கலையும் மௌனம்
எனது எண்ணங்களும் அனுபவங்களும் இங்கே..
Saturday, October 17, 2026
சாயாவனம் நாவல் - எழுத்தாளர் சா. கந்தசாமி
Tuesday, October 6, 2026
தமிழில் “One-hit-wonder“ செய்தவர்கள்
மாதமொருமுறை , இரு முறை அல்லது நேரம் கிடைக்கும் போது வாசிப்பு, தமிழ் எழுத்துலகம் குறித்து ஃபோன் செய்து பேசும் ஒரு சில நண்பர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கும் எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தமும் ஒருவர்.
அரவிந்த் கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர், திரைப்பட வசனகர்த்தா என்றெல்லாம் அவர் குறித்து தனியாக ஒரு பதிவே எழுதவேண்டும். ஆனால், நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல.
கடந்த வாரம் அவருடன் பேசும் போது திடீரென இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான மனோஜ் நைட் சியாமலான் (M. Night Shyamalan) குறித்த பேச்சு வந்தது. சியாமலான் தனது The Sixth Sense வெற்றிப் படத்தின் வழியாக உலகப்புகழ் பெற்றவர். இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ பெற்ற இவர் தொடர்ச்சியாக மர்மம், அமானுஷ்யம் மற்றும் உளவியல் தொடர்பான பல படங்கள் எடுத்தாலும் அவரால் தனது Sixth Sense படத்தின் வெற்றியை மீண்டும் தொட இயலவில்லை.
வேண்டுமானல், அவருடைய Signs படத்தை Sixth Sense படத்துக்கு இணையாக சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி தொடர்ச்சியாக அவரால் மக்களின் எதிர்பார்ப்பை பெரிதாக பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதே உண்மை. இப்படி உலகம் முழுவதும் பல கலைஞர்கள் தங்களுடைய சொந்த சாதனையை தங்களால் முறியடிக்க இயலாமல் இறுதியில் கரைந்து போகிறார்கள். உண்மையில் யாருக்கும் தான் ஒரு மோசமான ஒரு படைப்பைத் தரவேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இல்லை என்றாலும் ஏனோ கலை கைகூடி வருவதில்லை அல்லது அது கோரும் உழைப்பை அவர்கள் தருவதில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
இதையெல்லாம் வென்று காலம் கடந்து நிற்கும் பல சாதனைகளைச் செய்தவர்களையே உலகம் “லெஜண்ட்”எனக் கொண்டாடுகிறது. மற்றவர்களை சமூகம் “One-hit wonder“ செய்தவர்கள் என எளிதாக ஒதுக்கி வைத்துவிடுகிறது.
தமிழில் “One-hit wonder“ செய்தவர்கள் பட்டியல் இருக்கிறதா என்ன ?
நன்றி- படம் இணையம்.
Sunday, September 27, 2026
முதுமை இனிக்க - எழுத்தாளர் இந்திரனின் 10 விதிகள்
முதுமை இனிக்க என எழுத்தாளர் இந்திரன் அவர்கள் முகநூலில் எழுதிய பத்து விதிகள் கீழே...
2) நாம் இல்லாமல் பிள்ளைகள் என்ன ஆவார்களோ என்றுகவலைப்படாதீர்கள்.
3) நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும். தினந்தோறும் சந்தோஷமாய் இருப்பதை கடமை போல் நிறைவேற்றுங்கள்.
4) வயது ஏற ஏற உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விடுவார்கள். அவர்கள் மேல் பொறாமை படாமல், போட்டி போடாமல் அவர்கள் மேலும் முன்னேற உங்கள் அனுபவத்தைக் கொடுங்கள்.
5) முதுமையில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மறையத் தொடங்குவார்கள். அவர்களோடு உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கருதாதீர்கள்.
6)தனிமையில் உங்களை நீங்களே கவனித்து தனிமையில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.
7) வயது ஏற ஏற புதிய புதிய நோய்கள் வரும். புலம்பாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுறுசுறுப்பாக இருங்கள்.
8) ஓய்ந்து படுத்து விடாமல் உடலுக்கு நிறைய வேலை கொடுங்கள். அதுவே உடற்பயிற்சியும் ஆரோக்கியமும்.
9) படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமை வரும்போது உங்களுக்கு சேவை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
10) அடுத்த பிறவி,சொர்க்கம்,நரகம் பற்றி அட்வான்ஸ் புக்கிங் பண்ணாமல் தற்காலத்திலேயே சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
Wednesday, September 23, 2026
அமெரிக்கா செல்வதற்கு மறைமுக விலைகள் - எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா- அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.
Saturday, August 29, 2026
ஸ்பெயின் ரசிகையின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்
கடந்த 19 ஜூலை 2026 அன்று, அர்ஜென்டினா - ஸ்பெயின் இடையேயான உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியை பெரிய திரையில் காண நாங்கள் அமெரிக்காவின் ஃபிளாரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லோண்டா (Orlando) நகருக்கு சென்றிருந்தோம். அதிக மக்கள் கூட்டத்தோடு இந்தப் போட்டியை பார்த்தது உற்சாகமாகவே இருந்தது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, இது கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நீளும் கடும் மோதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றாற் போல ஸ்பெயின் ஆக்ரோஷ பாணியில் விளையாடிக் கொண்டிருக்க அர்ஜென்டினாவோ தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
ஆனால் என்ன, இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோலுக்காக இரசிகர்களாகிய நாம் 105 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பெட்ரோ போரோ பந்தை பின்புற கம்பத்தை நோக்கி துல்லியமாக அனுப்பினார். அந்த வாய்ப்பை தவறவிடாத ஃபெர்ரன் டோரஸ், அற்புதமாக ஷாட்டால் அதை கோலாக மாற்றினார்.
பிறகென்ன எங்கும் மகிழ்ச்சி ஆராவராம் தான். மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு ஸ்பெயின் இரசிகையின் முகத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.
தமிழக அரசின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு- 2025 (காலநீட்டிப்பு)
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் நிறைவுசெய்து அளிக்கப் பெறும் நாள் 05.10.2026 வரை நீட்டிப்பு செய்யப்பெறுகிறது.



.jpg)


