எழுத்தாளர் சாருநிவேதிதா தனது வலைதளத்தில் நேற்று "தமிழ் செத்த மொழி ஐயா. ஒரு நாவல் அம்பது காப்பி விற்றால் அது உயிரோடு இருக்கும் மொழி என்றா சொல்வீர்கள்? " என்று எழுதியிருக்கிறார். ஏன் என்றால் ஔரங்கசீப் மேடை நாடகத்தைத் தான் சமீபத்தில் பார்த்தபோதே தமிழ் செத்த மொழி என்று தெரிந்து விட்டது என்கிறார்.
அந்த நாடகத்தில் நடிகர்கள் யாருக்கும் தமிழை உச்சரிக்கத் தெரியவில்லை. ஏன் தமிழ்நாடே அப்படித்தான் தமிழ் பேசுகிறது எனக் குற்றஞ்சாட்டி அதை ஒரு தனி பதிவாகவே போட்டிருந்தார். (கட்டுரைகள் கீழே இணைப்பில்)
தமிழ் செத்த மொழி என்றால் கண்டிப்பாக எதிர்ப்பு வரும் என நினைத்தாரோ என்னவோ உடனே இப்படி எழுதியிருக்கிறார். "சரி. பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியைச் செத்த மொழி என்று சொல்லக் கூடாது என்று நீங்கள் சொன்னால் ஓகே… ஒப்புக் கொள்கிறேன். தமிழ் சாகவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் பேசுவதைக் கேட்டால் அதிலும் எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது" என முடித்திருக்கிறார்.
உண்மை. சாருவுடன் முரண்டுபோக எனக்குப் பல விசயங்கள் இருந்தாலும் ஒத்துபோகும் ஓரிரு விசயங்களில் மொழியும் ஒன்று. இன்று நேற்றல்ல அவர் பல ஆண்டுகளாக தமிழ் மொழியின் தொடர் வீழ்ச்சி பற்றி அக்கறையோடும் ஆற்றாமையோடும் எழுதியும் பேசியும் வருகிறார். அவருடைய இந்தக் கோபம் நியாயமானது. உண்மையில் இந்தத் தார்மீகக் கோபம் அவர் ஒரு தமிழ் எழுத்தாளன் என்பதால் அவருக்கு மட்டும் வரவேண்டியதில்லை. தமிழ்பேசும் ஒவ்வொருக்கும் வரவேண்டிய ஒன்று.
நான் மொழி தேய்ந்து வருகிறது. தமிழர்கள் நாளுக்கு நாள் மொழியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நடக்கிறார்கள் எனத் தொண்டை கிழிய கத்தினாலும் எனது நெருங்கிய நண்பர்களே கூட இதில் பெரிதாக நாட்டம் காட்டுவதில்லை. அவர்களுடைய எதிர்வினை இதுவும் கடந்துபோகும் என்பதாகத் தான் இருக்கும். நாளுக்கு நாள் தொலைகாட்சி, இணையம்,பொதுவெளி எனத் தமிழ் படும் பாட்டைச் சொல்லி மாளவில்லை. நாகரிகமாக பேசுகிறேன், இன்றைய தலைமுறைக்குப் புரியும்படியாக எழுதுகிறேன், பேசுகிறேன் எனச் சொல்லி வளமான மொழியை அநியாயமாக சிதைத்துக் கொண்டு இருக்கிறோம்.
சாரு சொல்வதுபோலப் பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியை செத்த மொழி எனக் கண்டிப்பாக சொல்லக் கூடாது தான். ஆனால், சிலர் அதை தங்கள் வாழ்நாளில் எப்படியாவது செய்து பார்த்துவிட வேண்டும் எனும் கெட்ட எண்ணத்தில் கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. இந்தத் தருணத்தில் அனைவரும் விழிப்போடு இருந்து பதர்களைக் கண்டிப்பாக விலக்கவேண்டும். நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட.... அனுமதிக்கக் கூடாது.
http://charuonline.com/blog/?p=7765
http://charuonline.com/blog/?p=7757

இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு நண்பரே .
ReplyDeleteநன்றி
Deleteகல்வி நிலையங்கள், ஊடகங்கள், திரைத்துறை, பொதுமக்களின் பற்றின்மை என்று பல நிலைகளிலும் இன்றைய நிலையே நீடித்தால் 100% தமிழ் அழியும்.
ReplyDeleteதாய்மொழியை அலட்சியப்படுத்தி, எந்த எந்த இனத்திற்கெல்லாமோ அடிமையாய் வாழ்ந்து பழக்கப்பட்டவன் தமிழன்.
எனவே, கவலைப்பட ஏதுமில்லை?
விரும்பியோ விரும்பாமலோ தமிழும், ஆங்கிலமும் கலந்த ஒரு புதுமொழி உருவாகிவருகிறது. வரும் 50 ஆண்டுகளில் பேசும்மொழி மாறியிருக்கும்.
Deleteகுறஞ்சபட்சம், சாரு நிவேதிதா செத்து அழுகிய பிறகும் தமிழ் உயிரோடனிருக்கும்! "தேவடியாமகன் ஓரு வழியாப் போய் சேர்ந்துட்டான்"ணு நாலு பேரு இவன் பொணமானதும் வாழ்த்துவார்கள் செந்தமிழில்!
ReplyDeleteஇவ்வளவு வெறுப்பு தேவையில்லையே..
Deleteதமிழ் இன்றும் என்றும் வாழும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !!
Delete