காவில் இருந்து திகில், சஸ்பென்ஸ், அறிவியல் புனைவுகள், கற்பனை கதைகள் என பல நூறு படைப்புகளை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பவர் ஸ்டீபன் கிங் (Stephen Edwin King) . இவருடைய புத்தகங்கள் இதுவரை உலகம் முழுவதும் 350 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று தீர்த்துள்ளன. பல படைப்புகள் நாடகங்களாகவும், தொலைகாட்சித் தொடராகவும், திரைப்படங்களாகவும் வெளியாகி சக்கைபோடு போட்டுள்ளன.
இவ்வளவு வெற்றிகளைப் பெற்ற ஸ்டீபன் கிங்கின் சிறுவயது மிகுந்த சிக்கலான ஒன்றாக இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு வயதாக இருந்த போது "இதோ ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி வருகிறேன்" என வீட்டை விட்டு வெளியே போன அவருடைய அப்பா திரும்பி வரவேவில்லை. கணவனால் தனித்து விடப்பட்ட அவருடைய அம்மா பண நெருக்கடியால் ஸ்டீபனோடு ஊர் ஊராக வேலை தேடி திரிந்திருக்கிறார்.
மிக குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் அவர் செய்திருக்கிறார். அப்போது ஸ்டீபனை பராமரிக்க வீட்டில் ஆட்கள் இல்லாததால் பல நாட்கள் அவரைத் தனியாக வீட்டில் விட்டு செல்ல வேண்டிய சூழல் இருந்திருக்கிறது. இப்படிப் பிரச்சனைகளோடும், கடுமையான பணநெருக்கடியோடும் வளர்ந்த ஸ்டீபனிடம் அந்த வயதுக்குரிய இயல்பான குறும்புகளோ, மகிழ்ச்சியோ சுத்தமாக இல்லை. கூடவே, ஸ்டீபனுக்கு சிறுவயதில் இருந்து தீராத காதுவலி வேறு.
அது மட்டுமல்லாமல், சிறுவயதில் அவருடைய நண்பன் ஒருவன் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்ததைத் தன் கண் எதிரிலேயே பார்த்திருக்கிறார். இப்படியான சிக்கலான சூழலே அவரை ஒரு மாறுபட்ட எழுத்தாளராக்கி இருக்கிறது.
2014-ல் ஒரு எழுத்தாளராக அவரது பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக அமெரிக்க அரசு அமெரிக்காவின் கலைக்கான மிக உயரிய விருதான National Medal of Arts விருதையளித்து ஸ்டீபனைப் பெருமைப்படுத்தி இருக்கிறது. ஸ்டீபன் கிங்கின் பிறந்தநாள் செப்டம்பர் 21 (1947).
No comments:
Post a Comment