வாலி- இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நேற்று பார்த்தேன். வாலி வழக்கமான ஓர் இளைஞனுக்கான உற்சாகத்தோடும் இயல்பான நகைச்சுவையுடனும் பேசினார்.
அதில், கேட்கப்பட்ட முக்கியமான ஒரு கேள்வி - "சினிமாவில் பாடல் எழுதி மன நிறைவு அடையாமல் தான் வெளியில் புத்தகங்கள் எழுதுகிறீர்களா ? "
அதை இல்லை எனக் கண்டிப்பாக மறுத்தவர், தான் சினிமாவுக்குத் தமிழ் வளர்க்க வரவில்லை என்றவர் சற்று இடைவெளி விட்டு 'தமிழ் என்ன தாடியா, வளர்க்க ?' எனக் கேட்டு குறும்பாகச் சிரித்தார்.
அதை இல்லை எனக் கண்டிப்பாக மறுத்தவர், தான் சினிமாவுக்குத் தமிழ் வளர்க்க வரவில்லை என்றவர் சற்று இடைவெளி விட்டு 'தமிழ் என்ன தாடியா, வளர்க்க ?' எனக் கேட்டு குறும்பாகச் சிரித்தார்.
அதைத் தொடர்ந்து பேசியவர் தான் ஒரு சினிமா கவிஞராக மட்டும் மக்கள் நினைவில் வைத்திருப்பதை விரும்பவில்லை என்றும் தானும் கண்ணதாசன் போல ஓர் இலக்கியவாதியாகவும் அறியப்பட வேண்டும் என விரும்புவதாகச் சொன்னார்.
அதாவது, திரைத்துறையைத் தாண்டி வெளியில் இலக்கியம் எழுதினால் தான் நல்ல பெயர் வரும். இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஓர்
அந்தஸ்து பெற முடியும். அதைப் பெறத்தான் தான் புத்தகங்கள் எழுதுவதாக வெளிப்படையாகச் சொன்னார்.
அந்தஸ்து பெற முடியும். அதைப் பெறத்தான் தான் புத்தகங்கள் எழுதுவதாக வெளிப்படையாகச் சொன்னார்.
உண்மையில் தமிழில் இலக்கியவாதிகள் என அறியப்படும் கூட்டம் மிகச் சிறியது. அதுவும் யாராலும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத ஒன்று என்பார்கள். ஆனால், அதில் இணைய வாலி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களே பிரயத்தனப்பட்டிருப்பது வியப்பே.
யூ-டியூப் இணைப்பு
இணைப்பிற்கு செல்கிறேன்...
ReplyDelete