நமது சமகாலத்தில் வாழ்ந்த எழுத்துலக ஆளுமை பாலகுமாரனின் மறைவு வருத்தமளிக்கிறது.
அவருடைய படைப்புகளை முழுமையாக வாசித்தவன் இல்லை. ஆனால், இரும்புக் குதிரை, மெர்குரிப்பூக்கள், என்றேன்றும் அன்புடன்..
சில சிறுகதைகள் என நான் வாசித்தவரை பெண்களை, பெண்மையைக் கொண்டாடும் எழுத்து அவருடையது.

ஒரு நல்ல மனிதராக தமிழில் எழுத்தை முழுநேர பணியாக எடுத்துக் கொண்டு கம்பீரமாக நம்முன் வாழ்ந்துகாட்டியவர். தலைமுறைகள் கடந்து நிற்கும் அவருடைய எழுத்துக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
படம்- நன்றி இணையம்.