எனது "வனநாயகன்-மலேசிய நாட்கள்" ஐ நண்பர் கரந்தை ஜெயக்குமார் ஐயா தனது வலைப்பூவில் அறிமுகம் செய்திருக்கிறார்.
கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எனக்கு பதிவுலகில் அறிமுகமானவர். சோழமண்டலத்துக்காரர் (தஞ்சாவூர்).
கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுவிட்ட எண்ணற்ற ஆளுமைகளைப் பற்றி எழுதி மீண்டும் நம் உள்ளங்களில் இடம்பிடிக்கச்செய்யும் முயற்சிகளை இடையறாது செய்துவருபவர். அதுகுறித்து 300க்கும் அதிகமான பதிவுகளை எழுதி பதிவுலகில் தனக்கென பரந்த வாசகர் வட்டத்தை உடையவர்.
அவர் சிறப்பாய் தமிழ் எழுதும் கணித ஆசிரியர் என்ற வகையிலும்
வனநாயகன்-மலேசிய நாட்கள் புதினம் (நாவல்) குறித்த அவருடைய அறிமுகம் இதோ
http://karanthaijayakumar.blogspot.com/2017/04/blog-post_18.html
வனநாயகனுக்கு புதிய வாசகர் வட்டத்தின் அறிமுகம்
கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி.
தொடக்கம் முதலாக எனது எழுத்தை தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிரம்பிய நன்றிகள்!!.
வாழ்த்துகள்...
ReplyDeleteவருகைக்கு நன்றி!!
Delete