குவிகம் நடத்தும் குறும் புதினப் போட்டி
கலையும் மௌனம்
எனது எண்ணங்களும் அனுபவங்களும் இங்கே..
Saturday, October 4, 2025
Saturday, June 28, 2025
சிறப்பித்த சிறகுகள்- வாழ்த்துகள் மாணவர்களே !
சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலிடம்: இ.அகல்யா- பரிசுத் தொகை ரூ-5000 /- , இரண்டாம் இடம்: அ.அனுஸ்ரீ- பரிசுத் தொகை 2500/-, மூன்றாம் இடம்: வி.மாதேஸ்வரி, த.செமிலா, ஜோ.ஜெபஸ் ராஜா-பரிசுத் தொகை ரூ 1000/-
இந்த ஊக்கத் தொகையுடன், கேடயமும், சான்றிதழ்களும் வழங்கினோம். நிகழ்வில் சிறப்பிக்கப்பட்ட மாணவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகள் !
Sunday, January 26, 2025
Monday, January 13, 2025
கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2025
மூன்று சிறுகதைகள் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை 6000 ரூபாய். மேலதிக விவரங்கள் கீழே...
Tuesday, December 31, 2024
2024: உள்ளேன் ஐயா !
2024-ஆம் ஆண்டை வழியனுப்பி, திரும்பிப் பார்க்கும் இந்த நேரத்தில் வலை நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
கடந்த ஆறு மாதங்களாக நான் வகுப்பில் "உள்ளேன் ஐயா" சொல்லிக்கொண்டிருக்கிறேன் நண்பர்களே. ஆமாம்... அமெரிக்க மண்ணில் அமெரிக்கர்களோடு இணைந்து பயில வேண்டும் எனும் இலட்சியக் கனவு நனவாகி இருக்கிறது.
அமெரிக்கக் கல்லூரியில் எம்பிஏ (MBA) எனும் தொழில் நிா்வாக முதுநிலைப் பட்டத்தை வார இறுதி வகுப்பாக படித்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன ஒரு குறை? கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதனால் என்ன? வீட்டின் அடுத்த தலைமுறை கல்லூரிக்குள் நுழையும் முன்பு இதை செய்த முடிந்ததே என நினைத்துக் கொள்கிறேன். மனதுக்கும், படிப்புக்கும் வயதில்லை தானே.
Sunday, September 1, 2024
ஓய்வு தந்த பாடம்
வாசிப்பதில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தபோது தோன்றியது;
பொதுவாக 'தீவிர இலக்கிய வாசிப்பு' என்பது அதிக உழைப்பைக் கோரும் ஒன்று என்பது பலருக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால், வாசிப்பு என்பதே படிப்பவர்களின் மெனக்கடலை கொஞ்சமேனும் கோரும் ஒன்றாக இருக்கிறது (அதை உழைப்பு எனச் சொல்லத் தேவையில்லை).
பொழுது நன்றாக போகும். உங்களைச் சுற்றி இருக்கும் பல இலட்சம் பேர் அதைத் தான் செய்துகொண்டிருப்பார்கள். தேவைப்பட்டால் அதுபற்றி சிலாகித்து விவாதிக்கவும் தயாராக இருப்பார்கள். அதனால்தான் அது வெகுஜன ஊடகம். (வாசிப்பதின் சாதக பாதகங்கள் பற்றி இப்போது விவாதிக்கவேண்டாம்).
வாசிப்பதில் இருந்து விலகுவது என்பது எளிதாக இருந்தாலும், மனதை ஒருமுகப்படுத்தி மீண்டும் அதற்குள் நுழைவது என்பது கொஞ்சம் சிரமம்தான். அதிலும் குறிப்பாக, வாசிப்புக்கு என மற்ற ஊடகங்கள் போல புற அழுத்தங்கள் எதுவும் பெரிதாக இல்லை. விளம்பரங்கள் கிடையாது என்பதால் அதில் மீண்டும் நுழைவதற்கு நம்மிடம் வேறு பல வலிமையான காரணங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
அது நீண்ட நாள் நுகர்வின் வழியாக வந்த வாசிப்பின் சுவையாக இருக்கலாம். இல்லை நானெல்லாம் சராசரிக்கு சற்று மேலே எனும் கர்வமாக கூட இருக்கலாம். :)