"திருடன் மணியன்பிள்ளை" (மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு
செய்யப்பட்டது) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே திருட்டு, இங்கே திருட்டு எனக் கேட்டு, படித்து எளிதாக கடந்துபோகும் நாம் ஒரு திருடனின் பார்வையில் இருந்து உலகைப் பார்ப்பது, அவனுடைய
அந்தரங்கத்தை அறிந்து கொள்வது புதிய அனுபவமாயிருக்கிறது.
திருடனின் வாழ்க்கையில் அப்படி என்ன இருக்கும்
என்று கேட்பவர்களுக்காக.... (நூலில் இருந்து)
//
லாட்டரிச் சீட்டு கிறுக்கன்களைப் போல்தான் திருடன்களும். லாட்டரியில்
ஆபத்தில்லை. இதில் இருக்கிறது
...
பொற்குவியலைக் கனவு கண்டு திரியும் பித்தன்தான் திருடன். இந்த உலகத்திலுள்ள மிகப் பெரிய செல்வந்தனின் தங்கமும் பொருளும் தனக்காகவே காத்திருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பான். ஒவ்வோரு திருட்டையும் நடத்தி முடிக்கும்போதெல்லாம் அவனுக்கு
ஏமாற்றமாகவே இருக்கும்...
//
நூலில் திருடனின் மனைவி குறித்த சமூகத்தின் பார்வை, போலீஸ் அத்துமீறல், அதிகார வரம்புமீறல் என பல சாட்டைகளை சமூகத்தின் மீது சொடுக்குகிறார். அதுபோல நிறைய சம்பவங்களை அவர் நகைச்சுவையாக கடந்துபோனாலும் அதன் உள்ளூடாக மெல்லிய சோகமும் இருப்பதாகவே உணர்கிறேன்.
"திருடன் மணியன்பிள்ளை" பற்றி பலர் எழுதிவிட்டார்கள். அதனால், விரிவான கருத்துகளை பதிவிடப் போவதில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாசியுங்கள்.
மூலம்: ஜி. ஆர். இந்துகோபன்
தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு. யூசுப்
வெளியீடு - காலச்சுவடு
இணைய முகவரி - https://ta.wikipedia.org/s/4tg9
No comments:
Post a Comment