Sunday, September 15, 2024

வனநாயகன் குறித்து-37 (என்னைப் படிக்கத் தூண்டிய இரண்டு விஷயங்கள்)

வனநாயகன்-மலேசிய நாட்கள் குறித்து அமேசான் இணையதளத்தில் Hari எனும் வாசகர் எழுதிய ஒரு கருத்து இன்று கண்ணில் பட்டது. நன்றி நண்பரே !!




// இரண்டு விசயங்கள் எனக்கு இந்தப் புதினத்தைப் படிக்க தூண்டியது.

1. IT company 

2. வெளிநாட்டில் வாழும் இந்தியன்.

எனது ஆரம்பகல Singapore அனுபவம் மற்றும் KL/Genting -ஐயும் வருடி சென்றது.
ஒரு நல்ல திர்ல்லேர் ஆக தொடங்கி சற்று சாதரணமாக முடிந்தது போல இருந்தது.
//



Sunday, September 1, 2024

ஓய்வு தந்த பாடம்

வாசிப்பதில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தபோது தோன்றியது;

பொதுவாக 'தீவிர இலக்கிய வாசிப்பு' என்பது அதிக உழைப்பைக் கோரும் ஒன்று என்பது  பலருக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால், வாசிப்பு என்பதே படிப்பவர்களின் மெனக்கடலை கொஞ்சமேனும்  கோரும் ஒன்றாக இருக்கிறது (அதை உழைப்பு எனச் சொல்லத் தேவையில்லை).



ஆனால், மற்ற காட்சி ஊடகங்கள் அப்படியில்லை. அது  காதல், கவர்ச்சி, நகைச்சுவை என அனைத்து ரசங்களையும்  தூண்டி பார்ப்பவர்களை உள்ளே எளிதாக  இழுத்துக்கொள்கிறது. அதிக தனிக்கவனம் தேவையில்லாத எளிமையான ஒன்றும்கூட. 

பொழுது நன்றாக போகும். உங்களைச் சுற்றி இருக்கும் பல இலட்சம் பேர் அதைத் தான் செய்துகொண்டிருப்பார்கள். தேவைப்பட்டால் அதுபற்றி சிலாகித்து விவாதிக்கவும் தயாராக இருப்பார்கள். அதனால்தான் அது வெகுஜன ஊடகம். (வாசிப்பதின் சாதக பாதகங்கள் பற்றி இப்போது விவாதிக்கவேண்டாம்).

வாசிப்பதில் இருந்து விலகுவது என்பது எளிதாக இருந்தாலும், மனதை ஒருமுகப்படுத்தி மீண்டும் அதற்குள் நுழைவது என்பது கொஞ்சம் சிரமம்தான். அதிலும் குறிப்பாக, வாசிப்புக்கு என மற்ற ஊடகங்கள் போல புற அழுத்தங்கள் எதுவும் பெரிதாக இல்லை. விளம்பரங்கள் கிடையாது என்பதால் அதில் மீண்டும் நுழைவதற்கு நம்மிடம் வேறு பல வலிமையான காரணங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

அது நீண்ட நாள் நுகர்வின் வழியாக வந்த வாசிப்பின் சுவையாக இருக்கலாம். இல்லை நானெல்லாம் சராசரிக்கு சற்று மேலே எனும் கர்வமாக கூட இருக்கலாம். :)