் சிறுமி அழுவதாக முடிவு செய்திருந்தேன்.
அந்த சமயத்தில் அங்கிருந்த செஸ் பயிற்சியாளர் பிங்கியும் என்னுடன் சேர்ந்து நின்று கொண்டார்.
"சாரி சொல்லிட்டு கிளம்பு, நீ விளையாண்டது போதும்"
"நான் ஒன்னும் பண்ல, அப்புறம் ஏன்?" என்றாள் அம்மு.
அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெண்மணி குனிந்து சிறுமியின் காதோடு சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய பாட்டியாக இருக்கக் கூடும் என நினைத்தேன்.
நிமிர்ந்து எங்களை பார்த்து பேசிய பாட்டி "அவ அம்மாவை நினைச்சு அழறா" என்றாள்.
அழுகையை நிறுத்தி இருந்த சிறுமி
"என்னோட அம்மா என்ன விட்டுட்டு பிலிப்பைன்ஸ் போயிட்டாங்க" என்றாள்.
பிங்கிக்கு என்ன நினைதாரோ, ஆனால் எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.
"அம்மா என்ன வேலை செய்றாங்க? " என அன்பாக கேட்டார் பிங்கி
"அங்க டாக்டரா, நோயாளிகளுக்கு உதவி பண்றாங்க"
"எப்ப போனாங்க?"
"போன மாசம்"
இப்போது தொண்டயை செருமியபடி பிங்கி,
" பெரும்பாலும் வாழ்க்கை சதுரங்கத்தில், எதிராளியின் நகர்த்தலை நாமே முடிவுசெய்து, சொந்த எண்ணங்களில் உறிஞ்சப்படுகிறோம்.
உண்மையில், எதிராளியே இறுதியாக தங்கள் நகர்த்தலை தீர்மானிக்கிறார்கள். "
ஓரு முட்டாள்த்தனமாக நகர்வின் குற்ற உணர்வுடன் அம்முவின் கைபிடித்து வாசலை நோக்கி தொடங்கியிருந்தேன்.
வெளியே வரும்போது, வானம் மூட்டமின்றி தெளிவாக இருந்தது. பாவம் அம்முதான் இப்போது அழத்தொடங்கிருந்தாள்.

என்று அனைவரும் கேட்கும்படி அழகாய்ச் சொல்லி முடித்தார். அவர் குரலில் ஓரு உறுதி இருந்தது.
ஓரு முட்டாள்த்தனமாக நகர்வின் குற்ற உணர்வுடன் அம்முவின் கைபிடித்து வாசலை நோக்கி தொடங்கியிருந்தேன்.
வெளியே வரும்போது, வானம் மூட்டமின்றி தெளிவாக இருந்தது. பாவம் அம்முதான் இப்போது அழத்தொடங்கிருந்தாள்.
Thursday, October 30, 2014
தேவதைகள் வாழும் வீடு
தேவதைகள் பூமியில் இருக்குமா ?, தெரியவில்லை
இருந்தாலும் ,வீட்டில் வாழுமா ?, தெரியவில்லை
வாழ்ந்தாலும், பாடுமா?, தெரியவில்லை
பாடினாலும், ஆடுமா?, தெரியவில்லை
என் வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறாள்,
பாடுகிறாள்,
பாடிக்கொண்டே ஆடுகிறாள்!
என குழந்தைகள் இருக்கும் வீடு அத்துணை மகிழ்ச்சி நிரம்பியது. அதிலும்,
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.
ஏதோ ஒரு தருணத்தில், கண்டிப்பாக யாரோ ஓரு குழந்தை உங்களை 'அட' என ஆச்சரியப்பட வைத்திருக்கும். அது உங்கள் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆவது இயல்பு.
அது குழந்தை உங்களை அம்மா, அப்பா என விளித்ததாகவோ அல்லது தவழ்ந்த குழந்தை நடக்க தொடங்கியதோ அல்லது வேறு எதுவாயினும் இருக்கலாம்.
அதே குழந்தைகளிடம் தான் சில சமயங்களில் ஏனோ தானோ என பேசி மாட்டிக் கொண்ட அனுபவங்களும் இருந்திருக்கலாம். அப்படி நான் 'னே' என முழித்த சம்பவத்தை பார்ப்போம்.
நேற்று என்னுடய இரண்டு வயது இளையமகளை தூங்க வைக்கும் முயற்சியில் இருந்தேன் (முயற்சி மட்டுமே), ;) அவளை தூங்க வைக்கிறேன் பேர்வழின்னு நான் மட்டும் சில நாள் தூங்கிய அனுபவங்களும் உண்டு. பாப்பாவை தட்டி கொடுத்துட்டு இருக்கிறப்போ, திடீர்னு வெளியே பிளைன் போற சத்தம் கேட்டது. இது ஏன்டா உள்நாட்டு சதி போல இருக்கேன்னு நினைச்சப்போ, வழக்கம் போல "அது என்ன? " அப்படின்னா.
நான் "ஏரோபிளேன்" அப்படினு சொல்லி விடாம, கூடவே உனக்கு ஒன்னு வாங்கி தரட்டுமான்னு கேட்டேன். என்னுடய ஜாதகத்துல அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவேயீல்லங்க.. ஏங்க, நிலாவ புடிச்சு தரன்னு சொல்றப்ப, ஏரோபிளேன் வாங்கிதரன்னு சொல்லக்கூடாதங்க !? :)
அவ திரும்ப சொன்ன பதில் இருக்கே.. "ஒன்னு வேணாம் அப்பா, இரண்டா வாங்கலாம்". என வெள்ளந்தியா சொன்னதும் கன்னத்தில் பளார்னு அடிச்சது போல இருந்தது.
வேற என்ன பேச்சு அப்புறம். விமானம் கடந்த பின் வெளியே பூரண அமைதி, நான் இரவின் ஒளியில் முகத்தை தலையணையில் புதைத்தேன்.

Sunday, October 5, 2014
நூல் வெளியீட்டு விழா
இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகின்றன அந்த விழா நடந்து.
ஆம், திருவாரூர் படைப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், திருவாரூரில் என் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில்" வெளியீட்டு விழா 21 செப்டம்பர், 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை இனிதே நடைபெற்றது.
இது என் முதல் நூல் வெளியீட்டு விழா, எதுலும் முதல் என்பது தனித்துவம், தனிச் சிறப்பு உடையது. அதனால் தான் அது முதல் ;).
முதல் குழந்தையை, முதல் தடவை கையில் சுமப்பது போல அது ஒரு சுகானுபவம். மாமங்கம் பல ஆனாலும் மறக்க இயலாதது.
இளையராஜாவின் இசை வாரிசுகளான மூவரும் மெல்லிசைக் கச்சேரி மூலம் திருவாரூரில் இருந்துதான் தங்கள் இசை பயணத்தை தொடங்கினார்கள்.
சங்கீத மூம்மூர்த்திகள் பிறந்த ஊர், முன்னாள் முதல்வரின் ஊர் என திருவாருரின் சிறப்புகள் கணக்கில் அடங்கா.
இது மட்டுமின்றி, பல விதத்தில் இந்த நிகழ்வு சிறப்பு மிகுந்ததாகக் கருதுகிறேன். உதாரணமாக பள்ளி தோழருக்காக, பள்ளி தோழர்களே
தலைமை, வாழ்த்துரை மற்றும் சிறப்புரை செய்த அருமையான நிகழ்வு. மேலும் , பேரனின் முதல் நூல் பிரதியை பாட்டனார் பெற்றுக் கொண்டதும் சிறப்பே.
அழைப்பு இங்கே உங்கள் பார்வைக்கு:
பள்ளி நண்பர்களான திரு. சிவக்குமார், திரு.அன்பரசன் முறையே இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
த.ரெ.தமிழ் மணி என அழைக்கப்படும் எனதன்புத்தோழரும் தமிழ் ஆசிரியரும் கவிஞருமான சுப்ரமணி விழாவிற்க்கு தலைமை தாங்கினார்.
அவரின் தமிழ் ஆர்வமும் வேகமும் வியப்படைய வைக்கின்றன. அன்றாட வாழ்விலும் தூய தமிழிலில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
ஆரூர் புதியவன் என அன்போடு அழைக்கப்படும் எனது அருமைதோழரும் சென்னை காய்தே மில்லத் கல்லூரி தமிழ்த் துறை தலைவருமான
ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார். புதியதலைமுறைடிவியின் புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியியின வாயிலாக பேராசிரியரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.
அவரின் பேச்சாற்றல் தமிழகம் தாண்டி கடல் கடந்தும் பரவி இருப்பது உண்மை. சென்னையில் நண்பரை கல்லூரியில் சந்தித்து எனது நூலை வெளியிடவேண்டும் என்ற அன்புக்கட்டளையை தட்டாமல் ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நன்றிகள் பல.
(படம்: இடமிருந்து வலமாக - நண்பர்கள் சிவக்குமார், அன்பரசு, பாஸ்கர் மற்றும் ஹாஜா கனி)
பள்ளி தோழர்கள் என்று சொல்வதை விட வகுப்பு தோழர்கள் என்பதே பொருந்தும். நாங்கள் வ.சோ.ஆ.மேநிலைப்பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ரூப் எனச் சொல்லப்படும் கணிதம் ஒன்றாக படித்தோம்.
தோழர்கள் பள்ளிப் பருவஙகளில் நடந்த பல அனுபவங்களையும், நிகழ்வுகளையும் சுவைபட பேசினார்கள், எனக்கே சில நிகழ்வுகள் முதல் முறையாக இருந்தது. விழாவிற்க்கு வந்த அனைவரும் இந்த நிகழ்வுகளை மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தனர்.
பாவலர் கலை பாரதி கவிதை நூலின் திறனாய்வில் சிறப்பம்சங்கள், பிடித்தவைகள், பிடிக்காதவைகள் ஆகியவற்றை அழகாக மேற்கோளுடன் எடுத்து வழங்கினார். "மழை" என்ற தலைப்பில் முத்தாய்பாக கவியரங்கமும் நடைபெற்றது.
சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது, ஒரு சில குறுகிய நாட்களில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதன் சுவடு தெரியாமல் கூட்டத்தினை நண்பர் த.ரெ.தமிழ் மணி மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
நாங்கள் மேல்நிலைப் பள்ளி முடித்து சரியாக இருபது வருடங்கள் முடிவுற்ற போதிலும் தமிழின் மூலம் இந்த சந்நிதிப்பு நிகழ்ந்தது மிகவும் நெகிழ்ச்சி.
அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..
Facebook fan page:www.facebook.com/ejvpbook
ஆம், திருவாரூர் படைப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், திருவாரூரில் என் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில்" வெளியீட்டு விழா 21 செப்டம்பர், 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை இனிதே நடைபெற்றது.
இது என் முதல் நூல் வெளியீட்டு விழா, எதுலும் முதல் என்பது தனித்துவம், தனிச் சிறப்பு உடையது. அதனால் தான் அது முதல் ;).
முதல் குழந்தையை, முதல் தடவை கையில் சுமப்பது போல அது ஒரு சுகானுபவம். மாமங்கம் பல ஆனாலும் மறக்க இயலாதது.
இளையராஜாவின் இசை வாரிசுகளான மூவரும் மெல்லிசைக் கச்சேரி மூலம் திருவாரூரில் இருந்துதான் தங்கள் இசை பயணத்தை தொடங்கினார்கள்.
சங்கீத மூம்மூர்த்திகள் பிறந்த ஊர், முன்னாள் முதல்வரின் ஊர் என திருவாருரின் சிறப்புகள் கணக்கில் அடங்கா.
இது மட்டுமின்றி, பல விதத்தில் இந்த நிகழ்வு சிறப்பு மிகுந்ததாகக் கருதுகிறேன். உதாரணமாக பள்ளி தோழருக்காக, பள்ளி தோழர்களே
தலைமை, வாழ்த்துரை மற்றும் சிறப்புரை செய்த அருமையான நிகழ்வு. மேலும் , பேரனின் முதல் நூல் பிரதியை பாட்டனார் பெற்றுக் கொண்டதும் சிறப்பே.
அழைப்பு இங்கே உங்கள் பார்வைக்கு:
பள்ளி நண்பர்களான திரு. சிவக்குமார், திரு.அன்பரசன் முறையே இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
த.ரெ.தமிழ் மணி என அழைக்கப்படும் எனதன்புத்தோழரும் தமிழ் ஆசிரியரும் கவிஞருமான சுப்ரமணி விழாவிற்க்கு தலைமை தாங்கினார்.
அவரின் தமிழ் ஆர்வமும் வேகமும் வியப்படைய வைக்கின்றன. அன்றாட வாழ்விலும் தூய தமிழிலில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
(படத்தில்- தமிழ் மணி)
ஆரூர் புதியவன் என அன்போடு அழைக்கப்படும் எனது அருமைதோழரும் சென்னை காய்தே மில்லத் கல்லூரி தமிழ்த் துறை தலைவருமான
ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார். புதியதலைமுறைடிவியின் புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியியின வாயிலாக பேராசிரியரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.
அவரின் பேச்சாற்றல் தமிழகம் தாண்டி கடல் கடந்தும் பரவி இருப்பது உண்மை. சென்னையில் நண்பரை கல்லூரியில் சந்தித்து எனது நூலை வெளியிடவேண்டும் என்ற அன்புக்கட்டளையை தட்டாமல் ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நன்றிகள் பல.
(படம்: இடமிருந்து வலமாக - நண்பர்கள் சிவக்குமார், அன்பரசு, பாஸ்கர் மற்றும் ஹாஜா கனி)
பள்ளி தோழர்கள் என்று சொல்வதை விட வகுப்பு தோழர்கள் என்பதே பொருந்தும். நாங்கள் வ.சோ.ஆ.மேநிலைப்பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ரூப் எனச் சொல்லப்படும் கணிதம் ஒன்றாக படித்தோம்.
தோழர்கள் பள்ளிப் பருவஙகளில் நடந்த பல அனுபவங்களையும், நிகழ்வுகளையும் சுவைபட பேசினார்கள், எனக்கே சில நிகழ்வுகள் முதல் முறையாக இருந்தது. விழாவிற்க்கு வந்த அனைவரும் இந்த நிகழ்வுகளை மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தனர்.
அப்பாவின் நண்பர்கள் திரு. V.G. கிருஷ்ணமூர்த்தி மற்றும்
திரு. S.N. தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கும்
மரியாதை செய்யப்பட்டது. படம் கீழே:
சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது, ஒரு சில குறுகிய நாட்களில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதன் சுவடு தெரியாமல் கூட்டத்தினை நண்பர் த.ரெ.தமிழ் மணி மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
நாங்கள் மேல்நிலைப் பள்ளி முடித்து சரியாக இருபது வருடங்கள் முடிவுற்ற போதிலும் தமிழின் மூலம் இந்த சந்நிதிப்பு நிகழ்ந்தது மிகவும் நெகிழ்ச்சி.
அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..
என் ஜன்னல் வழிப் பார்வையில்:
Facebook fan page:www.facebook.com/ejvpbook
Please share your feedback.
Sunday, August 17, 2014
துட்டுக்கு பாட்டு - கவிஞர் வாலி
தமிழ் திரைப்பட பாடல்கள் "மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?"
என்பது பலகாலமாக தமிழ் சூழலில் கேட்கப்படும் பழைய கேள்வி.
இதற்கு "துட்டுக்கு பாட்டு " என்றார் கவிஞர் வாலி ஒருமுறை .
தற்போது, இந்த கேள்வியை யாரும் பாடலாசிரிடம் கேட்பது இல்லை.
அப்படியே கேட்டாலும் பதில் என்னவாக இருக்கும் என்பதை முன்பே அறிந்ததால் இருக்கலாம்.
பாடலுக்கு மெட்டு என்பதே மிக அரிதான ஒன்றாயிருக்கிறது.
திரை ஜாம்பவங்களாக பல ஆயிரம் பாடல்களை எழுதிய வைரமுத்து, வாலி போன்றவர்களின் சில பாடல்கள் மட்டுமே மெட்டமைத்ததாக இருக்கும். இது காலத்தின் கட்டாயமே.
யாரோ சொன்னதுபோல, இந்தியாவில் கம்யூஸ்ட்டுகள் இருக்கிறார்கள், ஆனால் கம்யூனிஸம் இல்லை. அது போல தமிழ் பாடல்கள் இருக்கின்றன, தமிழ் இசை இல்லை. மேற்கத்திய இசைக்கும், வாத்தியங்களுக்கும் நடுவே தமிழ் வரிகள் நிரப்படுகின்றன.
தமிழ் பாடலாசிரியர்கள் இந்த சவால்களை தாண்டி நல்ல கருத்தையும், கவித்துவமான விடயங்களையும் தர முயற்சிக்கிறார்கள். பாராட்டுக்கள்!.
வட்டத்திற்குள் வண்ணம் தீட்டுவது போல, பாடலாசிரியரின் வேலை அவ்வளவு எளிதானது அன்று.
மேலும், திரை பாடல் என்பது ஒரு கூட்டு முயற்சி. இசையமையப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சேர்ந்தே
ஒரு பாடலுக்கு உயிர் தருகின்றனர். மேலும் இந்த அணிக்கு வணிகரீதியான அழுத்தங்கள் வேறு.
இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் பாடலை கேட்டு நாம் "மொக்கை" என நொடியில் தீர்மானித்து விடுகிறோம்.
"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
"பெண் பார்த்தாய்" எனும் தலைப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியை நண்பர் ரவி இசை அமைத்து பாடலாக்க முயற்ச்சித்துள்ளார்.
" பெண் பார்த்தாய்,
நீ பெண் பார்த்தாய்,
பெண்ணையே பார்க்குமுன்
ஜாதகம் பார்த்தாய்,
பயோடேட்டா பார்த்தாய்,
நியூமராலஜியும் சேர்த்தே பார்த்தாய்! "
......
இங்கே ஓலி வடிவில் பாடலை
கேட்டு மகிழுங்கள்:
இங்கே முழு கவிதையை ஓலி வடிவில்
கேட்டு மகிழுங்கள்:
என் ஜன்னல் வழிப் பார்வையில்:
Facebook fan page:www.facebook.com/ejvpbook
Please share your feedback.
Saturday, August 2, 2014
நீங்கள் பேச்சிலரா (Bachelor) ?
வணக்கம், நீங்கள் ஒரு Bachelorரா?
ஆமாம் எனில் வாழ்த்துக்கள்!!. இல்லை எனில் நீங்கள் ஒன்றும் பெரிதாக
இழந்து விடவில்லை. ஏனெனில் நீங்களும் அங்கிருந்துதான் (பேச்சிலராக) வந்திருப்பீர்கள்.
நீங்கள் ஒரு பேச்சிலராக இருந்தாலும் ரொம்பவும் மகிழத் தேவை இல்லை.
ஏனெனில் நீங்களும் ஒரு நாள் மணம் புரியப் போகிறவர்தான். :)
"எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது"
-கீதாசாரம் போல ரொம்ப குழப்பமா இருக்கா? சரி விடுங்க..
ஒரு தகவல் இந்தியாவின் மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதிற்க்கு உட்பட்டவர்களாம். பேச்சிலர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்தியா ஒரு மகிழ்ச்சியான
நாடே. அதையும் விடுங்க.
சமீபத்தில் படித்த கீழ்க்கண்ட வாசகமே, இந்த கட்டுரையின் தொடக்கம்.
"இளைஞர்களே, உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிடுங்க. அதுக்கப்புறம் உங்களால டிவி சானலை கூட மாத்த முடியாது"
இதை படித்ததும், பேச்சிலர் பற்றிய என்னுடைய இந்த கவிதை ஞாபகம் வந்தது.
தலைப்பு: பேச்சிலர் (பேச்சு இலர்), "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
Bachelor ஆன நான் பேச்சிலர் ஆகிறேன்,
உன் அழகு முகம் பார்க்கையில்!
மூளை இருந்தும் முட்டாள் ஆகிறேன்,
உன் கயல் விழி பேசும் மொழி புரியாமல்!
மொழி ஆய்வாளர்களே,
உலக மொழிகளின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் பேசும்
விழி மொழியையும் சேர்த்து!
ஆராய்ச்சியாளர்களே,
உலகப் புரியாத புதிர்களின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் காட்டும்
கடைக்கண் பார்வையையும் சேர்த்து!
இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்:
முடிவா பேச்சிலர்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் இருக்கிறதில்லை,
கல்யாணமான எல்லாரும் சோகமாவும் இருக்கிறதில்லை.
மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்னு சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் மாதிரி முடிச்சுடுவோம்.
**

Sunday, July 13, 2014
கவிஞர் வைரமுத்து - ஒரு சந்திப்பு
இன்று July-13, கவிஞர் வைரமுத்துவின் 60வது பிறந்த நாள். அவரை பற்றி என்னுடய சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்பு திரைப் பாடல் வரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில், என்னை கவர்ந்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார். பள்ளி பாடங்களை தவிர்த்து அறிமுகமான முதல் தமிழ் கவிஞரும் அவரே.
தமிழ் பாடல்களை சித்தெறும்பு கடித்துக் கொண்டிருந்த நாட்களில் இவர் பாடல்கள் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. இளையராஜா, வைரமுத்து மோதல் என்பது இந்த உலகறிந்தது. அந்த காலகட்டத்தில் வைரமுத்து- ஏ.ர் ரகுமான் கூட்டணி வெற்றி பெற பிரார்தித்த நாட்களும் உண்டு.
தமிழ் நாளேடுகளை தாண்டி வானொலியில் அவருடைய குரலையும் தமிழையும் கேட்டு ரசித்தேன். அவை பெரும்பாலும் திரை சார்ந்ததாகவே இருந்தது.
கல்லூரி நாட்களில் அவருடைய கவிதைகளை அங்கென்றும் இங்கென்றுமாய் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது மலேசிய சந்திப்பு.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வேலை செய்யும்போது வைரமுத்துவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதுவும் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தேன். மேலும் அன்று அவரின் ஆட்டோகிராப் பெறும் பேறு பெற்றேன். அந்த நிகழ்வே கவிஞரின் கவிதைகளை மேலும் உள்ளார்ந்து படிக்கத் தூண்டியது.
கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல, அது ஓர் உணர்வு என்பது தெளிந்தது. இப்போது கூட கவிஞரின் மூன்று பக்கத்துக்கு மிகமான சில கவிதைகளை என்னால் மனப்பாடமாக சொல்லக் கூடும். (கவனிக்க: திரை பாடல்கள் அல்ல)
அவரின் எல்லா வகை படைப்புகளுடன் பயணித்ததில், திரைப்பட பாடல்களை தாண்டியது அவரது ஆளுமை என்பது என் எண்ணம். என்னை பாதித்த தமிழின் சொந்தகாரர் அவர். அவரின் பாதிப்பு இல்லாத இளம் கவிஞர்கள் இல்லை எனவே சொல்ல தோன்றுகிறது.
அவரை பற்றிய எளிய ரசிகன் என்னுடய கவிதை சில துளிகள்,
"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து
**************
"வடுகப்பட்டி தந்த வைரமே,
பொன்மாலைப் பொழுதில்,
ஒரு விடியலைத் தந்தவனே!
முண்டாசு, முரட்டு மீசை: பாரதி,
வெள்ளை ஜிப்பா, கருப்பு மீசை: வைரமுத்து,
தமிழனின் கடைசி அடையாளமாக
உன் மீசை!
...
அழகியலையும் அறிவியலையும்
புதுக் கவிதையில் கோத்து
மணம் வீசச் செய்தீர்!
....
தமிழ்ச் சாகரத்தின்
கலங்கரை விளக்கமே!
...
அரை நூற்றாண்டு கடந்தபின்பும்
தமிழ்ச் சமுதாயத்தில்
முதல் இளைஞனாக நீ,
தமிழின்
கடைசி நம்பிக்கையாகவும் நீயே!
"

இந்தியாவில் நூல்களை வாங்க:
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam

USAவில் நூல்களை வாங்க (PayPal):
Sunday, July 6, 2014
நடிகர் கமலும் ஜன்னலும்
என்னுடய "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியை
பரிசாக பெற ட்வீட் கவிதைப் போட்டியை முன்னேர் பதிப்பகம் அறிவித்து இருந்தது. மேலும் விவரங்கள் இங்கே
http://munnerpathippagam.wordpress.com/2014/06/30/ejvptwpt/
இப் போட்டிக்கான மூன்று வெற்றிக் கவிதைகளை தேர்ந்தேடுக்கும் பொறுப்பை நண்பர் திரு.சொக்கன் என்னிடம் விட்டு விட்டார்.
"ஜன்னல்" என்ற சொல்லே வசீகரமானதாகவும் அதில் ஓரு மந்திரம் இருப்பதாகவும் எண்ணுகிறேன்.
அதில் ஒரு நெடும் கனவு, நிறைவேறாத ஆசை, பொழுதுபோக்கு என சகலமும் சம்பந்தப்படுகிறது. அதனாலயே ஜன்னல் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக ஒரு எண்ணம். கண்டிப்பாக உங்கள் வாழ்விலும் ஜன்னல் பற்றிய ஏதேனும் ஒரு நினைவு இருக்கும். அது வீடு,பள்ளி,கல்லூரி அல்லது
மேலும் மொழி வேறுபாடின்றி ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். "ஜன்னல்" பற்றி பல கவிதைகள் மற்றும் கதைகளையும் கடந்து வந்தாலும் முதலில் மனத்தில் நிழலாடுவது கவிஞர் மு.மேத்தா அவர்களின் இந்த கவிதை.
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.
- கவிஞர்மு.மேத்தா
இது ஒரு மூச்சில் படித்து விட்டு, நாம் கடந்து செல்ல கூடிய கவிதையல்ல, ஆயிரம் கதை சொல்லக் கூடியது. மன ஏக்கத்தை மிக அழகாக சொல்கிறது.
என்னை கவர்ந்த இன்னொரு "ஜன்னல்" கவிதை நடிகர் கமல் எழுதியது.
(பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது கனடாவில் அவர் எழுதியதாக,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் குமுதம் நாளிதழில் படித்த
நினைவு)
என் ஜன்னல்வழிப் பார்வை
கலிலியோவின் உலகை சதுரமாக்கியது
-உலக நாயகன் கமல்ஹாசன்
பரிசாக பெற ட்வீட் கவிதைப் போட்டியை முன்னேர் பதிப்பகம் அறிவித்து இருந்தது. மேலும் விவரங்கள் இங்கே
http://munnerpathippagam.wordpress.com/2014/06/30/ejvptwpt/
இப் போட்டிக்கான மூன்று வெற்றிக் கவிதைகளை தேர்ந்தேடுக்கும் பொறுப்பை நண்பர் திரு.சொக்கன் என்னிடம் விட்டு விட்டார்.
எதிர்பார்த்ததை விட அதிக படைப்புகள், கொஞ்சம் சிக்கலான வேலைதான்.
:) போட்டியின் முடிவுகளுக்கு செல்லும்முன் ஜன்னல் பற்றி சில வார்த்தைகள்."ஜன்னல்" என்ற சொல்லே வசீகரமானதாகவும் அதில் ஓரு மந்திரம் இருப்பதாகவும் எண்ணுகிறேன்.
அதில் ஒரு நெடும் கனவு, நிறைவேறாத ஆசை, பொழுதுபோக்கு என சகலமும் சம்பந்தப்படுகிறது. அதனாலயே ஜன்னல் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக ஒரு எண்ணம். கண்டிப்பாக உங்கள் வாழ்விலும் ஜன்னல் பற்றிய ஏதேனும் ஒரு நினைவு இருக்கும். அது வீடு,பள்ளி,கல்லூரி அல்லது
ரயீல், பேருந்து என எதனுடாவது தொடர்புகொண்டு இருக்கும்.
மேலும் மொழி வேறுபாடின்றி ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். "ஜன்னல்" பற்றி பல கவிதைகள் மற்றும் கதைகளையும் கடந்து வந்தாலும் முதலில் மனத்தில் நிழலாடுவது கவிஞர் மு.மேத்தா அவர்களின் இந்த கவிதை.
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.
- கவிஞர்மு.மேத்தா
இது ஒரு மூச்சில் படித்து விட்டு, நாம் கடந்து செல்ல கூடிய கவிதையல்ல, ஆயிரம் கதை சொல்லக் கூடியது. மன ஏக்கத்தை மிக அழகாக சொல்கிறது.
என்னை கவர்ந்த இன்னொரு "ஜன்னல்" கவிதை நடிகர் கமல் எழுதியது.
(பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது கனடாவில் அவர் எழுதியதாக,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் குமுதம் நாளிதழில் படித்த
நினைவு)
என் ஜன்னல்வழிப் பார்வை
கலிலியோவின் உலகை சதுரமாக்கியது
-உலக நாயகன் கமல்ஹாசன்
இந்த இருவரிகளும் ஆழ்ந்த கருத்துடையது. இந்த வரிசையில் என்னுடைய "ஜன்னல்" முயற்சியை இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.
இந்தியாவில் நூல்களை வாங்க:
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam
USAவில் நூல்களை வாங்க (PayPal):
Facebook fan page:www.facebook.com/ejvpbook
கவிதை போட்டியின் முடிவுகள் மிக விரைவில். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிகநன்றி, வென்ற மூவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
போட்டி முடிவுகள் இதோ :
http://munnerpathippagam.wordpress.com/2014/07/10/ejreslts/
அன்புடன்,
ஆரூர் பாஸ்கர்.
Subscribe to:
Posts (Atom)