இன்ஸ்டாகிராமில் பெயருக்காக ஒரு கணக்கு தொடங்கி வைத்ததோடு சரி. மற்றபடி அந்தப்பக்கம் பெரிதாகப் போவதில்லை . பெரும்பாலும் ஃபேஸ்புக்கில் தான் குடித்தனம்.
இன்ஸ்டாகிராம் (instagram.com) பற்றித் தெரியாதவர்களுக்கு - இன்ஸ்டாகிராம்
உலகளவில் 6வது பிரபலமான சமூக வலைத்தளம். பெரும்பாலும்
அங்கே புகைப்படம், வீடியோக்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. இதற்கும் முதலாளி பெரியண்ணன் பேஸ்புக் தான் .
இன்று கிடைத்த கொஞ்ச நேரத்தில், சும்மா அங்கு என்னதான் நடக்கிறது என எட்டிப் பார்த்தால் ஆச்சரியம். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
இன்ஸ்டாகிராமில் நமக்கு யாரையும் பெரிதாக தெரியாது என்பதால் சும்மா குருட்டாம் போக்கில் தெரிந்த தமிழ்ப் பெயர்களைத் தேடினால், "priyabhavanishankar" என்பவருடைய கணக்கு வந்தது. சரி அவர் யாரேன கூகுள் செய்தால், "பிரியா பவானி சங்கர்" ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை என்றது. "கடைக்குட்டி சிங்கம்" என்ற படத்தில் நடித்திருக்கிறாராம். அவருடைய படங்களுக்குப் பல இலட்சம் லைக்குகள்.
அவர் சும்மா "Because it’s been a while!" என ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறார். அதை 2 இலட்சம் பேர் மிகச் சாதாரணமாக லைக் செய்திருக்கிறார்கள். ஆமாம், இரண்டு இலட்சம் பேர் கை வலிக்க வலிக்கப் பொத்தானை அழுத்தி இருக்கிறார்கள்.
இப்படி இளமை பொங்கி வழியும் இன்ஸ்டாகிராமத்தில், 18-30 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக குடியிருப்பதாகத் தெரிகிறது.
கூகுளில் இன்ஸ்டாகிராமைப் பற்றி இன்னொரு தகவலும் கிடைத்தது.
இன்ஸ்டாகிராமை உலக அளவில் ஆண்களை விடப் பெண்கள்தான்
அதிகமான பயன்படுத்துகிறார்களாம். இன்ஸ்டாகிராமில், பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கையில் பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதல் இடத்தில் (230 மில்லியன் பேர்) இருக்கிறார்.
இந்தியாவில் செல்லப்பிள்ளை கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு முதலிடம் (50 மில்லியன்). தமிழ்நாட்டில் .. ? ...சமந்தா அக்கினேனி
#இன்ஸ்டாகிராம்

ஆத்தாடி...! இவ்வளவு இருக்கா...?
ReplyDeleteஇது மட்டுமா ? நிறைய followers உள்ள பிரபலங்கள் இப்போதெல்லாம் Product promotion செய்கிறார்களாம்.
Deleteஅதாவது, புகைப்படத்தில் தான் போட்டிருக்கும் ஆடை , accessories அதன் வடிவமைப்பாளர், மேக்கப் ஸ்டூடியோ, உடற்பயிற்சிக்கென அணியும் காலனி, இத்யாதிகள் என அனைத்தும் விளம்பரம்.
பெயர் மட்டும்தான் இதுநாள்வரை தெரியும்
ReplyDeleteதங்களால் விவரம் அறிந்தேன்
நன்றி
வருகைக்கு நன்றி
Delete