தமிழ் வாசகர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் செய்ய தேவையில்லாத புத்தகம் பெருமாள் முருகனின் மாதொருபாகன். இதற்குக் கிடைத்த எதிர்மறை விளம்பரமே இன்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உதவியிருக்கிறது.
மாதொருபாகனை பிளாக் கேட் எனும் நியூயார்க் நிறுவனம் One Part Woman (ஒன்பார்ட் உமன்) எனும் பெயரில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறது. 2018 அக்டோபரில் வெளியான இந்தப் புத்தகம் உள்ளூர் அமெரிக்க நூலகம் வழியாக சென்ற வாரம் கைகளுக்கு கிடைத்தது. அனிருத்தன் வாசுதேவன் எனும் அன்பர் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
கதையைப் பற்றி தேவைக்கு அதிகமாகவே
பலர் பேசிவிட்டதால் அதற்குள் போகத்தேவையில்லை. ஆனால், மொழிபெயர்ப்பு குறித்து கொஞ்சம் பேசலாம்.

நம்மிடம் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை அது தமிழின் மிகப்பெரிய சாபக்கேடு எனும் கருத்தை எழுத்தாளர் சாருநிவேதிதா பலமுறை தனது கட்டுரைகளில் புலம்பியிருக்கிறார். அதில் ஒரளவு உண்மை இல்லாமலும் இல்லை.
தமிழில் சிந்திப்பவர்கள் ஆங்கிலத்தில் (மற்ற மொழியில்) நேரடியாக எழுதினாலும் அது பெரும்பாலும் ஆங்கில வாசகர்களின் வரவேற்ப்பைப் பெற்றுவிடுவதில்லை. காரணம் மொழிவளம். குறிப்பாக மேற்குலக வாசகர்களைக் கவர அவர்களுக்கு அணுக்கமான மொழிநடையுடன் சரியான சொற்பிரயோகங்களையும் கடைபிடிக்கவேண்டியிருக்கிறது.
(இந்தியாவில் ஆங்கில வாசிப்பு பற்றி தனியாக பேசவேண்டும்)
அந்நிய படைப்புகள் அப்படியே ஒரளவு சரியாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டாலும் கிழக்காசிய எழுத்தாளர்களின் மொழி நடை என்பது வேறாகவே இருக்கிறது. உண்மையில் அந்த நடையே அவர்களை அசல் படைப்பில் இருந்து வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது. அது
மட்டுமல்லாமல் கிழக்காசிய எழுத்தாளர்கள் மேற்குலக வாசர்களைக் கவர அவர்களுக்கு நல்ல எழுத்துநடை தேவை என்பதைத் தாண்டி கலாச்சாரம், கதைக்களம், சிந்தனை என பல தளங்களில் அவர் தங்களது தனித்துவத்தை நிறுவ வேண்டியிருக்கிறது.

அதனாலேயே உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி மேற்கத்திய வாசகர்களைக் கவரவே எழுதுகிறார் எனும் வகையில் அவருடைய எழுத்து too ‘Western’ எனும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பில் வட்டார வழக்கை கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்று. (பக்கம்-146) 'Mapillai, now we can go out for a while, can't we? ' என்ற வரி 'மாப்ள.. நாம போயிட்டு மெதுவா வரலாமில்ல, உனக்கொன்னும் அவசரமில்லயே' என்பதன் மொழிபெயர்ப்பு. இதில் மாப்ள என்பது வாசகர்களின் ஊகத்திற்கு விடப்படும். அதுபோல 'ஆனால், அன்றைக்குபோல மோசமான உறவு என்றும் நடந்ததில்லை'. என்பது ஆங்கிலத்தில் 'The sex they had that night was the worst they had ever' என்றிருக்கிறது. இது மேலோட்டமாக சரி எனத் தோன்றினாலும் அமெரிக்க வாசகர்களுக்கு இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.
இப்படி மாதொருபாகனின் மொழிபெயர்ப்பு நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போல இல்லாவிட்டாலும் உறுத்தாத எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
தலைப்பு:One Part Woman
ஆசிரியர்:Perumal Murugan
பக்கங்கள்: 288
வெளியீடு: Grove Press, Black Cat (October 9, 2018)
ISBN: 0802128807
விலை:$10.87

No comments:
Post a Comment