நேற்று தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் பற்றிய கட்டுரையை "தமிழாற்றுப்படை" எனும் தலைப்பில் வைரமுத்து வாசிக்கும் காணொலியைப் பார்த்தேன்.
இன்றைய இளைய தலைமுறையை தமிழை நோக்கி ஆற்றுப்படுத்த (வழிச்செலுத்த) தமிழாற்றுப்படை எனும் தலைப்பைத் தேர்ந்தேடுத்ததாக குறிப்பிட்டு பேச்சைத் தொடங்குகிறார்.
பேச்சில் தாய்மொழியின் முக்கியத்துவம், இன்றைய அன்றாட வாழ்வில் தமிழ், அது முன்னிலைப் படுத்தப்படவேண்டியதன் தேவை, உலகமயமான இன்றையச் சூழலில் முன்பு எப்போது இல்லாத வகையில் அச்சுறுத்தப்படுத்தப்படும் பிராந்தியமொழிகள் என பல விசயங்களைத் தொட்டிருக்கிறார். பேச்சில் ஆதித்தமிழன் பிறந்த இடம் லெமோரியாக் கண்டம் எனும் விவாதத்துக்குரிய விசயத்தையும் தொட்டிருக்கிறார்.
இது வைரமுத்துவின் கவித்துவமான மேடைப் பேச்சு என்பதைத் தாண்டி "தமிழ் எங்கள் அதிகாரம்!, தமிழ் எங்கள் உரிமை!" என முழங்கும் உணர்ச்சிகரமான பேச்சு. 45 நிமிடங்கள் நீடிக்கும் உரையை நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
காணொலி
https://www.youtube.com/watch?v=tlbcznLzaNw
முழுமையான கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.
http://tamil.thehindu.com/opinion/columns/article22748491.ece
No comments:
Post a Comment