வழக்கம் போல, 'நீங்க குஜராத்தியா ?' இந்தமுறை அப்படிக் கேட்டவர் ஒரு தென்கொரிய பெண்மணி. நேற்று பூங்காவில் சந்தித்த அந்தப் பெண்மணிக்கு இந்தியாவின் ஆதி முதல் இந்தி (!) வரை தெளிவாக நான் விளக்கி முடித்தபோது லேசாக இருளத் தொடங்கியிருந்தது.
பின்புதான், முறையாக அறிமுகம் செய்து கொண்டோம். பெயர் "நடாஷா" என திருவாய் மலர்ந்தார். இந்தியாவில் கேள்விப்பட்ட பெயராயிருக்கிறதே என விசாரித்தால், அது ரஷ்யப் பெயராம். "கிருஸ்மஸ் அன்று பிறந்த குழந்தை" என அர்த்தமாகிறது.
அப்போது 'அம்மா' என்றபடி ஒரு பெண்குழந்தை ஓடிவந்து அவர் கால்களைக் கட்டிக் கொண்டது. எனக்கு ஆச்சர்யம். கொரிய மொழியிலும் அவர்கள் 'அம்மா (omma) / அப்பா(abba)' என்றே சொல்கிறார்களாம்.
ஒன்று மட்டும் உறுதி. உலகம் முழுக்க பிறக்கும் குழந்தைகளின் முதல் உச்சரிப்பை பெற்றோர்கள் தனதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புலனாகிறது.
இனி நாம் குழந்தைகளுக்கு 'டாடி, மம்மி ' க்கு பதிலாக, மறுபடியும் 'அம்மா, அப்பா' எனச் சொல்லிப் பழக்கலாம். "எனக்கு கொரியமொழியும் தெரியுமாக்கும்" என அவர்கள் காலரை உயர்த்திவிட்டு சுற்ற வசதியாக இருக்குமே. :)
#தமிழ்_கொரியமொழி
வியந்து போனேன் நண்பரே
ReplyDeleteஆகா...! மகிழ்ச்சி...
ReplyDeleteI have seen many korean dramas, it is when i noticed some similarities between tamil and korean words. I like korean language very much .
ReplyDeleteInteresting observation. Looks like more than 500 tamil words are there with the same meaning.
Delete