Sunday, March 22, 2020

தமிழ்ச்சரம்.காம் - வரவேற்பு

தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com)  வலைத்திரட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கிறது.  தளம் குறித்து நண்பர்கள்
வழியாக முகநூல், (பேஸ்ஃபுக்),வலைப்பதிவுகளில் பகிர்ந்ததைத் தவிர விளம்பரம் என்று எதுவும் பெரிதாக செய்யவில்லை.

ஆனாலும், தளத்திற்க்கு கிடைத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது.  ஆமாம், கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த எனது வலைப்பதிவுக்கான வருகை இப்போது வாரத்திற்க்கு 600+ என்றாகி இருக்கிறது. இந்தத்  தளம் குறித்து  வந்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து துறைவல்லுநர்களிடம் காட்டியபோது புதிய தளத்திற்கு இது நல்ல வரவேற்பு, 'அபாரம்' என்கிறார்கள்.  தளத்தை டெஸ்க்டாப் எனும் கம்யூட்டர் மூலமாக அதிகம் வாசித்திருக்கிறார்கள். வாரஇறுதி நாட்களை விட வார நாட்களில் வருகை அதிகமாக இருக்கிறது போன்ற தரவுகள் பலருக்கு சலிப்பாக இருக்கக் கூடும். ஆனால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஜெர்மனி,
பின்லாந்து, பெல்ஜியம்,  ஜப்பான் என 51 நாடுகளில் இருந்து தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இருந்தாலும்,  இது முடிவல்ல. இது ஒரு சிறு தொடக்கம் என்பதையும் புரிந்து கொள்கிறேன். தமிழ்ச்சரம் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள்.

அதுபோல, தமிழ்ச்சரத்தின் வழியாக பார்வையாளர்களுக்கு பல்சுவை வாசிப்பு அனுபவமும், வலைப் பதிவர்களுடைய எழுத்துக்கு வெளிச்சமும் கிடைத்தால் அதுவே தளத்துக்குக் கிடைத்த முழு வெற்றியாகவும் இருக்கமுடியும். வரும் நாட்களில் பார்வையாளர்கள் விரும்பும் புதிய அம்சங்களை முடிந்தவரை அறிமுகம் செய்து தளத்தைத் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருப்போம்.

குறிப்பு - இது தமிழ்ச்சரம் குறித்து முகநூலில் எழுதிய பதிவு.

9 comments:

  1. தமிழ்ச் சரம் மென்மேலும் வளரும் ஐயா
    தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி !! வலைபதிவால் இணைவோம்.

      Delete
  2. "இணைக்க" கைபேசியில் முடியவில்லை என்கிறார்கள்... அதை சிறிது சரிபார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. யாரும் இதற்கு முன்பு சொல்லவில்லை.பார்க்கிறோம்.

      Delete
  3. 12.03.2020 அன்று வெளியிட்ட எனது பதிவு மட்டும் வருகிறது... அதன்பின் எழுதிய இரு பதிவுகளும் இப்போது வரை வரவில்லை...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, 'தமிழ்ச்சரம்' என்ற சொல்லைத் தேடியபோது உங்களுடைய பதிவு வந்தது. அதுபோல, கடந்த வாரம் முறையே இந்தவாரம் பகுதியில் உங்களுடைய பதிவு இருக்கிறது. ஆனால், உங்களுடைய பெயரை வைத்து தேடியபோது 1 மட்டுமே வருகிறது. அதன் காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்யவேண்டும்.

      Delete
    2. நன்றி தோழர்... பலரும் இதை சொன்னதால், பதிவு செய்தேன்... இணைந்தவர்களின் பலரின் பதிவுகளும் இதே போல் தான்...

      Delete
    3. பதிவுகளைத் தேடும்போது இருந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டது. இப்போது போய் சரிபாருங்கள். அனைத்து பதிவுகளையும் தமிழ்ச்சரத்தில் 15 நாட்கள் சேமிக்கிறோம்.

      Delete
  4. இரண்டு நாட்கள் காத்திருக்கவும் ...என்கிறது தமிழ்ச்சரம்
    காத்திருப்போம்

    ReplyDelete