Tuesday, April 17, 2018

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

Confessions of an Economic  Hit Man ( தமிழில் “ஒரு பொருளாதாரஅடியாளின் வாக்குமூலம்”)நான் சமீபத்தில் வாசித்து பிரமித்த ஒரு புத்தகம்.
கடந்த நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க் போன்ற பல மேற்கத்திய நாடுகள் காலனியாதிக்கம் எனும் பெயரில் மற்ற நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தியது என்பது நாம் அனைவரும் தெரிந்த வரலாறு. 

அதுபோல, இந்த நூற்றாண்டில் அந்நிய முதலீடுகள், வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தாராளமயமாக்கம் எனும் பெயரில் அவை மறுவடிவம் பெற்றிருப்பதை ஆசிரியர் இதில் ஆதாரப்பூர்வமாக சொல்கிறார். அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றில் பெருளாதார நிபுணராக வேலை செய்யும்  அவர் 1980களில் கிழக்கு ஆசிய, தென் அமெரிக்க நாடுகளில் முதலீடு செய்ய  பயணம் செய்கிறார். அப்போது வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக செய்யப்படும் சமரசங்கள், அதன் இன்றைய நிலை என தனது அனுபவங்களை விரிவாகவே சொல்கிறார். உண்மையில் அந்நிய முதலீடுகளின் உள்ளார்ந்த அரசியலை,  அவர் வெளிப்படையாக உடைத்திருக்கிறார். 

இந்த நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  நான் வாசித்தது இதன் ஆங்கில பதிப்பு.

தமிழில்  “ஒரு பொருளாதாரஅடியாளின் வாக்குமூலம்” என்ற பெயரில் இரா.முருகவேள் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

3 comments:

  1. பயனுள்ள பதிவு, இதே போல் பல புத்தகங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தவும். நன்றி

    ReplyDelete
  2. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil Us

    ReplyDelete