இந்திய மொழிகளில் இலக்கியத்தின் உயரிய விருதாக கருதப்படும் சாகித்திய அகாதமியின் தமிழ்மொழிக்கான யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல்கள்:
Sunday, June 23, 2024
Sunday, June 2, 2024
முழி பெயர்ப்பு
தமிழ்நாட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் அது. அவர்கள் விழா ஒன்றுக்கு அச்சடித்த ஓர் அழைப்பிதழை மொழிபெயர்க்கச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
அங்கே வேலைபார்க்கும் சிலர் அதை அதற்கு முன் இயந்திர மொழி(முழி) பெயர்த்து இருந்தார்கள். சகிக்கவில்லை.
உதாரணமாக ஒன்றைத் தருகிறேன்.
"We Cordially Invite You to Visit Us" - என்பதை "அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்வையிட".
இது எப்படி இருக்கு ??
Monday, May 20, 2024
வனநாயகன் குறித்து-35 (It's actually a thriller story with lot of twists)
வனநாயகன் குறித்து நண்பர் Saravanan Gnanasekaran மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.
//
Sunday, May 19, 2024
தட்டையான மொழிபெயர்ப்பு
நம்மூர் ஆட்கள் Google translation ஐ வைத்து மற்ற மொழி நூல்களை மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படியெல்லாம் குருட்டாம்போக்கில் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது பலகீனமான ஒரு துறையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது மேம்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாசிப்பனுபவத்தோடு, நமது பண்பாட்டுக் கூறுகளோடு, நுட்பமான இலக்கிய நாட்டமும் இருக்கும் போது ஒரு படைப்பு மேம்படுகிறது.
இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு செய்வது பயனற்ற ஒன்று.
உதாரணமாக 'அவனுக்கு குறிஞ்சி பூத்தது' என்ற ஒரு வரி வருகிறது இதை எப்படி ஒரு வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பது ? சொல்லுங்கள்.
அடுத்து, 'அவள் காய்சிய பால் போன்றவள்' எனும் வரியின் உள்ளர்த்தம் தமிழ் பண்பாட்டு தெரிந்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.
ஆனால், அதை தட்டையாக மொழிபெயர்த்து விட்டால்? அதன் உட்பொருள் மறைந்துவிடுமே ? என்ன செய்வது...
அடுத்து 'மூத்த மருமகனான அவனுக்கு மாமியார் வீட்டில் எப்போதும் பூரண கும்ப மரியாதைதான்'
இதையெல்லாம், தமிழில் இருந்து ஒரு இயந்திரம் மொழிபெயர்ப்பு செய்துவிடுமா என்ன ? செயற்கை நுண்ணறிவு மூழமாக இனி செய்யலாம். ஆனால், அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
Friday, May 3, 2024
வால்மார்ட்(Walmart) -இல் வனநாயகன்
வால்மார்ட்(Walmart) -இல் வனநாயகன்
'இப்ப உங்க வனநாயகன் வால்மார்ட்டில்(Walmart) கிடைக்குதே...! ' என ஒரு அமெரிக்க நண்பி உள்பெட்டியில் வந்து அதிசயித்தார். 'அதிசயிக்கும் நீங்கள் 8-வது அதிசயம்' என அறுக்காமல் விசயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டேன்.
விசயம் இதுதான். அமெரிக்க வாசகர்கள் படித்து இன்புறும் வகையில் யாரோ வனநாயகன் (மலேசிய நாட்கள்) நாவலை வால்மார்ட் தளத்தில் $22 டாலருக்கு விற்பனை செய்கிறார்களாம்.
யாரும் அவ்வளவு கொடுத்து சிரமப்படவேண்டியதில்லை. அதில் பாதி விலைக்கே அமெரிக்காவின் எந்த மூலைக்கும் Media Mail-இல் நானே அனுப்பிவைப்பேனே.. எனச் சொல்லி அவரை அமைதிப்படுத்தினேன்.
வனநாயகன் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பின்பும் இப்படித் தொடர்ந்து வாசிக்கப்படுவது மகிழ்ச்சி.
மனத்தளவில் சோர்ந்து போகும்போதும், தளர்வடையும் போதும் அதுவே எனக்கு உற்சாகம் தரும் டானிக்.
Saturday, April 27, 2024
வனநாயகன் குறித்து-34 (நல்லவேளை இந்த நாவலை என் மனைவி படிக்கவில்லை)
Saturday, April 13, 2024
சாட்ஜிபிடி-க்கு போட்டி - Perplexity.ai
சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாப்ட் கோ-பைலட்(Microsoft Copilot) போன்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-களுக்கு போட்டியாக 'பிர்ப்லக்ஸிட்டி '(Perplexity.ai) வந்திருக்கிறது. வழக்கம் போல், 'யார் ஆரூர் பாஸ்கர் ?' என்ற கேள்வியைக் கேட்டபோது perplexity அளித்த பதில் நிறைவளிக்கக் கூடியதாக இருந்தது.
கூடவே, எதை ஆதாரமாகக் கொண்டு நமக்கு பதில் தருகிறது என்பதற்கு source link-ஐயும் தருகிறது. நாம் கேட்ட கேள்விகளை வைத்து அடுத்து என்னென்ன கேள்விகளைத் தொடர்ச்சியாக கேட்கலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறது. இதனால் நாம் ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது.
சாட்ஜிபிடி-யின் செயல்திறனில் திருப்தி இல்லாதவர்கள் perplexity.ai -ஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே... பிர்ப்லக்ஸிட்டி (perplexity, n) என்பதைத் தமிழில் குழப்பம் அல்லது சிக்கலான, கடினமான சூழல் என பொருள் கொள்ளலாம்.