திரைப்பட தயாரிப்பு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்ட பின் சென்னையில் இயங்கிய பெரிய ஸ்டுடியோக்கள் எப்படி நசிந்தன என்பதை மையப்படுத்தியே ஒரு சுவாரஸ்யமான படம் எடுக்கலாம் போல இருக்கிறது. திரைக் கதை அமைப்பதும் அவர்களுக்கு எளிதுதான்.
ஏனென்றால், இது அவர்களுடைய சொந்த கதை. தேவையில்லாமல், யாருடைய நாவலில் இருந்து எதை உருவலாம். மொழி புரியாத எந்தப் படத்தை விடிய விடிய கண்விழித்து பார்த்து அதில் எந்தக் காட்சியைச் சுடலாம் என பாயை பிராண்டி கொண்டிருக்க வேண்டியதில்லை.
அது மட்டுமல்லாமல், அந்த நாட்களில் சென்னையில் 10-15 ஸ்டியோக்கள் இயங்கின. தென்னிந்திய மொழிகள் தாண்டி இந்தி படங்களும் இங்கே தயாரானது. அதனால், பல மாநில பார்வையாளர்களைக் குறி வைத்து போட்ட பணத்தை எடுத்து விடலாம்.
இந்த யோசனையெல்லாம், அசோகமித்திரன் எழுதிய 'கரைந்த நிழல்கள்' வாசிக்கும் போது தோன்றியது. 1960-களில் ஜெமினி ஸ்டுடியாவில் வேலை செய்த அவர் இந்த நாவலின் வழியாக திரைத்துறையின் எதார்த்தத்தைச் சொல்லி இருக்கிறார்.
No comments:
Post a Comment