Tuesday, May 15, 2018

எழுத்தாளர் பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு.

நமது சமகாலத்தில் வாழ்ந்த எழுத்துலக ஆளுமை பாலகுமாரனின் மறைவு வருத்தமளிக்கிறது.

அவருடைய படைப்புகளை முழுமையாக வாசித்தவன் இல்லை. ஆனால்,  இரும்புக் குதிரை, மெர்குரிப்பூக்கள், என்றேன்றும் அன்புடன்..
சில சிறுகதைகள் என நான் வாசித்தவரை பெண்களை, பெண்மையைக் கொண்டாடும் எழுத்து அவருடையது.

மயக்கமில்லாத கூர்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.  தன் படைப்புகளின் வழியாக வாழ்க்கையை  எழுதி பெண்மையின் தரிசனத்தை எழுத்தில் காட்டியவர்.   என்னைப் பொறுத்தவரை பாலகுமாரன் போல பெண்களை, பெண்மையைக் கொண்டாடி தமிழில் எழுதியவர்கள் யாருமில்லை எனலாம்.

ஒரு நல்ல மனிதராக தமிழில் எழுத்தை முழுநேர பணியாக எடுத்துக் கொண்டு  கம்பீரமாக நம்முன் வாழ்ந்துகாட்டியவர்.   தலைமுறைகள் கடந்து நிற்கும் அவருடைய எழுத்துக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.


படம்- நன்றி இணையம்.

4 comments:

  1. அவரின் இரும்புக் குதிரை, மெர்க்குரிப் பூக்கள் பாராட்டுக்குரியவை. ஆனால், கடைசிக் காலத்தில், குமுதம் குழுமத்தினரின், குமுதம் லைப் இதழில், அருவருப்பான, பச்சையான வர்ணனைகளுடன், ஒரு பலான தொடர் காவியம் படைத்து வந்தார் பாருங்கள். இந்த மனிதர் இந்தளவுக்கு கீழிறங்கி விட்டாரே என்று வருத்தப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. கடைசி வருடங்களில் அவருடைய எழுத்து நீர்த்துபோனது எனச் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      Delete
  2. கொஞ்சம் மயக்குற எழுத்துதான் அவருடையது,
    மெர்க்குரிப்பூக்களும் இரும்புக்குதிரையும்
    அவருடைய மாஸ்டர் பீஸ் எனலாம்,,,/

    ReplyDelete
    Replies
    1. உடையார் (சோழர் வரலாற்றுப் புதினம்) பற்றியும் பலர் சிலாகிக்கக் கேட்டிருக்கிறேன்.

      Delete