கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட சிறகுகள் அறக்கட்டளை வழியாக எங்களது இரண்டாவது பங்களிப்பை கடந்த வாரம் செய்துள்ளோம்.
கடந்த ஜனவரியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நூலக விரிவாக்கத்துக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்கியது உங்களூக்கு நினைவிருக்கலாம்.
தற்போது புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தோம்.
கிராமபுரத்தில் இருந்து வரும் ஏழ்மையான மற்றும் சாதாரணமான மாணவர்கள் பலர் படிக்கும் பள்ளி இது. சமீபத்தில்தான் உயர்நிலைப் பள்ளியாக விரிவாக்கமடைந்துள்ளது. இந்தப் பள்ளியை தேர்வு செய்ய மற்றோரு முக்கியக் காரணம், இந்தப் பள்ளி நான் படித்து வளர்ந்த கிராமத்திற்கு அருகில் இருப்பதுதான்.
முன்பே சொன்னது போல் சிறகுகளின் தலையாய இலக்கு திருவாரூர் வட்டாரத்தில் உள்ள வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது. இது நாம் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுப்பதற்கான மற்றொரு வழியாகவே நான் நினைக்கிறேன். ஆங்கிலத்தில் giving back to society என சொல்லுவார்களே அது போல.
இபோது கடந்த மாதம் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு வகுப்புத் தேர்வு முடிவுகள பார்க்கலாம். தமிழக அளவில் இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர், 93.4 சதவீத வெற்றி. திருவாரூர் மாவட்டம் 83.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சதவீகிதத்தில் தமிழத்தை ஒப்பிட்டும் போது திருவாரூர் மாவட்டம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் அதிகம். கற்றலிலும் கற்பித்தலிலும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். உரியவர்கள் இதைச் செய்வார்கள் என நம்பிக்கை கொள்வோம்.
இப்பள்ளியில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
மாணவ மற்றும் மாணவியருக்கு சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில்
பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு விவரங்கள்:
முதல் மதிப்பெண்:
பி. ஐஸ்வர்யா (P. Aiswaraya)
இரண்டாவது மதிப்பெண்:
என். வர்ஷா (N. Varsha)
மூன்றாவது மதிப்பெண்:
எஸ். அஜித்குமார்( S.Ajithkumar)
முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
பரிசாகத் தலா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறும் வழங்கப்பட்டன.
சிறப்பு பரிசாகத் தமிழ்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி
ஆயிஷா ரெஹெனா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறு பரிசு பெற்றார்.
இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதோனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.
பள்ளியில் ஜுன் எட்டாம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களை
பாராட்டி இந்த பரிசுகளை வழங்கினார். மேலும் பரிசுபெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர்.
பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் சிறகுகள் அறக்கட்டளை சார்பில்
மனதார வாழ்த்துகிறோம்.
அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..
நிகழ்வில் இருந்து ஒரு புகைப்படம்
Sunday, June 14, 2015
Friday, May 29, 2015
சிறகு முளைத்த விரல்கள் - ஆருர் புதியவன்
கடந்த முறை இந்தியா சென்றிருந்த போது பாசத்துடன் தனது "சிறகு முளைத்த விரல்கள்" கவிதை தொகுப்பை நண்பர் ஆருர் புதியவன் கொடுத்திருந்தார்.
அதை கடந்த வாரம்தான் முழுமையாக படித்து முடித்தேன். புத்தகம் பற்றிய எனது பார்வை இங்கே.
கவிப்பேரரசு, கவிக்கோ, மேத்தா என என்னுடைய ஆதர்சன கவிஞர்களின் முன்னுரையுடன் அருமையான தொடக்கமாக இருந்தது.
ஆசிரியர் தன் கல்லூரி காலங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. எழுதப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு, இது காதல் கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும் என கணக்கு போட்டிருந்தேன். வழக்கம் போல அது தப்பாகவே இருந்தது. ஆம், காதலுக்கு அப்பால் சமுகம், இயற்கை என எல்லா சோலைகளிலும் இவரது கவிதை சிறகு முளைத்து பறக்கிறது.
ஆசிரியர் ஆருர் புதியவன் எனது பள்ளி தோழர். கல்லூரி பேராசரியர் , முனைவர் , கவிஞர், எழுத்தாளர் , சமூக ஆர்வலர் என்று பன்முகம் கொண்ட வார்த்தைகளின் வித்தகர். பள்ளி நாட்களிலேயே மேடை பேச்சுகளின் நாயகர். அந்த வேகத்தை கவிதைகளின் வீச்சில் என்னால் உணர முடிகிறது.
'சாதிப் - போர் மேனாட்டில் இல்லை, அங்கே
சாதிப்போர் மிக அதிகம், நமது மண்ணில்
பாதிப்பேர் இயற்பெயரே சாதிப் பேர்தான் '
என்ன ஒரு திறமையான வார்த்தை விளையாட்டு !!. வெண்பா மற்றும் விருத்ததையையும் அவர் விட்டுவைக்கவில்லை.
குறிப்பாக அவரின் அனுபவக் கவிதைகளை பல முறை வாசித்து, சிலாகித்து மகிழலாம்.
உதாரணமாக குற்றாலத்தின் அழகை பற்றிச் சொல்லும்போது
ஒரே புகை மூட்டம்
ஒ... இது.. அழகின் சமையல் கூடமா ..?
என்ன ஒரு அருமையான கற்பனை.
'கலந்தன கண்கள்
பிறந்தது காதல்
ஒ.. விழிப்புணர்ச்சி'
என்பதையும் ரசித்தேன். இவற்றில் பல கவிதைகள் மாநில மற்றும் கல்லூரிப் போட்டிகளில் பரிசு பெற்றதில் வியப்பில்லை.
சில கவிதைகளின் பின்குறிப்பாக அதன் பின்புலத்தை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அது போன்ற குறிப்புகளை எல்லா கவிதைகளுக்கும் கொடுத்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
மரம் செய்ய விரும்பு எனும் தலைப்பில்
'மேகக் கப்பலிகளிருந்து
மழையை
இறக்குமதி செய்யும்
துறைமுகங்கள்'
எனும்போது 'கவிக்கோ' வினை நினைவுபடுத்துகிறார்.
...
'கண்களை மேயாத கலைகள் தேவை
கடைசிமூச் சுள்ளவரைக் கவிதை தேவை'
கவிஞர் ' தேவை' எனும் தலைப்பில் எழுதியதை வாசிக்கையில்
'சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணத்து வேக வேண்டும்' எனச்சொன்ன பாரதிதாசனை நினைவுபடுத்துகிறார்.
பூடகமின்றி எளிய நடையில் உள்ள நல்ல தொகுப்பு, சிறகு முளைத்த விரல்கள் - இறக்கை கட்டி பறக்குது. ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் வாசிக்கவும்.
நுால்; சிறகு முளைத்த விரல்கள்
ஆசிரியர்: ஆரூர் புதியவன்
வெளியிடு : நேஷனல் பப்ளிஷர்ஸ், 2011

Sunday, May 17, 2015
லென்ஸ் வழியான வாழ்க்கை - ஆனி
எஸ்.இராமகிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் அவசியமல்லாத எழுத்தாளர்.
இலக்கியத் தளத்தில் பல வருடங்கள் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எழுதியுள்ளார். புதினம், சிறுகதை, கட்டுரைகள் தாண்டிய பன்முகத்தன்மை உடையவர். சர்வதேச இலக்கியம், அயல்சினிமா, சிறுவர் உலகம் என பல துறைகளை பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்.
இவர் சமீபத்தில் தன்னுடைய வலைதளத்தில் புகைப்படக்கலைஞர்
ஆனி லெய்போவிட்ச் (Annie Leibovitz) பற்றி 'ஒளியிலே தெரிவது' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை வாசித்ததும் ஆனி பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.
அடித்து பிடித்து மாவட்ட பொது நூலக வலைதளத்தில் புத்தகங்களைத் தேடி Hold செய்திருந்தேன். மூன்றாம் நாள் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நூலகத்திற்கு புத்தகஙகள் வந்து சேர்ந்தாக மின்னஞசல் வந்தது.
இங்கே அமெரிக்க நூலகங்கள் இயங்கும் விதம் பற்றி ஒரு தனி வலைப்பதிவே எழுதலாம். நான் மொத்தமாக 3 புத்தகங்களை ஆர்டர் செய்திருந்தேன்.
புத்தகங்ளை எடுக்கப் போன இடத்தில் எனக்கு ஒரு சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. மற்ற புத்தகங்களை போல அல்லாமல் இந்த புத்தகங்கள் மிக பெரிய அளவில் இருந்தன. ராட்ச வடிவில் இருந்தன என சொன்னால் பொருத்தமாக இருக்கும். எடையும் சுமார் பத்து கிலொவுக்கு மேலாக இருக்கும்.
a) Photographs Annie Leibovitz 1970-1990 b) A photographer's Life 1990-2005 c) Annie Leibovitz Photographs என்ற 3 புத்தகங்கள்.
அந்த புத்தகங்களை பார்த்து வீட்டில் என்னை மேல கீழ பார்த்தது வேற கதை. :)
புத்தகங்களை பற்றி பேசும் முன்பு முன் புகைப்படக்கலைஞர் ஆனி பற்றி கொஞசம் பார்ப்போம்.
ஆனி லெய்போவிட்ச் அமெரிக்காவின் புகழ்பெற்ற மிக முக்கிய பெண் புகைப்படக்கலைஞர். 1949 அக்டோபர் 2-ந்தேதி அமெரிக்காவில் வாட்டர்பரி, கனெக்டிகட்டில் பிறந்தவர்.
புகழ்ப்பெற்ற ரோலிங் ஸ்டோன் இதழில் புகைப்படக்கலைஞராகப் பணியாற்ற துவங்கியவர் ஆனி. நாற்பது வருஷங்களுக்கும் மேலாகப் புகைப்படக்கலையில் தீவிரமாக இயங்கி வருபவர்.
ஆனியின் அழகான முன்னுரையுடன் தொடங்கும் இந்தப் புத்தகங்கள், அவரின் அரிய புகழ்பெற்ற புகைப்படங்களின் பொக்கிசம். ஆனி புகைப்படக்கலையை நேசிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தவர்கள் இரண்டு புகைப்படக்கலைஞர்கள், Robert Frank மற்றும் Henri Cartier-Bresso என்று அவர் குறிப்பிடுகிறார். இருவருமே உலகப்புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள்.
இவரது புகைப்படங்கள் நகர வாழ்க்கை, கிராம வாழ்க்கை, இயற்கை என பல படி நிலைகளைக் கொண்டிருந்தாலும் மனிதர்களை மிக அழகாக படம்பிடித்திருக்கிறார்.
புகழ்பெற்ற நடிக நடிகைகள், பாடகர்கள்,எழுத்தாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சாலையோர மனிதர்கள் என வாழ்வின் பலதரப்பட்டவர்களை அக உணர்ச்சிகளுடன் படமாக்கியிருக்கிறார்.
கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் பக்கத்திற்கு ஒன்றாக அந்த புகைப்படங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.
மனிதர்ளை கருப்பு மற்றும் வெள்ளையில் நாம் எடுக்கும் புகைப்படம், அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் புகைப்படம் என எங்கோ படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்படி தனித்துவத்துடன் படம் எடுத்திருக்கிறார். தீவிரமாக உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் ஒளியமைப்பும் அடர்வண்ணங்களை முதன்மைபடுத்துவது ஆனியின் சிறப்பு.
மைக்கேல் ஜாக்சன், டெமி மூர் , அர்னால்ட் ,பில் கேட்ஸ், பில் கிளின்டன் என அவர் படமெடுத்த புகழ்பெற்றவர்களின் பட்டியல் வளர்கிறது.
படம் பிடிக்கையில் பெரும்பாலான பிரபலங்கள் தானாக முன்வந்து தங்கள் உடைகளை களைய தயாராக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவற்றில் சில வயது வந்தோர் மட்டும் படங்கள் இருக்கிறது என சொல்லத் தேவையில்லை.
பல உலக புகழ்பெற்ற விளம்பர படங்களையும் எடுத்திருக்கிறார். குறிப்பாக டிஸ்னியின் பிரத்தியேக புகைப்படகலைஞர் இவர்.
இந்த புகைப்படங்களைப் புரிந்து கொள்ள தனிப்பட்ட உள்ளார்ந்த பார்வை எதுவும் அவசியமில்லை என்றே நினைக்கிறேன். Photography/நிழற்படக்கலை என்றால் என்ன என்பதற்கு ஆனி 'அது லென்ஸ் ஊடான வாழ்க்கை' என ஒற்றை வரி விளக்கம் தருகிறார். இதை தவிர வேறு ஒரு சிறப்பான விளக்கம் இருப்பதாக தெரியவில்லை.
ஆனி தனித்துவமிக்கப் புகைப்படக்கலைஞர், அவரது படங்களை காணத்தவறாதீர்கள். நீங்கள் இவர் புத்தகங்களை பெற முடியவில்லை என்றால், Annie Leibovitz: Life Through a Lens என்ற ஆவணப்படத்தை YOUTUBEல் பார்க்க முடியும். இணையத்திலும் அவரது புகைப்படங்களை பார்க்கலாம்.
அந்த 3 புத்தகங்கள் இங்கே படத்தில்.
ஆனியை எனக்கு அறிமுகப்படுத்திய எஸ்.இராமகிருஷ்ணனுக்கு அவர்களுக்கு நன்றிகள் பல.

Tuesday, April 21, 2015
கவிஞர் வைரமுத்து - சர்ச்சை
கவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு.
கவிதையில் அவருக்கு இருக்கும் தேர்ச்சி மீது எனக்கு என்றும் மிகப்பெரிய மரியாதையுண்டு.
அந்த விளம்பரத்து முழுக்காரணமும் குமுதம் மட்டுமே என்பது என் நம்பிக்கை. வைரமுத்துவின் இடம் அவருக்கு மட்டுமெ. மேலும், யாரும் அவரின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட முடியாது.
மீள்பதிவு:
--இன்று July-13, கவிஞர் வைரமுத்துவின் 60வது பிறந்த நாள். அவரை பற்றி என்னுடய சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்பு திரைப் பாடல் வரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில், என்னை கவர்ந்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார். பள்ளி பாடங்களை தவிர்த்து அறிமுகமான முதல் தமிழ் கவிஞரும் அவரே.
தமிழ் பாடல்களை சித்தெறும்பு கடித்துக் கொண்டிருந்த நாட்களில் இவர் பாடல்கள் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. இளையராஜா, வைரமுத்து மோதல் என்பது இந்த உலகறிந்தது. அந்த காலகட்டத்தில் வைரமுத்து- ஏ.ர் ரகுமான் கூட்டணி வெற்றி பெற பிரார்தித்த நாட்களும் உண்டு.
தமிழ் நாளேடுகளை தாண்டி வானொலியில் அவருடைய குரலையும் தமிழையும் கேட்டு ரசித்தேன். அவை பெரும்பாலும் திரை சார்ந்ததாகவே இருந்தது.
கல்லூரி நாட்களில் அவருடைய கவிதைகளை அங்கென்றும் இங்கென்றுமாய் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது மலேசிய சந்திப்பு.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வேலை செய்யும்போது வைரமுத்துவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதுவும் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தேன். மேலும் அன்று அவரின் ஆட்டோகிராப் பெறும் பேறு பெற்றேன். அந்த நிகழ்வே கவிஞரின் கவிதைகளை மேலும் உள்ளார்ந்து படிக்கத் தூண்டியது.
கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல, அது ஓர் உணர்வு என்பது தெளிந்தது. இப்போது கூட கவிஞரின் மூன்று பக்கத்துக்கு மிகமான சில கவிதைகளை என்னால் மனப்பாடமாக சொல்லக் கூடும். (கவனிக்க: திரை பாடல்கள் அல்ல)
அவரின் எல்லா வகை படைப்புகளுடன் பயணித்ததில், திரைப்பட பாடல்களை தாண்டியது அவரது ஆளுமை என்பது என் எண்ணம். என்னை பாதித்த தமிழின் சொந்தகாரர் அவர். அவரின் பாதிப்பு இல்லாத இளம் கவிஞர்கள் இல்லை எனவே சொல்ல தோன்றுகிறது.
அவரை பற்றிய எளிய ரசிகன் என்னுடய கவிதை சில துளிகள்,
"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து
**************
"வடுகப்பட்டி தந்த வைரமே,
பொன்மாலைப் பொழுதில்,
ஒரு விடியலைத் தந்தவனே!
முண்டாசு, முரட்டு மீசை: பாரதி,
வெள்ளை ஜிப்பா, கருப்பு மீசை: வைரமுத்து,
தமிழனின் கடைசி அடையாளமாக
உன் மீசை!
...
அழகியலையும் அறிவியலையும்
புதுக் கவிதையில் கோத்து
மணம் வீசச் செய்தீர்!
....
தமிழ்ச் சாகரத்தின்
கலங்கரை விளக்கமே!
...
அரை நூற்றாண்டு கடந்தபின்பும்
தமிழ்ச் சமுதாயத்தில்
முதல் இளைஞனாக நீ,
தமிழின்
கடைசி நம்பிக்கையாகவும் நீயே!
"
என் ஜன்னல் வழிப் பார்வையில்:
Facebook fan page:www.facebook.com/ejvpbook
Monday, April 13, 2015
கலிபோர்னியா - பயண அனுபவங்கள்
ப்ளோரிடாவில் வசிக்கும் நான் சில வாரங்களுக்கு முன் Spring Breakக்கு குடும்பத்துடன் கலிபோர்னியா சென்று வந்தோம்.
இங்கே என்னுடைய பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் பிரிப்படுகிறேன்.
கலிபோர்னியா செல்வது எனக்கு இரண்டாவது தடவை. இதற்கு முன்பு அலுவல் நிமித்தமாகக் கடந்த வருடம் சென்றிருந்தேன்.
இந்த முறை பயணத்தின் நோக்கம் ஊரை சுற்றிப் பார்ப்பது, முக்கியமாக அங்கே வசிக்கும் எனது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதும் தான்.
சித்தி மகன் கார்த்திக்கும் , அத்தை மகன் ஆனந்தும் இருப்பது கலிபோர்னியாவில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோ நகரம்.
அமெரிக்காவில் சொந்த பந்தம்னு தலைக் காட்ட இருப்பது இந்த இரு
வீடுகள்தான். அதையும் விட்டா எப்படிங்க? மட்டுமில்லாமல் , என்னுடைய குடும்பத்தை ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்கிறார்கள் என்பது ஒரு ஹைலைட் வேற .
ஆமாம், தாராளமயமாக்கல் எனும் சூறாவளியில் , உலகத்தின் மூலைக்கு
ஒன்றாக வீசி ஏறியப்பட்ட உறவுகள் நாங்கள் .
நான் நினைத்ததுப் போலவே இந்தப் பயணம் மிகச் சிறப்பாகவே அமைந்தது.
இந்தமுறை கலிபோர்னியாவின் நீள அகலத்தை முடித்த வரை நன்றாக அளந்தேன் என்றே சொல்லவேணும். ஆம், ஏறக்குறைய சுமார் ஆயிரம் மைல்கள் காரிலேயே சுற்றினேன்.
கலிபோர்னியா பயணத்தின் வியப்புத் தீருமுன் செய்யும் பதிவு இது.
சமீபத்தில் வெளியான "ஐ" பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட
முன்னாள் ஆணழகன் "அர்னால்டு" இந்த ஊருகாரர்தங்க. அவர் மாகாண கவர்னராக இருந்ததும் கலிபோர்னியா தாங்க.
உலகச் சினிமாவின் கோட்டையான உலகம் போற்றும் ஹாலிவூட் (hollywood) இங்கே தான் இருக்கிறது.
கம்யூட்டர் சுல்தான்களாகிய உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் , கூகுல் போன்ற நிறுவனங்கள் இருக்ககூடிய சிலிக்கான் பள்ளத்தாக்கு கலிபோர்னியாவில் தான் இருக்கிறது.
"சிலிக்கான் பள்ளத்தாக்கு" அமெரிக்காவில் இந்தியர்களின் கோட்டை என்பதும் ஒரு கூடுதல் தகவல். குறிப்பாக தமிழர்களின் கோட்டை என்றால் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு உலகப் புகழ் பெற்ற கலிபோர்னியா அமெரிக்காவின் மிக முக்கியமான மாகாணமும் கூட. அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் பங்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கலிபோர்னியாவின் கிழக்குத் திசையில் நெவாடாவும், அரிசோனா மாநிலங்களும், மேற்கே பசுபிக் கடலும், வடக்குத் திசையில் ஒரிகன் மாநிலமும், தெற்குத் திசையில் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியாவும் உள்ளன (கிழே படத்தில் மஞ்சள் நிறத்தில்).
இம்மாநிலத்தின் கொஞ்சம் வரலாற்றையும் பார்த்து விடலாமே.
1846-1848ல் நடந்த மெக்சிக்கோ அமெரிக்கப் போரில் இப்பகுதியை மெக்சிக்கோவிடம் இருந்து அமெரிக்கா கைப்பற்றியது. பின்பு 1850ல் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக மாறியது.
கலிபோர்னியாவின் மக்கள்தொகை 37 மில்லியன், அமெரிக்காவின் மக்கள்தொகையில் கலிபோர்னியாவுக்கே முதலிடம். அதிகப்படியான மக்கள் இங்கே வாழ பலதரப்பட்ட காரணங்கள் சொல்லலாம்.
முக்கியமாக இங்கே கிடைக்கும் அபரிமிதமான வேலைவாய்ப்ப்பு , ரொம்பக் குளிர் அல்லது வெயில் இல்லாத நல்ல அருமையான தட்பவெட்பம் போன்றவற்றைச் சொல்லலாம்.
கோல்ட் ரஷ் நேரத்தில் கலிபோர்னியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தங்க வயல்கலை நோக்கி மிகப் பெரிய மக்கள் படையெடுப்பு நடைப்பெற்றது. கோல்ட் ரஷ் கலிபோர்னியாவின் வரலாற்றில் நடந்த ஓர் அதி முக்கியமான நிகழ்வு.
கலிபோர்னியா Golden State அல்லது "தங்க மாநிலம்" என்றே சொல்லபடுகிறது.
அதைப் பற்றி நேரம் கிடைக்கும் பட்சத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
அதுபோல கலிபோர்னியாவை உலகின் பிரட் பாஸ்கட் என்று சொல்ல காரணமில்லாமல் இல்லை. பால்,பழம், காய்கறி மற்றும் ஒயின் என உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாகாணம் இது.
கலிபோர்னியா ஓர் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்பம்சமாக இங்கே குளிர், பனி, வெயில் போன்ற சீதொசனம் வருடத்தின் எல்லாக் காலங்களிலும் இருக்கும்.
அதுபோலப் பாலைவனம், மலை ,கடற்கரை மற்றும் சமவெளி என எல்லாவகையான நிலபரப்புகளையும் உள்ளடக்கியது கலிபோர்னியா.
சேக்ரமெண்டோ கலிபோர்னியாவின் தலைநகராக இருந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்கள்.
என்னுடைய பயணத்தின் பெரும்பாலான நேரத்தை வளைகுடாப் பகுதியிலும் தெற்குக் கலிபோர்னியாலும் செலவிட்டேன். வரும் கட்டுரைகளில் அங்கே நான் ரசித்தவைகளை உங்களுடன் பகிர முயற்சிக்கிறேன்.
இங்கே என்னுடைய பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் பிரிப்படுகிறேன்.
கலிபோர்னியா செல்வது எனக்கு இரண்டாவது தடவை. இதற்கு முன்பு அலுவல் நிமித்தமாகக் கடந்த வருடம் சென்றிருந்தேன்.
இந்த முறை பயணத்தின் நோக்கம் ஊரை சுற்றிப் பார்ப்பது, முக்கியமாக அங்கே வசிக்கும் எனது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதும் தான்.
சித்தி மகன் கார்த்திக்கும் , அத்தை மகன் ஆனந்தும் இருப்பது கலிபோர்னியாவில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோ நகரம்.
அமெரிக்காவில் சொந்த பந்தம்னு தலைக் காட்ட இருப்பது இந்த இரு
வீடுகள்தான். அதையும் விட்டா எப்படிங்க? மட்டுமில்லாமல் , என்னுடைய குடும்பத்தை ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்கிறார்கள் என்பது ஒரு ஹைலைட் வேற .
ஆமாம், தாராளமயமாக்கல் எனும் சூறாவளியில் , உலகத்தின் மூலைக்கு
ஒன்றாக வீசி ஏறியப்பட்ட உறவுகள் நாங்கள் .
நான் நினைத்ததுப் போலவே இந்தப் பயணம் மிகச் சிறப்பாகவே அமைந்தது.
இந்தமுறை கலிபோர்னியாவின் நீள அகலத்தை முடித்த வரை நன்றாக அளந்தேன் என்றே சொல்லவேணும். ஆம், ஏறக்குறைய சுமார் ஆயிரம் மைல்கள் காரிலேயே சுற்றினேன்.
கலிபோர்னியா பயணத்தின் வியப்புத் தீருமுன் செய்யும் பதிவு இது.
சமீபத்தில் வெளியான "ஐ" பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட
முன்னாள் ஆணழகன் "அர்னால்டு" இந்த ஊருகாரர்தங்க. அவர் மாகாண கவர்னராக இருந்ததும் கலிபோர்னியா தாங்க.
உலகச் சினிமாவின் கோட்டையான உலகம் போற்றும் ஹாலிவூட் (hollywood) இங்கே தான் இருக்கிறது.
கம்யூட்டர் சுல்தான்களாகிய உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் , கூகுல் போன்ற நிறுவனங்கள் இருக்ககூடிய சிலிக்கான் பள்ளத்தாக்கு கலிபோர்னியாவில் தான் இருக்கிறது.
"சிலிக்கான் பள்ளத்தாக்கு" அமெரிக்காவில் இந்தியர்களின் கோட்டை என்பதும் ஒரு கூடுதல் தகவல். குறிப்பாக தமிழர்களின் கோட்டை என்றால் பொருத்தமாக இருக்கும்.
கோல்டன் கேட் பாலம் இருப்பது இங்கேதான் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு உலகப் புகழ் பெற்ற கலிபோர்னியா அமெரிக்காவின் மிக முக்கியமான மாகாணமும் கூட. அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் பங்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இம்மாநிலத்தின் கொஞ்சம் வரலாற்றையும் பார்த்து விடலாமே.
1846-1848ல் நடந்த மெக்சிக்கோ அமெரிக்கப் போரில் இப்பகுதியை மெக்சிக்கோவிடம் இருந்து அமெரிக்கா கைப்பற்றியது. பின்பு 1850ல் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக மாறியது.
கலிபோர்னியாவின் மக்கள்தொகை 37 மில்லியன், அமெரிக்காவின் மக்கள்தொகையில் கலிபோர்னியாவுக்கே முதலிடம். அதிகப்படியான மக்கள் இங்கே வாழ பலதரப்பட்ட காரணங்கள் சொல்லலாம்.
முக்கியமாக இங்கே கிடைக்கும் அபரிமிதமான வேலைவாய்ப்ப்பு , ரொம்பக் குளிர் அல்லது வெயில் இல்லாத நல்ல அருமையான தட்பவெட்பம் போன்றவற்றைச் சொல்லலாம்.
கோல்ட் ரஷ் நேரத்தில் கலிபோர்னியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தங்க வயல்கலை நோக்கி மிகப் பெரிய மக்கள் படையெடுப்பு நடைப்பெற்றது. கோல்ட் ரஷ் கலிபோர்னியாவின் வரலாற்றில் நடந்த ஓர் அதி முக்கியமான நிகழ்வு.
கலிபோர்னியா Golden State அல்லது "தங்க மாநிலம்" என்றே சொல்லபடுகிறது.
அதைப் பற்றி நேரம் கிடைக்கும் பட்சத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
அதுபோல கலிபோர்னியாவை உலகின் பிரட் பாஸ்கட் என்று சொல்ல காரணமில்லாமல் இல்லை. பால்,பழம், காய்கறி மற்றும் ஒயின் என உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாகாணம் இது.
கலிபோர்னியா ஓர் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்பம்சமாக இங்கே குளிர், பனி, வெயில் போன்ற சீதொசனம் வருடத்தின் எல்லாக் காலங்களிலும் இருக்கும்.
அதுபோலப் பாலைவனம், மலை ,கடற்கரை மற்றும் சமவெளி என எல்லாவகையான நிலபரப்புகளையும் உள்ளடக்கியது கலிபோர்னியா.
சேக்ரமெண்டோ கலிபோர்னியாவின் தலைநகராக இருந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்கள்.
என்னுடைய பயணத்தின் பெரும்பாலான நேரத்தை வளைகுடாப் பகுதியிலும் தெற்குக் கலிபோர்னியாலும் செலவிட்டேன். வரும் கட்டுரைகளில் அங்கே நான் ரசித்தவைகளை உங்களுடன் பகிர முயற்சிக்கிறேன்.
Wednesday, April 1, 2015
இதய நிறுத்தம் - உடனடிச் சிகிச்சை
எதிர்பாராத விதமாக உங்கள் நண்பர் அல்லது பணியிடத்தில் அருகில் இருப்பவர் மயக்கமடைந்து விழுந்து, தன்னுணர்வின்றி செயற்படாத நிலையில் இருந்தால் உடனடியாக நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?
பதற்றத்தில், அக்கம் பக்கம் எவரையாவது துணைக்கு அழைப்பீர்களா ? அப்போது அவரை தனியே விட்டு செல்லலாமா?
அதிகபட்சமாக உங்களிடம் தொலைபேசி இரூக்கும் பட்சத்தில் எண் 108 அல் 911 யை அழைப்பீர்கள். ஆம்புலன்ஸ் வர ஆகும் 15-20 நிமிட அவகாசத்தில் நீங்கள் செய்வது என்னவாயிருக்கும்? அதுவரை அவரை எந்த நிலையில் கிடத்தியிருப்பீர்கள். ? இப்படிப் பல கேள்விகள் எழுவது இயற்கை.
CPR அல்லது மீளவுயிர்ப்பிப்பு எனும் முதல் உதவி சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? நேற்று அலுவலகத்தில் எனக்கு இதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கற்றதில் பெற்றது சில.
நான் மருத்துவ நிபுணர் இல்லை, ஆகவே Wikipediaவின் துணையுடன் சில தகவல்கள்: இங்கே முடித்தவரை டெக்னிக்கல் வார்தைகளை தவிர்த்திருக்கிறேன்.
- Cardiac Arrest(இதய நிறுத்ததை) Heart Attack (மாரடைப்பு) உடன் குழப்பிக் கொள்ளாதீர். இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது.
- மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது.
- இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும். மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதய நிறுத்தம் ஏற்படலாம்.
- குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன், ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது.
- இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை செயலிழந்து இறந்துவிடுகின்றது; இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது.
- CPR (Cardiopulmonary resuscitation) உடன் AED (Automated External Defibrillator) எனும் கருவியையும் இதய நிறுத்தத்திற்கு முதல் உதவிக்காகப் பயன்படுத்தலாம்.
- CPR என்பது மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் கைகளால் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்யும் முறையாகும்.
- AED என்பது ஒரு சிறிய மின்னணு சாதனம். இதயத்துடிப்பை சரியாகக் கண்காணித்து,தேவைப்பட்டால் இதயத்துக்கு மின் அதிர்ச்சி செலுத்தக்கூடியது. அதனால் கையாள்வதில் மிக கவனம் தேவை. AED சாதனத்தை பெரும்பாலும் எல்லா முதல் உதவி பெட்டியூடன் அமேரிக்காவில் வைத்திருக்கிறார்கள்.
என்னுடைய பதிவு ஒரு தகவலுக்காகவே. நீங்கள் எவருக்கேனும் உதவ வேண்டுமெனில் கண்டிப்பாக முறையான பயிற்சி அவசியம்.
அமெரிக்கன் ரெட் க்ராஸ் தேவையான பயிற்சியும் சான்றிதழும் தருகிறார்கள்.
http://www.redcross.org/
முடிந்தால் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கு தெரியும் ஒர் உயிரை காப்பாற்ற கடவுள் உங்களை விதித்திருக்கிறார் என்று. :)
Reference:
http://en.wikipedia.org/wiki/Cardiopulmonary_resuscitation
http://en.wikipedia.org/wiki/Automated_external_defibrillator
Monday, March 23, 2015
தென்றல் வந்து தீண்டும்போது...
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வசந்தகாலத்தை
கொண்டாட குடும்பத்ததோடு சென்று வந்தோம் .
ஏய்! கொஞ்சம் நிறுத்து! நீ என்ன சொல்ல வர ? அப்படின்னு எங்கோ ஒரு குரல் கேட்குதே. அது ஒன்னும் இல்லப்பா, Spring Breakக்கு சான்பிரான்சிஸ்கோ போய்ட்டு வந்தோம் அப்படினு சொல்ல வந்தேன்.. :)
முன்னாடியே, இப்படி விளங்குற மாதிரி தமிழ்ல சொல்லவேண்டியதுதானே ?. சரி இப்போ விசயத்துக்கு வருவோம்.
நினைச்ச மாதிரியே சான்பிரான்சிஸ்கோவில் தென்றல் வீசுகிறது.
நான் சொல்ல வந்தது வசந்தகாலத்தில் வீசும் தென்றல் காற்று
மட்டுமல்ல. சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வெளிவரும்
தமிழ் புத்தகம் "தென்றல்" மாதஇதழ்.
வளைகுடா வாழ் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின்
படைப்புகளைத் தாங்கி வெளியாகிறது தென்றல் இதழ்.
இவ்விதழ் தமிழக, தேசிய மற்றும் அமெரிக்க மாதாந்திர முக்கிய செய்தி நிகழ்வுகளின் தொகுப்பு, கவிதைகள், பழமொழி, குறுக்கெழுத்துப் புதிர், நேர் காணல், கைப்பக்குவம், சிறுகதைகள், குறுந்தொடர்கள், மற்றும் உள்ளூர் மாதாந்திர நிகழ்சிகளின் நிரல் தொகுப்பு போன்ற பகுதிகளை கொண்டிருக்கிறது.
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல .. தெரியாதுங்க, ஆனா இந்த தென்றல் கையில் தவழ்ந்தால் மகிழ்ச்சி தாங்க. என்னதான் கம்ப்யூடர் வந்தாலும், புத்தகத்தை கையில் படித்து படிக்கும் அந்த சுகமே தனிதான்.
இந்த புத்தகம் விலையின்றி கிடைக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இலவசமாக தரப்படும் இந்த புத்தககத்தில் உள்ள படைப்புக்குகளில் கண்டிப்பாக தரத்திற்கு குறைவில்லை. எந்த ஒரு பகுதியையும் சும்மா சொத்தை என ஒதுக்க இயலவில்லை.
உதாரணமாக சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்துவை
பற்றி மார்ச் இதழில் அறிந்து கொள்ளமுடிந்தது. லாஸ் ஏஞ்சலஸ் ராமின் 'கருப்ஸ் பாண்டியன்' சிறுகதையையும் ரசித்தேன்
நாம் ஈசியாக சொல்லி விடுகிறோம் மாதஇதழ் என்று, ஆனால்
மாதம்தோறும் தரமான ஒரு பிரதியை கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. தென்றலுக்கு பின் ஒரு பெரிய குழுவே செயல்படுகிறது போல. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!. மற்ற அமேரிக்க தமிழ் மன்றங்களுக்கும் இந்த புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டி.
இந்தப் புத்தகம் கலிஃபோர்னியா வில் உள்ள இந்திய பலசரக்கு கடைகள்,
சிற்றுண்டியகங்கள், மற்றும் வீடியோ கடைகளில் இலவசமாக கிடைக்கிறது
என நினைக்கிறேன். ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் கண்டிப்பாக கிடைக்கிறது.
அதனால் இதை படிக்கும் நீங்கள், கலிஃபோர்னியா அன்பராய் இருந்தால்
தென்றலை ஒரு விளம்பர தொகுப்பு என உதாசினப்படுத்தாமல்
ஒரு பிரதியை வாங்கி புரட்டிப் பாருங்கள்.
கலிஃபோர்னியா பற்றிய வேற ஒரு பதிவு சூடா தயாராயிக்கொண்ட்டேயிருக்குது. :) அதுவரை காத்திருங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம்!.

Subscribe to:
Posts (Atom)