இன்று சமூக ஊடகங்கள் ஓர் ஆயுதமாக மாறியிருக்கிறது (Weapoized) என்பதை உறுதி செய்வதுபோல் ஒரு நிகழ்ச்சி ஆந்திராவில் நடந்திருக்கிறது.
வரதட்சணை விவகாரத்தில் தனது இளம் மனைவியைப் பிரிந்த ஒருவர் கோபத்தில் தான் மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள், காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்பி விட்டிருக்கிறார்.
கூடவே, மனைவியை (பெயர்) ஒரு பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டு அவருடைய புகைப்படத்தோடு கைபேசி எண்ணையும் வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்த பலர் அவரது மனைவியைத் தவறான நோக்கில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இதனால், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மனைவி கணவன் மீது காவல்துறையில் புகார் தந்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டு இப்போது விசாரணை நடக்கிறதாம். இத்தனைக்கும் அந்தப் பெண்ணை அவர் காதல் செய்து கரம் பிடித்தவராம். எவ்வளவு கீழ்த்தரம் பாருங்கள். அந்த விசாரணையின் முடிவு என்ன என்று தெரியவில்லை. ஆனால், அன்று ஆத்திரத்தில் மனைவிக்கு அரிவாள் வெட்டு என்றால், இன்று ஆத்திரத்தில் சமூக ஊடகங்களில் வெட்டுகிறார்கள். அதுவும் மிகக் கேவலமாக ...
No comments:
Post a Comment