கதைக் களம் அவர் பிறந்த டிரினிடாட் (Trinidad). அங்கே ஒரு பிராமணக் குடும்பத்தில் கையில் ஆறு விரல்களுடன், மாலை சுற்றிப் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையைத் துரதிஷ்டம் பிடித்தவன் என ஒதுக்குகிறார்கள். அவனால் அவனுடைய அப்பா, அம்மா உயிருக்கு ஆபத்து வரும் என அஞ்சி வெறுக்கிறார்கள். சந்தர்பத்தால் அது அவனுடைய அப்பா விசயத்தில் உண்மை ஆகியும் விடுகிறது. இப்படி விதிவசத்தால் குடும்பத்தால், சமூகத்தால் மூச்சுமுட்ட அழுத்தப்படும் ஒருவன் தட்டுத்தடுமாறி மேலுழும்பி வருவதுதான் கதை.
1961ல் எழுதப்பட்ட இந்தக்கதை நைப்பாலின் தந்தையின் வாழ்க்கைப் பின்னனியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் வழியாக
காலனித்துவ நாடுகளில் இந்தியச் சமூகங்களின் வாழ்வியல் நிலைபாடுகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியதோடு, அந்தகால இந்திய டிரினிடாட் வம்சாவளியினரின் வாழ்வியலையும் இதில் பதிவுசெய்திருக்கிறார்.
டைம் பத்திரிக்கை 1923 முதல் 2005 வரையான சிறந்த ஆங்கில புதினங்களில்
("TIME 100 Best English-language Novels from 1923 to 2005") ஒன்றாக 'A House for Mr Biswas ' தேர்வு செய்திருக்கிறது.
நிதானமாகவும், நுணுக்கமாகவும் கதைசொல்லும் இவருடைய எழுத்து
நம்மூர் கரிசல் மன்னன் கீராவை (கி.ராஜநாராயணன்) எனக்கு நினைவூட்டியது. அந்த வகையில் கீரா சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மகா கலைஞன். கொண்டாடப்படவேண்டியவர்.
நைப்பால் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவரைப் போல மேற்குநாடுகளுக்கு எழுதுபவர்கள் எளிதாக கண்டுகொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய நல்ல எழுத்துகள் அடையாளம் காணப்படுகின்றன. ஆனால், நம்மூடை மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்குக் கூட உலக அங்கீகாரம் என்பது இன்னமும் கானல்நீராக தொடர்வது அவலம்.
#AHouse_forMrBiswas
தமிழில் இதுபோல் யூ மா வாசுகி அவர்களின் ரத்த உறவு நாவல் பேசப்பட்டது ஞாபகம் வருகிறது,
ReplyDeleteவருகைக்கு நன்றி, நலமா நண்பரே ?
DeleteGood book. I remember writing once a review about that book. Good one.
ReplyDelete