ஒருநாள் மதிய உணவுக்குப்பின் லேசாக கண் அசரும் சமயத்தில் வந்த
அந்தப் போனை பதறியடித்து எடுத்துப் பேசினேன். உடைந்த ஆங்கிலத்தில்
ஒரு பெண் குரல். மெக்சிகன் உணவகத்தில் இருந்து பேசுவதாகச் சொன்னாள்.
நடந்தது இதுதான் . கடந்த வாரம் நான் அங்கே போயிருந்த போது
எனது கிரெடிக்கார்டு ரசீதில் ஒரு சின்னக் குளறுபடி செய்துவிட்டார்கள். அதாவது அசலான தொகைக்கு பதிலாக இரண்டு மடங்கு எடுத்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அது ருசியும், தரமும் இல்லாத உணவு. மாத இறுதியில் அது எப்படியோ எத்தேர்சையாக என் கண்ணில் பட, நல்ல சாப்பாட்டுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு எதற்கு? அநியாயம் என நினைத்து அவர்களை இரண்டு முறை அழைத்து புகார் சொல்லியிருந்தேன்.
அதற்காக அழைத்தவள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாள். ' பராவாயில்லை, அடுத்து நடக்கவேண்டியதை சொல்லுங்க' என்றேன்.
' உங்க கிரெடிக் கார்ட் நம்பரைக் கொடுங்க' என வாங்கி கொண்டவர்கள், பாக்கியை திரும்ப அனுப்பிவிடுவதாக சொன்னார்கள்.
பிறகு கொஞ்சம் தயக்கத்தோடு, 'நடந்த தவறுக்கு நீங்களும் ஒரு
காரணம்' என்றாள். நான் குழப்பத்தோடும், கடுப்போடும் 'புரியலயே' என்றேன். 'உங்க போனுக்கு ரசீதின் நகலை அனுப்பியிருக்கேன், பாருங்க 'என்றாள். பார்த்த பிறகு புரிந்தது. 'டிப்' என்ற இடத்திலும், 'மொத்தத் தொகை' என்ற இரண்டு இடங்களிலும் '$20' என எழுதியிருக்கிறேன்.
வேறு வழியில்லாமல். ' ஓ.. ஓகே... என வழிந்துவிட்டு , இவ்வளவு நல்லா இங்கிலீஸ் பேசும் உங்க பேரு என்ன ?' எனக் கேட்டு சமாளித்தேன்.
' தேங்யூ ' என வெட்கப் புன்னகை பூத்தவள். ' லோலோ' என்றாள்.
#கஸ்டமர்_கஷ்டங்கள்