A decade ago, a story crossed borders and found its place in the hearts of tamil readers.
Thursday, March 26, 2026
Wednesday, March 25, 2026
10-ஆம் ஆண்டில் வனநாயகன் (மலேசிய நாட்கள்)
சிங்கப்பூர் வாழ் நண்பர் சதீஷ் முத்து கோபல் எனது வனநாயகன் நாவல் குறித்து பகிர்ந்த வாசக அனுபவத்தை மீண்டும் நேற்று ஒருமுறை வாசித்தேன்.
இப்படி 2016 டிசம்பரில் வெளியான இந்த நாவலைக் கடந்த 10 ஆண்டுகளாக வாசக நண்பர்கள் மறந்து விடாமல் தொடர்ச்சியாக வாசித்து அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாசிப்போடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசக அனுபங்களையும் அவர்கள் பகிர்வது வெகு அபூர்வம். அதுவும் தமிழ் எழுத்துலகில் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்றவர்களுக்குச் சாதாரணமான காரியமில்லை.
அது மட்டுமின்றி, வெளிநாடோ அல்லது உள்நாடோ, வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாமல், எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். அப்படி மலேசிய நாட்டின் பின்புலத்தில் நான் எழுதிய இரண்டாவது படைப்பு "வனநாயகன் (மலேசிய நாட்கள்)".
சதீஸின் இணைப்பு கீழே..
https://www.writersatheesh.com/2024/08/blog-post_10.html
Sunday, March 1, 2026
AI (செயற்கை நுண்ணறிவு) - எழுத்தாளர் சுஜாதா பார்வையில்
எழுத்தாளர் சுஜாதா பார்வையில் ஏஐ தொழில்நுட்பம்.
சமீபத்தில் சிலிக்கான் சில்லுகளுக்குள் ஒரு குட்டி மூளை குடியேறியிருக்கிறது; ஆமாம் நண்பர்களே அதற்குப் பெயர் Artificial Intelligence இல்லை செயற்கை நுண்ணறிவு. நீங்கள் ஒரு கவிதை கேட்டால், கம்பனையும் ஷெல்லியையும் கலந்து ஒரு நொடியில் துப்பிவிட்டு அடுத்த வேலைக்குப் போகிறது.
"கணேஷ், ஏஐ-க்கு இதயம் இருக்கா?" என்று கேட்டால், "லாஜிக் தான் இதோட இதயம் வசந்த்" என்பான் கணேஷ். ஆமாம், தகவல்கள் தான் அதன் ரத்தம்; அல்காரிதம்கள் தான் அதன் நரம்பு மண்டலம்.
உங்கள் ரசனையை, உங்களை விட ஒரு மென்பொருள் துல்லியமாகத் தீர்மானிப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது மனிதனை விஞ்சுவதல்ல, மனிதனின் நீட்சி; ஒரு டிஜிட்டல் ஊன்றுகோல் என்பேன்.
“நீண்ட அலகு நாரை


