என்னுடைய "இர்மா-அந்த ஆறு நாட்கள்"- ஐ வாசித்துவிட்டு சென்னை பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ஒருவர் பேசினார்.
இன்றைய அரசியல் சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்திவரும்
அமெரிக்கர்களின் வாழ்வியல் பற்றிய பல குறிப்புகளை "இர்மா" நாவலின் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. புதிய முயற்சி என வாழ்த்தினார்.
அது மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்தவரை அமெரிக்க பயண நூல்கள் பற்றி சிலர் ஆய்வுக் கட்டுரைகள் செய்திருப்பதாகவும், அமெரிக்கப் பின்புலத்தில் எழுதப்பட்ட தமிழ்கதைகளைப் பற்றிய பெரிய மதிப்பீடுகள் எதுவும் இதுவரை நிகழவில்லை என்றார். புதிய ஆய்வு மாணவர்கள் கவனிக்கலாமே...
வாழ்த்துகள்
ReplyDelete