ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓர் ஊருக்கு வருகிறார். அவருடையக் காரையும் சேர்த்து மொத்தமாக 3 கார்கள்
ஊருக்குள் வருகின்றன. அவர் கூட்டம் முடிந்தபின் பயணியர் விடுதி எனும்
டிபியில் தங்குகிறார். அவருக்கு உணவாக 'ஐயா, உப்புமா இருக்கிறது' என்கிறார்கள். அவர் 'அதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா, இட்லியும், கோழிக்குழம்பும் கிடைக்குமா ?' என்கிறார்.
அவர்கள் தேடிப்பிடித்து இரண்டையும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.
திருப்தியாக சாப்பிட்டவர், சட்டைப் பையில் இருந்து காசு எடுத்துக் கொடுக்கிறார். உணவு கொடுத்தவர்கள் அதை வாங்க மறுத்துவிடுகிறார்கள்.
இது நடந்த மாநிலம் தமிழ்நாடு. 1960 களில் இந்தச் சம்பவம் நடந்த அந்த ஊர் சங்கரன் கோவில். அந்த முதல்வர் காமராசர்.
நண்பர்கள் இன்றையச் சூழலில் இதுபோன்றதோரு நிகழ்வைப் பொருத்திப்பார்த்துக் கொள்ளுங்கள். "சங்கரன் கோவில் - 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மூதூரின் வரலாறு" நூலில் இருந்து.
இதன் ஆசிரியர் நண்பர் எழுத்தாளர் அருணகிரி.
அவர் ஒவ்வோரு சாமானின் வாழ்க்கை வரலாறும் , அவனுடைய ஊரின் வரலாறும் கட்டாயம் பதிவுசெய்யப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
இப்போதுள்ள திருட்டு அரசியல்வாதிகளை ஒரு கணம் நினைத்து பார்க்கின்றேன்
ReplyDeleteஏன்யா கெட்டதை நெனைக்குற ?
Deleteஅவர் மாமனிதர்
ReplyDeleteநம்மையெல்லாம் படிக்க வைத்த மாமனிதர்
போற்றுவோம் வணங்குவோம்
Uppumaa thinnaa ennavaam?
ReplyDelete