ஹரிக்கேன் டோரியனுக்கு பிறகு முகநூல் உள்பெட்டிக்கு வந்து அன்போடு நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நாங்கள் குடும்பத்தோடு நலமாக இருக்கிறோம். ஆமாம், இந்த ஆண்டு ஃபிளாரிடா தப்பித்தது.
ஆனால், ஹரிக்கேன் டோரியன் (Dorian) அசுரபலத்தோடு அட்லாண்டிக்கின் பஹாமாஸ் தீவைத் தாக்கி இருக்கிறது. கேட்டகிரி- ஐந்து ( >250 கி.மீ)
வேகத்தோடு கரையைக் கடந்த பேய் காற்று பலத்த உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலாவை நம்பி இருக்கும் அந்தத் தீவிற்க்கு இது பேரிடியாக இருக்கும். மக்கள் உணவு,குடிநீர் போதிய மருத்துவ வசதி இன்றி தவிக்கிறார்களாம்.
அதிஷ்டவசமாக அங்கிருந்து ஃபிளாரிடாவுக்குள் நுழையாமல் டோரியன்
கடல்வழியாகவே அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையோர மாநிலங்களை நோக்கி இப்போது நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஹரிக்கேன் நேரடியாக ஃபிளாரிடாவுக்குள் சூராவளியாக நுழையா விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை இருந்தது.
கடற்கரையோரங்களில் புயல்காற்றின் வேகத்தையும் எங்களால் உணர
முடிந்தது. முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்ததால் பெரிய குழப்பமில்லாமல் இருந்தது.
மழையில் நனைந்தபடியே திங்கள் கிழமை குடும்பத்தோடு கடற்கரைக்கு போய் பார்த்தோம். இதுவரைப் பார்த்திராத ஆக்ரோசமான சீற்றத்தோடு கடல் அலைகள் பொங்கி உயர்ந்து எழுந்தன. வெள்ளை வெளேரேன உயர்ந்த அந்த அலைகளின் உயரம் பதினைந்து இருபது அடிக்கு குறைவில்லாமல் இருக்கும்.
புயலால் மின்சாரம் இழந்த 1 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிக்கு கடந்த இரண்டு நாட்களாக
தொழில்நுட்ப உதவி செய்துகொண்டிருந்தேன். அடுத்த ஹரிக்கேன் சீசன் வரும் வரை நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறேன். இங்கு ஹரிக்கேன் சீசன் ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை.
படங்கள்- நன்றி இணையம்

No comments:
Post a Comment