Sunday, November 22, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-3

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் இரண்டாம் பகுதியில், நியூ ஆர்லியன்ஸை 2005ல் தாக்கிய கத்ரீனா சூறாவளி அதில் மக்கள் பட்ட அவதி குறித்து பார்த்தோம். அதை வாசிக்கத் தவறியவர்கள்  இங்கே வாசிக்கலாம்.

அந்த இக்கட்டான சூழ்நிலையை  கட்டுப்படுத்த யாரை  ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். நியூ ஆர்லியன்ஸ் அனுப்பினார் தெரியுமா ? எனக் கேட்டிருந்தேன்.

அப்படி அனுப்பட்டவர் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் "ரசல் எல் ஹானோரெ" (Russel L. Honoré). இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு பிறந்தவர் ஆம். 1947ல் பிறந்தவர். அவரோட படம் கீழே.


இவர் அமேரிக்க ராணுவத்தில் மிகவும் அனுபவமுள்ளவர் மற்றும் பல உயர்ந்த பதவிகளில் இருந்தவர்.  தென் கொரியாவில் வெள்ள நிவாரணப் பணிகளில் இவருக்கு இருந்த அனுபவத்தாலும், இவருடைய தலைமைத்துவ  பண்புகளாலும் இந்த பணிக்காக  தேர்வு செய்யப்பட்டார்.பதவி ஏற்றபின் புயல்  மற்றும் வெள்ள நிவாரணத்துக்காக ஏறத்தாழ 58,000 தேசிய பாதுகாப்புப் படையினருடன் நியூ ஆர்லியன்ஸ் வந்து இறங்கினார்.


தேவையான படை பலம் இருந்தாலும் இவருக்கு முன்னால் மிகப் பெரிய சவால் ஓன்று இருந்தது.  அது ஏழை மக்களை உள்ளூர்,மாநில, மத்திய அரசாங்கங்கள் கைவிட்டுவிட்டன, அவர்கள் உதாசினப் படுத்தப்படுகிறார்கள் என்பது.

அந்த பிம்பத்தை உடைத்தெடுத்து அந்த மக்களை  அரவணைத்து, நகரையும் இழந்த நற்ப்பெயரையும் மீட்டெடுக்க வேண்டியது என்பது மிகவும் கடினமானதோரு இலக்கே. அந்த வேலையை எப்படி கச்சிதமாக முடித்தார் என்பதே இவரை மிகச்சிறந்த கதாநாயகனாகவும், உயரிய வழி காட்டியாகவும் இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது.

இவருடைய வெளிப்படையான, நம்பகப்பூர்வமான, அதிரடி நடவடிக்கைகள் அந்த இக்கட்டான சூழ்நிலையை  முற்றிலும் மாற்றியது. மிகச்சிறப்பாக அந்த  பணியை தனது குழுவினருடன் செய்து முடித்தார். ஓரு நல்ல லீடருக்கு இதை தாண்டி வேறேன்ன பெருமை வேணும் ? 
                                                           (ஜார்ஜ் புஷ் உடன்)

உதாரணமாக, ஓருநாள் துப்பாக்கியை உயர்த்தி பிடித்தபடி தெருவில் நின்ற சிப்பாய்களை அதட்டி,  "நாம் இங்கே போருக்கு வரவில்லை, மக்களை காப்பாற்ற வந்திருக்கிறோம்". என தடித்த குரலில் இவர் ஆணையிடும் ஓரு காட்சி டி.வியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது அவருடைய வெளிப்படையான தன்மைக்கு ஓரு நல்ல சான்று.


தன்னுடைய பணிக்காக பல உயரிய விருதகளையும் பெற்றுள்ளார். அதில் குறிப்பிடத் தகுந்தது Key to the City Award to New Orleans.

ஓய்வு பெற்றபின் தலைமைத்துவ பண்புகள், ஊக்கமூட்டும் உரைகள் அல்லது motivational speech, தன்முனைப்பு தொடர்பான உரைகளை  இவர் வழங்கி வருகிறார்.

நான் நியூ ஆர்லியன்ஸில் கலந்து கொண்ட கருத்தரங்கில் இவர்தான் சிறப்புரை ஆற்றினார். சுமார் 30 நிமிடங்கள் "21ம் நூற்றாண்டில் தலைமைத்துவ பண்புகளின் தயார்நிலை" (The New Normal- Leadership and Preparedness in 21st Century)  எனும் தலைப்பில் பேசியவர் தனது பேச்சால் ஓரு அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதிலிருந்து சில துளிகள்.

1. தொழில்நுட்பம் உலகின் கடைகோடி ஏழைக்கும் சேரக் கூடியதாக இருக்க வேணும்
2. சாத்தியமற்றதை சாத்தியப்படுத்த தொழில்நுட்பத்தை நம்புங்கள்
3. ஆக்கப்பூர்வமான சிந்தனையின் அவசியத்தையும், ஜார்ஜ் வாஷிங்டனையும் மேற்கோள் காட்டினார். 

கான்பிரன்ஸில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றமைக்காக தனது LEADERSHIP - In the New Normal என்ற புத்தகத்தை  எனக்கு பரிசாக தந்த போது எடுத்த படம்.

கழுத்துல எதுக்கோ செயின் போட்ட மாதிரி இருக்கே? ன்னு நீங்க கேக்குறது, எனக்கு காதல விழவே இல்லயே  !!! :)


முதல் பக்கத்தில் எனது  பெயரை எழுதி ஆட்டோகிராப் போட்டார்.ஆட்டோகிராப் போட்டுட்டு ஓரு ஜோக்க சொல்லிட்டு எப்படி அட்டகாசமா சிரிக்கிறார் பாருங்க. அது என்ன ஜோக்குன்னு தெரிஞ்சுக்க அடுத்தவாரம் வரை வெயிட் பண்ணுவீங்க தானே ? :)

அவரைப் பற்றி மேலும் தகவல் அறிய:
https://en.wikipedia.org/wiki/Russel_L._Honor%C3%A9

பயணங்கள் முடிவதில்லை...

நன்றி:  GOOGLE Images

No comments:

Post a Comment