Friday, December 30, 2016

2016ல் வாசித்தவை - ஒரு பார்வை

நண்பர்களே,

பலரும் தங்களின்  2016 புத்தகப்பட்டியலை பகிர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், வருடக் கடைசி என்றால் அந்த வருடம் வாசித்த எல்லா புத்தகங்களையும்  பட்டியலாக சொல்லியே ஆகவேண்டும் என்பது கட்டாயமோன்றுமில்லை.

ஆனால், வாசித்த புத்தகங்களின் தலைப்புகளையேனும் மேலோட்டமாக ஒரு பருந்து பார்வை பார்ப்பதில் கண்டிப்பாக சின்ன திருப்தி இருக்கிறது. அதைத்தாண்டி முக்கியமாக அந்த வருடத்தில் நாம் எந்த  வகையான (genre) புத்தகங்களைப் படித்திருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்ப்பதும் அவசியமாகிறது. அது நாம்  வாசிப்பில் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்தி தேவைப்பட்டால் நம்மை சரிசெய்து கொள்ள உதவும்.

அதுமட்டுமல்லாமல் புதிதாக வாசிக்க வருவர்களுக்கும் நமது பட்டியல் ஒரு நல்ல அறிமுகமாகவும் இருக்கும்.

எனக்கு கடந்த வருடம் இந்தமாதிரியான புத்தகங்களைதான் வாசிக்கவேண்டும் எனும் பெரிய திட்டங்களோ முன்னேற்பாடுகளோ எதுவுமில்லை.  2016ஐ திரும்பிப் பார்க்கையில் நான் கையில் கிடைத்த புத்தகங்களையும்,  நண்பர்கள் பரிந்துரைத்தவற்றையும் வாசித்திருக்கிறேன்.  2017ல் அதைக் கொஞ்சம்  முறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்.

 2016ல் திட்டமிட்டிருந்த இன்னோரு விசயம் புத்தக   வாசிப்புக்கு பின் முடிந்தவரை  மனத்தில்  தோன்றியதை விமர்சமாக எழுதவேண்டும் என்பது. அதில் கொஞ்சம் வெற்றி  பெற்றிருப்பதாகவே
நினைக்கிறேன்.  எழுதிய விமர்சனங்கள் பல இணையகளிலும், ஏன் அச்சு இதழ்களிலும் வெளியானதும்   மகிழ்ச்சியே.  அந்த உத்வேகத்தோடு 2017ல் காலடி வைக்கிறேன்.

அதிகம் மெனக்கெடாமல் முதலில்  ஆங்கில புத்தகங்களைப் பார்த்துவிடலாம்.

A Wicked History 20th Century, Idi Amin by Steve Dougherty
The MotorCycle Diaries - Che Guevara

தமிழில் வாசித்தவை.

புதினங்கள் (நாவல்கள்)
****
சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
கெடைகாடு - ஏக்நாத்
எங் கதெ - இமையம்
ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்
பருக்கை - வீரபாண்டியன்
சாயாவனம் -சா.கந்தசாமி
சின்னு முதல் சின்னு வரை - வண்ணதாசன்
24 ரூபாய் தீவு - சுஜாதா

சிறுகதைகள்
****
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் -நாஞ்சில் நாடன்
அறம் - ஜெயமோகன்
கனவுப் பட்டறை -மதி
பாக்குத்தோட்டம்-பாவண்ணன்
25 வருடக் கதை - ஸ்டெல்லா புரூஸ்

பொது
***
கற்க கசடற ( விற்க அதற்குத் தக) - பாரதி தம்பி
பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் -கவிக்கோ ஞானச்செல்வன்
தமிழர் நாட்டுப் பாடல்கள்-நா.வானமாமலை
அரசியல் பழகு - சமஸ்
உபசாரம்-சுகா

கவிதைகள்
***
கவிஞர்களும் களங்களும் - கலைபாரதி
துயரங்களின் பின்வாசல் - கவிஞர் உமா மோகன்
ஊழியின் தினங்கள் -மனுஷ்ய புத்திரன்

இந்தப் பட்டியல் முழுமையானதாக இருக்கும் என நம்புகிறேன். ஆனால், வனநாயகனுக்காக வாசித்த மலேசியா தொடர்பான புத்தகங்களையும், கணினியில் வாசித்தவைகளையும், அலுவலகத்துக்கு பயணிக்கையில் கேட்கும் ஆடியோ சிடிக்களையும் இந்தப் பட்டியலில் இருந்து தவிர்த்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை  வாசித்தலே ஒருவனின் இருத்தலை இவ்வுலகுக்குச் சொல்கிறது என  நம்புகிறவன்.  தமிழ், ஆங்கிலம்
அல்லது ஏதோ ஒரு மொழியில் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த 2017 புத்தாண்டு வாழ்த்துகள்!

7 comments:

 1. வாழ்த்துகள் சார்...வாசிப்புதான் மனிதனை உயிர்போடு வைத்திருக்கும்.அ.கோ.வி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி.முடிந்தால் நீங்களும் வாசித்த்தைப் பகிருங்கள்.

   Delete
 2. வாழ்த்துகள் சார்...வாசிப்புதான் மனிதனை உயிர்போடு வைத்திருக்கும்.அ.கோ.வி.

  ReplyDelete
 3. இனியபுத்தாண்டுகள்மலரட்டும்!

  தொடரட்டும் வாசிப்பு.

  ReplyDelete
 4. /// வாசித்தலே ஒருவனின் இருத்தலை இவ்வுலகுக்குச் சொல்கிறது ///

  நல்லது... நன்றி... வாழ்த்துகள்...

  என்னைப் பொறுத்தவரை

  /// பகிர்தலே ஒருவனின் இருத்தலை இவ்வுலகுக்குச் சொல்கிறது ///

  கண்டிப்பாக இது ஒரு பெரிய திருப்தி... (எந்த ஆண்டும்...!)

  வாழ்க வளமுடன்...

  ReplyDelete