தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல், வீதி நாடகம், மொழிபெயர்ப்பு
என பல பிறவிகள் கண்டது போன்ற பல முகஸ்துதிகளுடன் இணையத்தில் கிடைத்த "ஆயிஷா" எனும் ஒரு படைப்பை எதேச்சையாக வாசித்தேன்.
ஆயிஷா எனும் மாணவியை மையப்படுத்தி அறிவியல் பின்புலத்தில் எழுதப்பட்ட
ஒரு கதை. ஒரு பள்ளி ஆசிரியரின் பார்வையில் இருந்து விரியும் இந்தக் கதை
ஆயிஷா வழியாக இன்றைய கல்விச்சூழலின் நிதர்சனத்தைச் சொல்லி அதன் முகத்தில் அறைந்து கேள்வியும் கேட்கிறது.
குறுநாவல் எனச்சொல்லப்பட்டாலும் ஒரு சிறுகதை போலிருக்கும் இந்தக் கதையை 15 நிமிடங்களில் வாசித்துவிடலாம். இது இலக்கியமெல்லாம் இல்லை. நேரடி கதை சொல்லல் வகை. அதனால் நண்பர்கள் வாசிக்க பயப்படவேண்டாம். இது இலவச மின்னூலாகவும் கிடைக்கிறது. http://freetamilebooks.com/ebooks/ayesha/
இதன் ஆசிரியர் இரா. நடராசன் சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார் என அறிகிறேன். நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்.
வாசித்திருக்கிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி
ஆழமான கருத்து உள்ள கதை. வருகைக்கு நன்றி!
Delete