சங்கப் பாடல்களை கார்கி வைரமுத்துவின் மனைவி நந்தினி மிகத் தெளிவான ஆங்கில உச்சரிப்பில் (தமிழ் அல்ல) தொடர்ச்சியாக ஒலி உரையாக வழங்கி வருகிறார். நாம் உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் நமது சொந்தமண்ணின் கலாச்சாரத்தை அறியவேண்டும். அதற்கு நாம் சங்கஇலக்கியத்தை நாட வேண்டும் என அறிமுக உரையில் சொல்லி இருக்கிறார். அவருடையத் தனித் தனிப்பாடல்களின் ஒலி உரைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகவும் ஆப்பிள் பாட்காஸ்டாகவும் கிடைக்கிறது. தமிழ் தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏன், தமிழ் தெரிந்தவர்களுக்கும் தான். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஆனால், எனக்கு இதுபோன்ற ஆங்கில உரைகளின் நடுவில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென இதுவரைக் கேட்டிராத
வித்தியாசமான உச்சரிப்பில் தமிழ்சொற்களைக் கேட்கும் போது சொல்ல இயலாத ஒருவித உணர்ச்சி ஏற்படுகிறது. :)
பாட்காஸ்ட் இணைப்பைக் கீழே தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.
podcast
https://podcasts.apple.com/us/podcast/sangam-lit/id1449878007
No comments:
Post a Comment