புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்க்கும் இந்நாளில் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராகக் கொண்டாடப்படும் லிங்கன் (Abraham Lincoln) பதவியேற்ற அன்று நடந்த ஒரு சம்பவம்.
லிங்கன் பதவியெற்ற பின் செனட்டின் கேள்வி நேரத்தில் ஒருவர் அதிகாரமாய் "லிங்கன், உங்கள் அப்பா எங்கள் குடும்பத்துக்கு செருப்பு தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார். அதற்கு பதில் அளித்த லிங்கன் , "தெரியும், அந்த செருப்புகளில் பிரச்சைனையிருக்காது. அப்படிக் குறையிருந்தால் சொல்லுங்கள் சரிசெய்து தருகிறேன்" எனச் சொல்லி அரங்கையே திகைக்க வைத்தார்.
அன்று லிங்கனை முட்டாளாக்குவதாக நினைத்தவர் அவமானத்தால் குறுகி ஊமையானார்.
நடப்பில் ஒருவர் எங்கிருந்து வந்தார் என்பது முக்கியமில்லை. அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதே முக்கியம். அரசின் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்படவில்லை, அக்கறையற்றவர்கள் எனச் சொல்லுங்கள். தப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் அவருடைய படிப்பை, தொழிலை விமர்சிப்பது தவறு. பதவியிலிருக்கும் ஒருவருடைய செயல்பாடுகள் விமர்சிக்கப்படவேண்டுமே தவிர ஒரு தனிநபர் அல்ல.
#அறியாமை
No comments:
Post a Comment